# TNPSC Group Exam - Economics | காசோலைகளின் வகைப்பாடு

காசோலை என்பது, வங்கியில் இருந்து ஒரு தனி நபருக்கோ ஒரு நிறுவனத்திற்கோ ரொக்கப் பணத்தைச் செலுத்துவதற்கு, கணக்கு வைத்திருப்பவர் மூலம் வழங்கப்படும் ஒரு கட்டண கருவியாகும். தவிர, காசோலை மூலம் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்க்கிக்கு பணத்தைப் பரிமாற்றம் செய்யலாம். நம் அன்றாட செலவுகளைப் பணத்திற்குப் பதிலாக காசோலை மூலம் செய்து கொள்ளலாம். காசோலை என்பது ஒரு முக்கியமான செலாவணி. காசோலையின் மூலம், அதிகளவு தொகையை எளிமையாகக் கையாளலாம்.
ஒரு காசோலையில் இடம்பெற வேண்டிய முக்கியமான தகவல்கள்:

1.   ஒரு காசோலை குறிப்பிட்ட வங்கி மீது மட்டுமே வரையப்பட வேண்டும். (Drawee)

2.   காசோலையில் கொடுப்பவர் அதாவது விநியோகிப்பவரின் கையெழுத்து நிச்சயமாக இடம்பெற  வேண்டும். (Drawer)

3.   காசோலையில் பணம் பெறுபவரின் பெயர் இடம்பெற வேண்டும். (Payee)

4.   காசோலையில் எவ்வளவு பணம் என்பதை வார்த்தைகளில் கண்டிப்பாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்

5.   காசோலையில் கண்டிப்பாக தேதி குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும்.

பணம் செலுத்த மிகவும் பாதுகாப்பான முறைகளில் ஒன்றுதான், காசோலை. காரணம், ஒவ்வொரு காசோலை பரிமாற்றமும் வங்கிகளில் பதிவு செய்யப்படுகிறது. நமக்குத் தேவைப்பட்டால் காசோலை விவரங்களை எப்போது வேண்டுமானாலும் அறிந்து கொள்ளலாம்.


இடத்தை மையப்படுத்தி காசோலைகள் மூன்றாகப் பிரிக்கப்படுகின்றன.

1.   உள்ளூர் காசோலை (Local cheque):
பணம் பெறுபவர் வசிக்கும் அதே ஊரிலுள்ள வங்கியில் காசோலை வழங்கப்பட்டால், அது உள்ளூர் காசோலை எனப்படும்.

2.   வெளியூர் காசோலை (Outstation cheque):
ஒரு குறிப்பிட்ட நகரின் உள்ளூர் காசோலை, பிற இடங்களில் வழங்கப்படுகிறது என்றால் அது வெளியூர் காசோலை எனப்படும். இந்த காசோலைகளைப் பயன்படுத்துவது மூலம், வங்கிகள் நம்மிடம் இருந்து நிலையான கட்டணங்களை வசூலிக்கலாம்.

3.   சம காசோலை (At Par cheque):
இது நாடு முழுவதும் ஒரு வங்கியின் அனைத்து கிளைகளிலும் இணையாக ஏற்கப்படுகின்ற ஒரு காசோலை. உள்ளூர் காசோலை போல கூடுதல் வங்கிக் கட்டணங்களை ஈர்க்காமல் நாடு முழுவதும் இந்த காசோலை ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

மதிப்பின் அடிப்படையில் காசோலைகளின் வகைப்பாடு.

1.   சாதாரண மதிப்புடைய காசோலைகள் (Normal Value Cheque):
ரூ. 1 லட்சத்திற்கும் கீழ் மதிப்புடைய காசோலைகள் சாதாரண மதிப்புடைய காசோலை எனப்படும்.

2.   உயர் மதிப்புடைய காசோலைகள் (High value cheque):
ரூ. 1 லட்சத்தை விட அதிகளவு மதிப்புடைய காசோலைகள் உயர் மதிப்பு காசோலைகள் எனப்படும்.

3.   பரிசு காசோலைகள் (Gift Cheque):
அன்பிற்குரியவர்களுக்கு பரிசாகக் கொடுக்கும் காசோலைகள் பரிசு காசோலைகள் எனப்படும்.

read more...


No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற