நோபல் பரிசுகள் 2011

மருத்துவம்: 
மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த புரூஸ் பிïட்லர், லக்சம்பர்க்கை சேர்ந்த ஜுல்ஸ் ஹாப்மன், கனடாவைச் சேர்ந்த ரால்ப் ஸ்டீன்மனுக்கு கிடைத்துள்ளது. இவர்களில், ரால்ப் ஸ்டீன்மன் ஏற்கனவே இறந்துவிட்டார்.

இயற்பியல்: 
பிரபஞ்சம் விரிவடைவது தொடர்பான கண்டுபிடிப்பை நிகழ்த்திய சால் பெர்ல்முட்டர், பிரையன் ஸ்கிமிட், ஆடம் ரைசஸ் ஆகிய 3 அமெரிக்க விஞ்ஞானிகள், இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பெறுகின்றனர்.

வேதியியல்: 
வேதியியல் துறைக்கான நோபல் பரிசுக்கு இஸ்ரேலைச் சேர்ந்த விஞ்ஞானி டேனியல் செச்சட்மேன் தேர்வு செய்யப்பட்டார். அணுத்துகள்களை ஒன்று சேர்த்து ஒரே திடப்பொருளாக மாற்றுவதற்கான வழிவகைகளைக் கண்டறிந்ததற்காக இவருக்கு விருது கிடைத்தது.
-->
இலக்கியம்: 
இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு சுவீடன் நாட்டுக் கவிஞர் டோமாஸ் டிரான்ஸ்ட்ரோமர் தேர்வு செய்யப்பட்டார்.

அமைதி: 
அமைதிக்கான நோபல் பரிசு, பெண்களின் உரிமைக்காகப் போராடிய லைபீரீயா நாட்டின் பெண் ஜனாதிபதி எல்லின் ஜான்சன் சர்லீப், அதே நாட்டைச் சேர்ந்த லேமாக் கோவீ, ஏமன் நாட்டைச் சேர்ந்த 32 வயது தவாகுல் கர்மான் ஆகிய 3 பெண்களுக்கு வழங்கப்படு கிறது.

பொருளாதாரம்: 
நவீன பெரும் பொருளாதாரம் பற்றிய ஆய்வுக்காக அமெரிக்காவின் கிறிஸ்டோபர் சிம்ஸ், தாமஸ் சார்ஜென்ட் ஆகிய இருவர் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெறுகின்றனர்.

மேலும் விரிவாக படிக்க...

நோபல் பரிசு 2011 : வேதியியல்

1 comment :

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற