அக்டோபர் 2011 முக்கிய நிகழ்வுகள்

* கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திய அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் தனது 56-வது வயதில் புற்றுநோய்க்குப் பலியானார். (அக்டோபர் 6)

* மாணவர்களுக்கான ரூ. 2,276 விலையுள்ள மலிவுவிலை கம்ப்ட்டரை டெல்லியில் மத்திய மனிதவளத் துறை மந்திரி கபில்சிபல் அறிமுகப்படுத்தினார். (அக்டோபர் 6)


* டெல்லி ஐகோர்ட்டு வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்ட, வங்காளதேச யுனானி மருத்துவக் கல்லூரியில் படிக்கும் காஷ்மீரி மாணவர் வாசிம் அக்ரமை அந்நாட்டு போலீசார் கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைத்தனர். (அக்டோபர் 7)

அஜர்பைஜானின் பாகுவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டைப் போட்டியின் அரையிறுதியில் தோல்வி அடைந்த இந்திய விகாஸ் கிருஷ்ணனுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. (அக்டோபர் 7)

நோபல் பரிசுகள் 2011

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டன.

மருத்துவம்: மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த புரூஸ் பிïட்லர், லக்சம்பர்க்கை சேர்ந்த ஜுல்ஸ் ஹாப்மன், கனடாவைச் சேர்ந்த ரால்ப் ஸ்டீன்மனுக்கு கிடைத்துள்ளது. இவர்களில், ரால்ப் ஸ்டீன்மன் ஏற்கனவே இறந்துவிட்டார்.

இயற்பியல்: பிரபஞ்சம் விரிவடைவது தொடர்பான கண்டுபிடிப்பை நிகழ்த்திய சால் பெர்ல்முட்டர், பிரையன் ஸ்கிமிட், ஆடம் ரைசஸ் ஆகிய 3 அமெரிக்க விஞ்ஞானிகள், இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பெறுகின்றனர்.

வேதியியல்: வேதியியல் துறைக்கான நோபல் பரிசுக்கு இஸ்ரேலைச் சேர்ந்த விஞ்ஞானி டேனியல் செச்சட்மேன் தேர்வு செய்யப்பட்டார். அணுத்துகள்களை ஒன்று சேர்த்து ஒரே திடப்பொருளாக மாற்றுவதற்கான வழிவகைகளைக் கண்டறிந்ததற்காக இவருக்கு விருது கிடைத்தது.
-->

இலக்கியம்: இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு சுவீடன் நாட்டுக் கவிஞர் டோமாஸ் டிரான்ஸ்ட்ரோமர் தேர்வு செய்யப்பட்டார்.

அமைதி: அமைதிக்கான நோபல் பரிசு, பெண்களின் உரிமைக்காகப் போராடிய லைபீரீயா நாட்டின் பெண் ஜனாதிபதி எல்லின் ஜான்சன் சர்லீப், அதே நாட்டைச் சேர்ந்த லேமாக் கோவீ, ஏமன் நாட்டைச் சேர்ந்த 32 வயது தவாகுல் கர்மான் ஆகிய 3 பெண்களுக்கு வழங்கப்படு கிறது.

பொருளாதாரம்: நவீன பெரும் பொருளாதாரம் பற்றிய ஆய்வுக்காக அமெரிக்காவின் கிறிஸ்டோபர் சிம்ஸ், தாமஸ் சார்ஜென்ட் ஆகிய இருவர் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெறுகின்றனர். 

* மும்பை தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசாப், தூக்குதண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ததைத் தொடர்ந்து அவனுக்குத் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. (அக்டோபர் 10)

* கொழும்பில் இலங்கை அதிபர் ராஜபக்சேயை சந்தித்துப் பேசிய இந்திய வெளியுறவுச் செயலாளர் ரஞ்சன் மத்தாய், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் பற்றிய பிரச்சினையை எழுப்பினார். (அக்டோபர் 10)

* தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தேவையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. (அக்டோபர் 11)

* சென்னை அருகே ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து 4 செயற்கைக்கோள்களுடன் `பி.எஸ்.எல்.வி. சி-18' ராக்கெட் வெற்றி கரமாக விண்ணில் ஏவப்பட்டது. (அக்டோபர் 12)

* இந்தியாவில் மேலும் ஓரிடத்தில் ரூ. 1000 கோடி செலவில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும் என்று `இஸ்ரோ' தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். (அக்டோபர் 12)

* பூடான் மன்னர் ஜிக்மே நாம்கியால் வாஞ்சுக், தனது காதலி ஜாட்சன் பெமாவை திருமணம் செய்துகொண்டார். (அக்டோபர் 13)

* சென்னையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் செல்லமுத்து மற்றும் உறுப்பினர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை நடத்தினர். அரசுப் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்ததில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது. (அக்டோபர் 14)

* நில முறைகேடு வழக்கில் லோக் அயுக்தா சிறப்பு கோர்ட்டில் சரண் அடைந்த கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடிïரப்பா, நீதிபதி உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார். (அக்டோபர் 15)

* திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் பொற்குவியலை மதிப்பிடும் பணி அடுத்த மாதம் 9-ம் தேதி தொடங்கப்படும் என நிபுணர்கள் குழுத் தலைவர் ஆனந்தபோஸ் கூறினார். (அக்டோபர் 15) 

* தமிழ்நாட்டில் முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக நடந்தது. 75 சதவீத வாக்குகள் பதிவாகின. (அக்டோபர் 16)

* தென்ஆப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் நடைபெறும் இந்தியா, பிரேசில், தென்ஆப்பிரிக்கா ஆகிய 3 நாடுகளின் 5-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக 3 நாள் சுற்றுப் பயணமாக டெல்லியில் இருந்து பிரதமர் மன்மோகன்சிங் புறப்பட்டுச் சென்றார். (அக்டோபர் 17)

* அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கட்டண கமிட்டி தலைவர் நீதிபதி சிங்காரவேலுவிடம் பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். (அக்டோபர் 18)

* காங்கிரசுக்கு எதிரான பிரசாரத்தால் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து அன்னா ஹசாரே குழுவில் இருந்து பி.வி. ராஜகோபால், ராஜீந்தர்சிங் ஆகிய 2 உறுப்பினர்கள் விலகினர். (அக்டோபர் 18)

* தமிழ்நாட்டில் 2-வது கட்ட உள்ளாட்சித் தேர்தலில் 81 சதவீத வாக்குகள் பதிவாகின. (அக்டோபர் 19)

* சொந்த ஊரில் பதுங்கு குழிக்குள் பதுங்கியிருந்த லிபியா முன்னாள் அதிபர் கடாபியை புரட்சிப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். (அக்டோபர் 20)

* திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மு. பரஞ்சோதி வெற்றி பெற்றார். பரஞ்சோதி 69,029 வாக்குகளும், தி.மு.க. வேட்பாளர் கே.என். நேரு 54,345 வாக்குகளும் பெற்றனர். (அக்டோபர் 20)

* தென்னிந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் மெட்ரோ ரெயில் ஓடத் தொடங்கியது. மத்திய மந்திரி கமல்நாத் கொடி அசைத்துத் தொடங்கிவைத்தார். (அக்டோபர் 20)

* காங்கிரஸ் அல்லாத மாநில அரசுகளிடம் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்வதாகவும், மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிக்க முயற்சிப்பதாகவும் டெல்லியில் நடந்த 12-வது ஐந்தாண்டுத் திட்டம் குறித்த முதல்-மந்திரிகள் மாநாட்டில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டினார். (அக்டோபர் 22)

துருக்கி நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தில் ஆயிரம் பேர் பலியானார்கள். ஏராளமானவர்கள் காயமடைந்தனர். (அக்டோபர் 23)

* விடுதலைப்புலிகள் அமைப்பு தீவிரவாத இயக்கம் அல்ல என்று நெதர்லாந்து கோர்ட்டு தீர்ப்பளித்தது. (அக்டோபர் 23)

* மேற்கு வங்காளத்தில் மரப் பாலம் உடைந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்தது. 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்றனர். (அக்டோபர் 23)

* திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் பரஞ்சோதி எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார். அவருக்கு சபாநாயகர் டி. ஜெயக் குமார் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். (அக் டோபர்24)

* முதல்- அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் சென்னை மேயராக சைதை துரைசாமி பதவியேற்றார். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் பதவியேற்றனர். (அக்டோபர் 25)

* கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் இலங்கை அரசுக்கு எதிராக போர்க் குற்ற வழக்குத் தொடரப்பட்டது. (அக்டோபர் 25)
* உலகின் மக்கள்தொகை 700 கோடியாக உயர்ந்தது.

* 700 கோடியாவது குழந்தை, உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்னோவின் புறநகர்ப் பகுதியில் உள்ள தனூர் கிராமத்தில் பிறந்தது. அந்த அழகிய பெண் குழந்தைக்கு `நர்கீஸ்' என்று பெயர் சூட்டப்பட்டது.

* இதற்கிடையே, 700 கோடியாவது குழந்தை தங்கள் நாட்டில்தான் பிறந்திருக்கிறது என்று ரஷியாவும், பிலிப்பைன்ஸும் அறிவித்தன.
-->

* உலக அளவில் 133 கோடி மக்கள்தொகையைக் கொண்ட சீனா முதலிடத்திலும், 110 கோடி மக்கள்தொகையைக் கொண்ட இந்தியா இரண்டாவது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றன. (அக்டோபர் 31)

* தமிழகத்தின் 10 மாநகராட்சிகளிலும் துணை மேயர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். சென்னை மாநகராட்சித் துணை மேயராக பெஞ்சமின் பதவி யேற்றார். (அக்டோபர் 29)

* அருணாச்சலப் பிரதேச மாநில காங்கிரஸ் முதல்-மந்திரி ஜர்போம் காம்லின் ராஜினாமா செய்தார். (அக்டோபர் 29)

* அடுத்த இரண்டு ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியில் சீனாவை இந்தியா விஞ்சும் என எர்னஸ்ட் அண்ட் யங் என்ற சர்வதேச ஆலோசனை நிறுவனம் தெரிவித்தது. (அக்டோபர் 24)

* முக்கியக் கடன்களுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி மேலும் 0.25 சதவீதம் உயர்த்தியது.

* உலகிலேயே மிகப் பெரும் பணக்கார இந்தியர் என்ற இடத்தை முகேஷ் அம்பானி இந்த ஆண்டும் தக்கவைத்துக் கொண்டார். அவரது சொத்து மதிப்பு ரூ. 1 லட்சத்து 13 ஆயிரம் கோடி. (அக்டோபர் 27)

* இந்தியாவில் முதல்முறையாக `பார்முலா 1' கார் பந்தயம் நடைபெற்றது. டெல்லி அருகே நொய்டாவில் புதிதாக அமைக்கப்பட்ட பந்தய தடத்தில் நடத்தப்பட்ட இப்போட்டியில் ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் வெற்றி பெற்றார். (அக்டோபர் 30)  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற