உவமையால் விளங்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவது போல - அறிவற்ற தன்மை
நீர்க்குமிழி அன்ன வாழ்க்கை போல - நிலையாமை
காராண்மை போல ஒழுகுதல் - வள்ளல் தன்மை
நிலத்தறைந்தான் கை பிழையாதற்று - துன்பம்
விழலுக்கு இறைத்த நீர் போல - பயனற்றது
புதையல் காத்த பூதம் போல - பயனின்மை
தாமரை இலை தண்ணீர் போல - பற்றற்றது
பால்மனம் மாறா குழந்தை போல - வெகுளி
கடல் மடை திறந்த வெள்ளம் போல - விரைவாக வெளியேறுதல்
உடுக்கை இழந்தவன் கைபோல - நட்பு
இடியோசை கேட்ட நாகம் போல - அச்சம், மிரட்சி
புலி சேர்ந்து போகிய கல்லனை போல - வயிறு
சிப்பிக்குள் முத்து போல - மேன்மை
உமிகுற்றி கை வருந்தல் போல - பயனற்ற சொல்
நீரும் நெருப்பும் போல - விலகுதல்
வெள்ளத்தனைய மலர் நீட்டம் - முயற்சிக்கேற்ற பலன்
எட்டாப்பழம் புளித்தது போல - விலகுதல்
கடன்பட்டவர் நெஞ்சம் போல - வேதனை
நவில்தோறும் நூல் நயம்போல - பண்பாளரின் தொகுப்பு
உடுக்கை இழந்தவன் கை போல - நட்பு
அன்றளர்ந்த தாமரை போல - சிரித்த முகம்
பகலவனைக் கண்ட பனி போல - நீங்குதல்
குன்றேறி யானை போர் கண்டது போல - செல்வத்தின் சிறப்பு
கனியிருப்ப காய்கவர்ந்தற்று - இன்னா சொல்
உள்ளங்கை நெல்லிக்கனி போல - தெளிவு
பகலவனை கண்ட பனிபோல - துன்பம் நீங்கிற்று
சிறுதுளி பெரு வெள்ளம் - சேமிப்பு
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் - பாசம், பந்தம்
நகமும் சதையும் போல - ஒற்றுமை
நீர் மேல் எழுத்து போல - நிலையற்ற தன்மை
கண்ணைக் காக்கும் இமை போல - பாதுகாப்பு
அடியற்ற மரம் போல - வீழ்ச்சி
செல்லரித்த நூலை போல - பயனின்மை
வேலியே பயிரை மேய்ந்தது போல - நம்பிக்கை துரோகம்
கிணற்றுத் தவளை போல - அறியாமை
செவிடன் காதில் ஊதிய சங்கு போல - பயனற்றது
அச்சில் வார்த்தாற் போல - உண்மைத் தன்மை
ஊமை கண்ட கனவு போல - இயலாமை
மதில் மேல் பூனை போல - முடிவெடுக்காத நிலை
பசுத்தோல் போர்த்திய புலி - வஞ்சகம்
குரங்கு கையில் பூமாலை போல - பயனற்றது
நீறு பூத்த நெருப்பு போல - பொய்த்தோற்றம்
இலைமறை காளிணி போல - மறைபொருள்
அத்தி பூத்தாற்போல - எப்பொழுதாவது
பசுமரத்தாணி போல - ஆழமாக பதித்தல்
நாய் பெற்ற தெங்கப்பழம் - அனுபவிக்க தெரியாமை
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல - துன்பத்தை
மழை காணா பயிர் போல - வாட்டம் அதிகப்படுத்துதல்
திருடனுக்கு தேள் கொட்டியது போல - தவிப்பு

அகலக்கால் வைத்தல் – சக்திக்கு மீறிப் போதல்(Attempt something beyond one’s ability)
நகைத்தொழிலைச் சிறப்பாக நடத்த முடியாத போது, துணிக்கடைத் தொழிலையும் தொடங்கி அகலக்கால் வைத்ததால் இரண்டு தொழிலிலும் நஷ்டமடைந்தான்
அம்பலப்படுத்துதல் – பலரும் அறியச் செய்தல் (To make known a secret)
அகிலனுக்கு மட்டுமே தெரிந்த கமலாவின் காதல் செய்தியை, தன் வகுப்பில் அனைவருக்கும் தெரியும்படிஅம்பலப்படுத்தினான்.
அமளி துமளி – கூச்சலோடு கூடிய குழப்பம் ( State of chaos and disorder)
ஒரு இனத்தினரைப் பற்றி இழிவாகப் பேசியதால், அங்கிருந்த கூட்டத்தினரையிடையே அமளிதுமளி ஆனது.
அலைக்கழித்தல் – அலைத்து வருத்துதல் / இழுக்கடித்தல் ( To cause distress).
வாங்கியக் கடனை இன்று தருகிறேன் நாளை தருகிறேன் எனக் கடன்காரனை அலைக்கழித்தான்.
ஆட்டங்காணுதல் – வலுவற்ற / உறுதியற்ற நிலை (To be in a shaky or weak position)
நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் போது, தங்கள் சொந்தக் கட்சிக்காரர்களின் ஆதரவு இல்லாததால், அவர்தம் ஆட்சிஆட்டம் கண்டது.
ஆலாப்பறத்தல் – தேடி அலைதல் (vagrancy for something).
தாய்ப்பறவை வர நெடுநேரமானதால் பறவைக் குஞ்சுகள் பசியால் உணவுக்காக ஆலாப் பறந்தன.

ஆழம் பார்த்தல் – ஒருவரின் உண்மை நிலையை அறிதல (To know the debth).
கொலைநடந்த நேரம் நீ எங்கிருந்தாய்? என்று வாதியைப் பார்த்து கேட்டு, அவனுக்கும் கொலைக்கும் சம்பந்தம் இருக்குமா? என வழக்கறிஞர் ஆழம் பார்த்தார்.
ஈடுகொடுத்தல் – சரிக்குச்சமம் / சமாளித்தல் ( Match up to)மென்செஸ்டர் கால்பந்து அணி லீவர்பூல் கால்பந்து அணியின் சிறப்பான ஆட்டத்திற்கு முன் ஈடுகொடுத்துவிளையாட முடியாமல் திணறியது.
ஈரமின்றி – இரக்கமில்லாமல் ( Without mercy) .
தீவிரவாதிகள் குழந்தைகள் முதியவர்கள் என்றும் பாராமல் நெஞ்சில் ஈரமின்றிச் சுட்டுக்கொன்றனர்.
உப்புச்சப்பின்றி – ஆர்வமூட்டாத ( Uninteresting).
கவிஞர் பேசிய பேச்சு கேட்பதற்கு இனிமையில்லாமல்உப்புச் சப்பின்றி இருந்தது.
உருக்குலைதல் – வடிவம் சிதைதல் / உடல் மெலிதல் (Deform, disfigure)
தன் தாயின் பிரிவை எண்ணி எண்ணி, வேதனையுற்று உருக்குலைந்து போனான்.
ஊருக்கு உபதேசம் – தான் கடைப்பிடிக்காமல் பிறருக்கு மட்டும் வழங்கும் அறிவுரை ( Preaching to others without practicing it)
புகைப்பிடித்தால் உடலுக்குத் தீங்கு என்று ஊருக்கு உபதேசம் செய்துவிட்டு, தான் யாருக்கும் தெரியாமல் புகைப்பிடித்தல் எந்தவிதத்தில் நியாயம்?
எதிர் நீச்சல் – எதிர்த்துப் போராடுதல் / வால்களைச் சமாளித்து முன்னேறுதல் ( To go against all odds / to brave adversities).
வாழ்க்கையில் எத்தனைத் தோல்விகள் வந்தாலும், மனந்தளராமல் எதிர்நீச்சல் போட்டு வெற்றியடைய வேண்டும்.
கட்டுக்கோப்பு – உறுதியான பிணைப்பு / ஒன்றிணைந்து (To be well knit or well disciplined)
கால்பந்து அணியிலுள்ள அனைவரும் கட்டுக்கோப்புடன்விளையாடினால், உறுதியாக வெற்றி அடையலாம்.
கடன் கழித்தல் – வேண்டாவெறுப்பாகச் செய்தல் ( To do something without any real interest ).
பள்ளிப்பாடங்களைச் செய்யும்போது, விருப்பமில்லாமல்கடன்கழித்துக் கடமைக்காகச் செய்யக்கூடாது.
கண்ணாயிருத்தல் – சிதறாத கவனத்துடன் இருத்தல் / குறியாக இருத்தல் / முழுக்கவனத்துடன் இருத்தல். ( To be intent or keen on something)
குழந்தை தூங்கும்போது, அதன் தாய் கண்ணாயிருந்துகவனமாகப் பார்த்துக்கொள்வாள்.
கண்துடைப்பு – நம்பவைப்பதற்கான போலித்தனமான சொல் / செயல் (Words or actions that are meant to deceive – ‘eye-wash’).
அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவிக்கும் தீவீரவாதிகள், உயிர்க்கொலை செய்வதை நாங்கள் விரும்பவில்லை என்று கூறுவது வெறும்கண்துடைப்பாகும்
கரைபுரளுதல் – அளவு கடந்து வெளிப்படுதல் (மகிழ்ச்சி, திறமை) (Joy, overflow) knowing no bounds
அறிஞர் அண்ணாவின் மேடைப் பேச்சில் சங்கத் தமிழ் இலக்கியமும் நயமும் கரைபுரண்டு ஓடியது.
காற்றாய்ப்பறத்தல் – மிக வேகமாகப் போதல் / வருதல் (Move at great speed)
தாய் விபத்தில் சிக்கிய செய்தி கேட்டு, மகன் மருத்துவமனைக்குக் காற்றாய்ப்பறந்தான்.
குரல்கொடுத்தல் – ஆதரவு தெரிவித்தல் (Speak in support of)
அணுவாயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியாவிற்குச் சாதகமாக, இனி அமெரிக்கா அனைத்துலக அரங்கில் குரல்கொடுக்கும் என நம்பலாம்.
கூழைக்கும்பிடு – போலியான மரியாதை (To show false, usually excessive, respect).
மனதிற்குப் பிடிக்காவிட்டாலும் பதவி உயர்வுக்காக, தன் உயர் அதிகாரிகளுக்குப் தேவையின்றிக் கூழைக்கும்பிடுபோட்டான்.
கை ஓங்குதல் – செல்வாக்கு மிகுதல் (Gaining the upper hand, being in a dominant position)
முதல் பாதியில் மந்தமாக விளையாடிய மென்செஸ்டர் கால்பந்து அணி இரண்டாம் பாதியில் மூன்று கோல்கள் போட்டதால் அதன் கை ஓங்கியது
கைச்சுத்தம் – நாணயம், நேர்மை (Honesty and integrity (especially in money matters)
நகைக்கடை முதலாளி கைச்சுத்தமாக இருக்கும் நாணயமான ஒருவனை வேலையில் வைத்துக் கொள்ள எண்ணினார்.
கைதூக்கிவிடுதல் – ஒருவரை முன்னேற்ற உதவுதல்(To help reach a better position / to rescue) .
சிறந்த எழுத்தாளர்களின் புத்தகங்களை நாட்டுடைமையாக்கி, நொடித்துப்போன அவ்வெழுத்தாளரின் குடும்பத்தைக் தமிழக அரசு கைதூக்கிவிட்டது.
சரிகட்டுதல் – இணங்கவைத்தல் / ஈடுசெய்தல்(Persuade to agree/To make good a loss)
தான் செய்த தவற்றை மறைக்க கையூட்டுக் கொடுத்து, அதிகாரியைச் சரிக்கட்ட எண்ணினான்.
சரமாரியாக - அடுத்தடுத்து, தொடர்ந்து (Frequently)
மகாபாரதப் போரில் அர்ச்சுனன் துரியோதனனுக்கு எதிராகசரமாரியாக அம்புகளை எறிந்தான்.
சொந்தக்காலில் நிற்றல் – சொந்த உழைப்பில் நிற்றல்(To be self-reliant, stand on one’s own feet) .
யாருடைய உதவியுமின்றி, சொந்தக்காலில் நின்றுவெற்றி காண்பது பெருமைக்குரிய காரியமாகும்.
சொல்லிக்காட்டுதல் – செய்த உதவியைச் சுட்டிக்காட்டுதல் / குத்திக்காட்டுதல் (To recall one’s favour to someone / to recall someone’s mistakes gracelessly).
ஒருவன் இயலாதபோது தான் செய்ய உதவியைப் பிறரிடம்சொல்லிக் காட்டுவது கீழ்த்தரமான செயலாகும்.
தலைகாட்டுதல் – சிறிது நேரமே தோன்றுதல் (To show one’s face (make a quick visit)
ஒரே நாளில் ஐந்து திருமணத்திற்குச் செல்ல வேண்டி இருந்ததால் ஒவ்வொரு திருமணத்திலும் முருகன் சிறிதுநேரம்தலைகாட்டிவிட்டுச் சென்றான்.
தலைசாய்த்தல் – சற்று ஓய்வெடுத்தல் (Lie down to rest).மனதில் எத்தகைய பாரங்கள் இருப்பினும் தாயின் மடியில் தலைசாய்த்தால் மன நிம்மதியைத் தரும்.
தலைதெறிக்க – மிகவேகமாக (At full speed)
தாய் இறந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் மருத்துவமனைக்குத் தலைதெறிக்க ஓடினான்.
தலையில் கட்டுதல் – வலிந்து திணித்தல் / விரும்பாத ஒன்றை ஒப்புக்கொள்ளச் செய்தல் / பயனற்ற ஒன்றை ஏற்கச் செய்தல் (Trick someone into accepting something he doesn’t need or want)
நீண்டநாள் விற்காத பொருளை ஒரு இளிச்சவாயின் தலையில் கட்டிவிற்றுவிட்டான்.
தலையில் வைத்துக் கொண்டாடுதல் – அளவு கடந்து பாராட்டுதல் (To praise someone excessively)
உதயன் அரசுத் தேர்வில் சிங்கப்பூரிலேயே தலைசிறந்த மாணவனாகத் தேர்ச்சியுற்றதைக் கேள்விப்பட்டதும் அவனது பெற்றோர் அவனைத தலையில் வைத்துக் கொண்டாடினர்.
தாளம் போடுதல் – எல்லாவற்றிற்கும் ஒத்துப்போதல் / மிகவும் திண்டாடுதல் (Be a yes-men / to suffer hardship)
உழைக்கின்ற வயதில் சோம்பேறியாகத் திரிந்ததால், இன்று வேலையின்றி வசதியின்றி உணவுக்காகத் தாளம் போட்டான்.
நடைப்பிணம் – பிணத்தைப் போல உணர்வற்ற நிலை (One who is drained of life, a shadow of one’s Former self.)
பொருளாதார மந்தத்தால் வங்கியில் இருந்த எல்லாப் பணத்தையும் செல்வத்தையும் இழந்து அவன்நடைப்பிணமாகிப் போனான்.
நிறைகுடம் – அறிவிலும் பண்பிலும் சிறந்தவர் ஆனால் அடக்கமானவர். (A learned and humble man)
அறிஞர் பெருமக்களின் சபையில் கற்றறிந்த அறிஞர்கள்நிறைகுடம் போன்று அடக்கமாக இருப்பர்.
நீர்க்குமிழி – நிலையற்றத்தன்மை (Transient (not long-lasting)
மரணம் எப்போது என்று தெரியாதவரை வாழ்க்கை என்பதுநீர்க்குமிழி போன்று நிலையில்லாதது.
படியவைத்தல் – அடங்கி நடக்கும்படி / அடங்கச்செய்தல் (To bring Under one’s control /to suppress)
ஜல்லிக்கட்டில் முரட்டுக்காளையைத் தன் முழுபலத்தால் தனக்குக் கீழே படிய வைத்து அடக்கினான்.
பூசிமெழுதல் – மூடிமறைத்தல் (To gloss over / to cover-up)
கையும் களவுமாக மாட்டிக்கொண்ட போதைப் பொருள் கடத்தல்காரன் என்னென்னவோ பொய் சொல்லி தன் தவற்றை பூசி மெழுகி மறைக்கப் பார்த்தான்
மதில் மேல்பூனை – முடிவெடுக்கப்படாத குழப்பமான மன நிலை.(A person who is undecided / dilemma)
மருத்துவத்துறையில் படிப்பதா? பொறியியல் துறையில் படிக்கலாமா? என்று குழப்பமான சிந்தனையில் இருந்த கந்தன் மதில்மேல்பூனை போல இருந்தான்.
முதுகெலும்பு இல்லாதிருத்தல் – விருப்பப்படி செய்யத் துணிவில்லாதவன். (One who cannot decide and act on his own / a powerless person.
அநியாயங்களைப் பார்க்கும் போது முதுகெலும்பில்லாதகோழை போல இருக்க் கூடாது.
முழுமூச்சு – மிகத்தீவிரம் ( With all available energy )
எப்போதும் படிப்பில் முழுமூச்சுடன் இருப்பவர்கள் வெற்றிக் கனியோடு சாதனைகளையும் படைப்பது திண்ணம்.
மெய்ம்மறத்தல் - ஒன்றில் ஆழ்ந்து இருத்தல் (To forget oneself, to become deeply engrossed (when listening to one’s favourite piece of music.)
உறவுகள் தொடர்கதை உணர்வுகள் விடுகதை என்னும் கண்ணதாசனின் பாடலைக் கேட்டு மெய்ம்மறந்துபோனேன்.
வலைவீசுதல் – தேடிக் கண்டுபிடிக்க முனைதல் / ஒருவரை வசப்படுத்த முயலுதல் ( To take a lot of effort to catch)
கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்ற கொலைகாரர்களைக் காவல்துறை வலைவீசி தேடியது.
வாய்ப்பூட்டுப் போடுதல் – சுதந்திரமாகக் கருத்துக்களைக் கூறத் தடைவிதித்தல் ( To curb freedom of expression / to force someone to keep quiet)
ஆங்கிலேய அரசாங்கம் இந்திய விடுதலைத் தலைவர்கள் தங்களை எதிர்த்துப் பேசக்கூடாது என்று வாய்ப்பூட்டுப் போட சட்டம் இயற்றினர்.
வாயடைத்துப்போதல் – அதிர்ச்சியால் / ஆச்சரியத்தால் பேசமுடியாமல் போதல் (Be left speechless / to be stunned)
நான் திருடவில்லை என்று கூறிய திருடனிடம் அவன் திருடிய போது எடுத்த புகைப்படத்தைக் காட்டியபோது வாயடைத்துப் போனான்.
வாரி இறைத்தல் – வரையறையின்றிக் கொடுத்தல் / அளவின்றிக் கொடுத்தல் (To give excessively / lavishly) கடையேழு வள்ளல்கள் தமிழ்ப்புலவர்களின் தமிழ்ப்புலமையை வியந்து, அவர்களுக்குப் பொன்னும் பொருளுமாக வாரி இறைந்தனர்.
விடிவுகாலம் – நல்ல காலம் / நல்ல முடிவு ஏற்படுதல் (Beginning of happy days)
இராணுவத்தின் பிடியில் மிகவும் கொடுமைப்பட்டுக் கொண்டிருந்த பொதுமக்கள் விடுதலை அடையும் விடிவுகாலம் எப்போது என ஏங்கி இருந்தனர்.
விரலுக்குத் தகுந்த வீக்கம் – அவரவர் தகுதிக்கு ஏற்ற செயல்.
மாறன் தனது விரலுக்குத் தகுந்த வீக்கத்தோடு வாழத் தெரியாமல் அண்டை வீட்டாரோடு போட்டிப்போட்டு வாழ்ந்து வீணாகிவிட்டான்.
வெளுத்துவாங்குதல் – சிறப்பாகச் செய்தல் / பலமாக அடித்தல் (Do extremely well / to thrash)
அறிஞர் அண்ணா மேடைகளிலெல்லாம் தன்னுடைய பேச்சைத் தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும்வெளுத்து வாங்கினார்.

No comments :
Post a Comment