# இந்திய அரசியலமைப்பு பகுதி-4 | அரசியல் சட்டத்தை திருத்தம் செய்யும் முறை

அரசியல் சட்டத்தை திருத்தம் செய்யும் முறை
  • அரசமைப்பின் உறுப்பு 368-ன் படி காலமாறுதல்களுக்கேற்ப அரசமைப்பில் உள்ள சட்டங்கள் முறைப்படி திருத்தம் செய்யப்படுகின்றது. திருத்த முறைக்கு உட்படாத சில திருத்தங்களும் மேற்கொள்ளப்படலாம்.
  • திருத்தம் செய்யப்படுகிற அரசியல் சட்டத்துக்கேற்ப அரசியல் சட்டத்தை திருத்த மூன்று வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது.
    1. பாராளுமன்றத்தின் பெரும்பான்மையுடன் திருத்தப்படுதல்
    2. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் திருத்தப்படுதல்
    3. பாராளுமன்றத்தின் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன், மாநில சட்டப் பேரவைகளிலும் பெரும்பான்மை பெற்று திருத்தப்படுதல் 
  • முக்கிய அரசியல் சட்டத் திருத்தங்கள்
    • முதல் திருத்தம் (1951)-  ஒன்பதாவது அட்டவணை சேர்க்கப்பட்டது.
    • வெளிநாடுகளுடன் பேச்சுரிமை, கருத்து பரிமாற்றம் ஆகியவற்றில் சில கட்டுப்பாடுகளை விதித்தது, சமூக, பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க சட்டமியற்றும் வகையில் மாநிலங்களுக்கு அதிகாரம் அளித்தல்.
    • ஏழாவது திருத்தம் (1956) - மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கம். (14 மாநிலங்கள், 6 யூனியன் பிரதேசங்கள் உருவாக்கத்தை அங்கீகரித்தது)
    • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கான பொதுவான உயர் நீதிமன்றம் அமைக்க வழிவகை செய்தது.
    • 14-வது திருத்தம் (1962) – பாண்டிச்சேரி இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
    • 16-வது திருத்தம் (1963) – பாராளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றத்திற்கு போட்டியிடும் வேட்பாளர் இந்திய ஒருமைப்பாட்டை காப்பதற்கும், பிரிவினைக்கான பிரசாரம் எதையும் செய்யாமல் இருப்பதற்கும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்த திருத்தத்தின் காரணமாக திராவிட முன்னேற்றக் கழகம் திராவிட நாடு கோரிக்கையை கைவிட நேரிட்டது.
    • 21-வது திருத்தம் (1967) - எட்டாவது அட்டவணையில் சிந்தி மொழி சேர்க்கப்பட்டது.
    • 24-வது திருத்தம் (1971) – பாராளுமன்றத்திற்கு இந்திய அரசமைப்பின் எந்த பகுதியையும் திருத்தும் அதிகாரத்தை வழங்கியது.
    • 26-வது திருத்தம் (1971) – முன்னாள் மன்னர்களுக்கான மானியங்களும், சிறப்புரிமைகளும் ஒழிக்கப்பட்டன.
    • 42-வது திருத்தம் (1976) - சிறிய அரசமைப்புச் சட்டம் என்றழைக்கப்படுகிறது.  அடிப்படை கடமைகள் சேர்க்கப்பட்டன.
    • 44-வது திருத்தம் (1978) - சொத்துரிமை, அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டது.
    • 52-வது திருத்தம் (1985) - பத்தாவது அட்டவணை சேர்க்கப்பட்டது.
    • 58-வது திருத்தம் (1987)  - ஹிந்தியில் அமைந்த அரசமைப்புச் சட்டமும் அதிகாரபூர்வமான பனுவலாக ஏற்கப்பட்டது.
    • 61-வது திருத்தம் (1989) - வாக்களிப்பதற்கான வயதை 21-ல் இருந்து 18 ஆக குறைத்தது.
    • 69-வது திருத்தம் (1991) - டெல்லி இந்தியாவின் தலைநகர் பகுதி (National Capital Territory) ஆனது.
    • 71-வது திருத்தம் (1992)  - கொங்கனி, மணிப்பூரி, நேபாளி ஆகிய மொழிகள் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டன.
    • 73-வது திருத்தம் (1992) - பஞ்சாயத்து ராஜ்.
    • 74-வது திருத்தம் (1994) - நகராட்சி நிர்வாகம் தொடர்பானது.
    • 76-வது திருத்தம் (1996) - தமிழக இடஒதுக்கீடு ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.
    • 82-வது திருத்தம் (2000) - பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு.

    • 84-வது திருத்தம் (2001) - லோக்சபா சீட் எண்ணிக்கையை 2026 வரை நிரந்தரப்படுத்தியது.
    • 860வது திருத்தம் (2002) - கல்வி அடிப்படை உரிமையானது. 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி அளிப்பது என்ற பொருள் உறுப்பு 45-ல் இருந்து, உறுப்பு 21A க்கு மாற்றப்பட்டது. மேலும் 6 வயதுக்குட்பட்ட இளஞ்சிறார் பாதுகாப்பு என்ற புதிய பொருளைக் கொண்டதாக உறுப்பு 45 மாற்றி அமைக்கப்பட்டது.
    • பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தித்தருவதை வலியுறுத்தும் 51 A என்ற உறுப்பு சேர்க்கப்பட்டது.
    • 87-வது திருத்தம் (2003)  மக்களவை, மாநில சட்டமன்ற சீட்டுகளை 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாற்றியமைத்தது.
    • 91-வது திருத்தம் (2003)  மத்திய, மாநில அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை, லோக்சபா, மாநில சட்டசபை உறுப்பினர் எண்ணிக்கையில் 15%க்கு மேம்படக் கூடாது என உச்சவரம்பு கொண்டு வரப்பட்டது.
    • 92-வது திருத்தம் (2003)  போடோ, மைதிலி, சந்தாலி, டோக்ரி மொழிகள் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டன.
    • 93-வது திருத்தம் (2005)  பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு.
    • 94-வது திருத்தம் (2006)  மலைவாழ் மக்களின் நலனுக்கு தனி அமைச்சர் நியமனத்தை (ஜார்க்கண்ட், சத்தீஸ்கர்) வலியுறுத்தி கொண்டுவரப்பட்டது.
    • 96-வது திருத்தம் (2011)  இந்திய அரசமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் 15-வதாக இடம்பெறும் 'ஒரியா’ மொழியின் பெயர் 'ஒடியா’ எனப் பெயர்மாற்றம் செய்ய வழிவகுத்தது.
    • 97-வது திருத்தம் (2012) – உறுப்பு 19 (1) Cல் கூட்டுறவு சங்கங்கள் (Co Operative Societies) என்னும் சொல்லை சேர்ப்பது தொடர்பானது. மேலும் உறுப்பு 43 Bயை சேர்த்ததுடன், பகுதி IX  B-யை (கூட்டுறவு சங்கங்கள்) சேர்க்க வழிவகை செய்ததது. இந்திய கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளையும், பொருளாதாரத்தையும் ஊக்குவிப்பது இந்த திருத்தத்தின் முக்கிய நோக்கமாகும்.
    • 98-வது திருத்தம் (2013) – ஹைதராபாத் – கர்நாடகா பகுதியில் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள கர்நாடக ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் உறுப்பு 371Eயை புதிதாக சேர்த்தது.
    • 8, 23, 45, 65, 79, 95-வது திருத்தங்கள் – பாராளுமன்றம், மாநில சட்டமன்றங்களில் அட்டவணை சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு மற்றும் மக்களவை மாநில சட்டமன்றங்களில் ஆங்கிலோ – இந்தியர்களுக்கான நியமனம் ஆகியவற்றை பத்து பத்து ஆண்டுகளாக நீட்டித்தது.

      Click & download pdf



5 comments :

  1. Need a PDF of this amendment

    ReplyDelete
  2. sir pls i need pdf file for this materials its very useful one but not able 2 download and use pls help me my mail id sms.kanaga15@gmail.com

    ReplyDelete
  3. It has conditions been easier to judge between the rewriting
    services, as all bloke opinions and testimonials are gathered in one categorize on you to pick the best.
    Take off injurious je sais quoi and as a culminate
    miserable face beside consulting any paraphrase website reviews.
    Thoroughly written testimonials will manual you during the activity of selecting
    the entire and alone transfiguration usefulness that settle upon fit your
    needs.

    ReplyDelete

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற