# Indian constitution study material for TNPSC Group Exams

இந்திய அரசியலமைப்பு பற்றிய முக்கிய குறிப்புகள் - பகுதி 2

முகவுரை
  • முகவுரை அரசமைப்பின் அடிப்படை தன்மை மற்றும்  நோக்கங்களைச் சுருக்கமாகக் காட்டுகிறது.
  • அரசமைப்பின் முகவுரை 1946 டிசம்பர் 13-ல் ஜவஹர்லால் நேருவால் தீர்மானமாகக் கொண்டுவரப்பட்டு அரசியல மைப்பு நிர்ணய சபையால் 1947 ஜனவரி 22-ல் ஏற்றுக்கொள்ளப் பட்டது.
  • இந்திய அரசமைப்பு 22 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. எனினும் முகவுரை அப்பகுதிகளுக்குள் இடம்பெறவில்லை.
  • இந்திய அரசமைப்பின் முகவுரை அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்திலிருந்து வடிவமைக்கப்பட்டது.
  • முகவுரை 1976-ஆம் ஆண்டு ஒரே ஒரு முறை திருத்தப்பட்டது. 42 வது அரசமைப்புதிருத்தத்தின் படி சோசியலிஸ்ட், மதச்சார்பற்ற, ஐக்கிய போன்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டது.

முகவுரையின் வாசகங்கள்
இந்திய அரசமைப்பிலுள்ள முகவுரை கீழ்க்கண்ட வாசகங்களைக் கொண்டுள்ளது.
  • இந்திய மக்களாகிய நாம் இந்தியாவை ஓர் இறையாண்மையுள்ள (soverign), சமதர்ம(socialist), சமயச்சார்பற்ற (secular), மக்களாட்சிக் குடியரசாக (Demacratic Republic) உருவாக்க உறுதி ஏற்கிறோம்.
  • இந்திய குடிமக்கள் அனைவருக்கும் சமுதாய பொருளாதார அரசியல் நீதியும், எண்ணம், கருத்து வெளியீடு, நம்பிக்கை, மதப்பற்று, மதவழிபாடு ஆகியவற்றில் சுதந்திரமும், தகுதி மற்றும் வாய்ப்பில் சமத்துவமும் கிடைக்கவும் மக்களிடையே தனிமனித மாண்பையும் நாட்டின் ஒற்றுமையையும் வளர்க்கவும் நமது அரசியல் நிர்ணய சபையில் உறுதி கொண்டு 1949 நவம்பர் 26ம் நாளான இன்று நமக்கு நாமே இந்த அரசியலமைப்பை நிறைவேற்றி அளித்து நடைமுறைப்படுத்துகிறோம்.
  • முகவுரை இந்திய அரசமைப்பின் ஒரு பகுதியா இல்லையா என்பதை உச்ச நீதிமன்றம் இரு வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது. பெருபாரி (எதிர்) இந்திய ஒன்றியம் (1960) வழக்கில் முகவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதியல்ல எனத் தீர்ப்பளித்தது. ஆனால் கேசவ பாரதி (எதிர்) இந்திய அரசு (1973) வழக்கில் முகவுரை அரசமைப்பின் ஒரு பகுதி எனத் தீர்ப்பளித்துள்ளது.


பகுதிகள் மற்றும் உறுப்புகள்  ( Parts & Articles)

பகுதி I - இந்திய அரசின் எல்லைப் பகுதிகள் (உறுப்பு 1 - 4).
பகுதி II - இந்திய குடியுரிமை (உறுப்பு 5 - 11).
பகுதி III - அடிப்படை உரிமைகள் (உறுப்பு 12 - 35).
பகுதி IV - அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் (உறுப்பு 36 - 51).
பகுதி IV – A - அடிப்படைக் கடமைகள் (உறுப்பு 51A).
பகுதி V - குடியரசுத் தலைவர், மத்திய அரசாங்கம், உச்ச நீதிமன்றம் (உறுப்பு 52-151).
பகுதி VI - ஆளுநர், மாநில அரசாங்கம், உயர் நீதிமன்றம் (உறுப்பு 152-237).
பகுதி VII - முதல் அட்டவணையில் இடம்பெற்றிருந்த PART B மாநிலங்கள்  தொடர்பானது (உறுப்பு 238) 1956-ல் கொண்டுவரப்பட்ட ஏழாவது சட்ட திருத்தத்தின்படி நீக்கப்பட்டது.
பகுதி VIII - யூனியன் பிரதேசங்கள் (உறுப்பு 239 - 242).
பகுதி IX - பஞ்சாயத்து ராஜ் (உறுப்பு 243 - 243O).
பகுதி IX A - நகராட்சிகள் (உறுப்பு 243P - 243ZG)
பகுதி X  பழங்குடியினர் பகுதிகள் (உறுப்பு 244 – 244A).
பகுதி XI   மத்திய மாநில உறவுகள் (உறுப்பு 245-263).
பகுதி XII   நிதி, சொத்து, ஒப்பந்தங்கள், உரிமை வழக்குகள் ஆகியவை (உறுப்பு 264  300A).

பகுதி XIII  இந்திய ஆட்சிப் பரப்புக்குள்ளாக வணிகம், பெருவணிகம், மற்றும் வணிகப் போக்குவரத்து தொடர்பு (உறுப்பு 301-307).
பகுதி XIV   மத்திய, மாநில அரசுப்பணிகள் தேர்வாணையங்கள் (உறுப்பு 308-323).
பகுதி XV  தேர்தல் (உறுப்பு 324-329).
பகுதி XVI  ஆங்கிலோ இந்தியர் , பிற்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் , பழங்குடியினருக்கான சிறப்பு சலுகைகள் (உறுப்பு 330  342).
பகுதி XVII  ஆட்சிமொழிகள் (உறுப்பு 343  351).
பகுதி XVIII   அவசரநிலைப் பிரகடனம் (உறுப்பு 352  360).
பகுதி XIX – பல்வகை (உறுப்பு 361  367).
பகுதி XX அரசியல் சட்டத் திருத்த முறைகள் (உறுப்பு 368).
பகுதி XXI  தற்காலிக, இடைக்கால சிறப்பு அதிகாரங்கள் (உறுப்பு 369-392).
பகுதி XXII  அரசியலமைப்புச் சட்டத்தின் தொடக்கம், நீக்கம், அதிகாரபூர்வ பனுவல் (உறுப்பு 393  395).

அரசமைப்பு முகவுரை  இந்திய அரசியல் அமைப்பின் நோக்கம், நம்பிக்கை அடிப்படை உரிமைகள்  அரசாங்கத்தின் எதேச்சாதிகாரத்தைக் கட்டுப்படுத்துவது.

அரசு நெறிமுறைக் கோட்பாடு  நல அரசை (Welfare State) உருவாக்குவது.

அடிப்படை கடமைகள்  குடிமக்களின் பொறுப்புணர்ச்சியை மேம்படுத்துவது.
Part | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற