இந்திய ரயில்வே பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதில் தமிழ்நாட்டிற்கு மட்டும் 985 பணியிடங்கள் உள்ளன. இப்போதே ஆரம்பித்து விட்டார்கள் , தமிழர்களுக்கு இடம் இல்லை என்று...
ஏன் இடம் இல்லை என்று கீழே படியுங்கள்
கடந்த மூன்று வருடங்களில் தெற்கு ரயில்வேயில் நிரப்பப்பட்ட பணியிடங்கள் ஏறத்தாழ 20,000. தேர்வு பெற்ற தமிழர்கள் அதிகபட்சம் 5,000. ஏன் இந்த நிலைமை? நம்மிடம் திறமை இல்லையா என்று பார்த்தால் திறமை நம்மிடம் நிறையவே உண்டு. கடல் போல் பாடத்திட்டம் உள்ள TNPSC தேர்வையே எளிதாக வெல்லும் நமக்கு பணியிடம் இல்லாமல் போனதற்கு காரணம் என்ன? உண்மையில் நாம் இந்த தேர்வை எழுதுவதே இல்லை. ஒன்று விண்ணப்பிக்காமல் விட்டு விடுகிறோம், அல்லது தவறாக விண்ணப்பித்து விடுகிறோம்.
இதை களைவதற்கு தான் ஆன்லைன் முறையை ஏற்படுத்தினார்கள். ஆனாலும் முன்னேற்றம் இல்லை. அதிகமானவர்கள் பங்குபெறாமல் இருப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.
1.போதிய விழிப்புணர்வு இல்லை. தமிழில் தேர்வு எழுதலாம் என்பது கூட பல பேருக்கு தெரிவதில்லை.
2. வேண்டுமென்றே விண்ணப்பிக்காமல் விடுவது TNPSC போல் அருகிலேயே தேர்வு மையம் அமையாது.
3. விண்ணப்பிப்பதும் TNPSC போல் எளிமையாக இராது.OBC சாதிச்சான்றிதழ் வாங்க வேண்டும்.
இப்படி சோம்பேறித்தனமான காரணங்களுக்காக தான். இப்படி தவறை எல்லாம் நம் மேல் வைத்து கொண்டு தேர்வு வாரியத்தை குறை சொல்லலாமா. இதில் இந்திய ஏகாதிபத்தியமே என்று அரசியல் வேறு. நம்முடைய இந்த சோம்பேறித்தனத்தை தான் வட இந்தியர்கள் பயன்படுத்தி கொண்டார்கள். அவர்கள் இங்கு வருவதற்கு முக்கிய காரணமே இங்கு முடிவுகள் மற்ற இடங்களை விட விரைவாக வெளியிடப்படுவதும், கட் ஆப் மதிப்பெண் குறைவாக இருப்பதாலும் தான். எனது சான்றிதழ் சரிபார்ப்பு அலுவலர் இதை வேதனையோடு பகிர்ந்து கொண்டார். இப்படி தவறை எல்லாம் நம் மீது வைத்து கொண்டு தேர்வு வாரியத்தை குறை சொல்வது நியாயமா?
வேலை இல்லாமல் நம்மவர்கள் கஷ்டப்படும் நேரத்தில் வாய்ப்புகளை தவற விடலாமா ? இனி இது நீடிக்க கூடாது. நம் இடங்களை மற்றவருக்கு விட்டுக் கொடுக்க கூடாது.
பட்டப் படிப்பு முடித்த நண்பர்களிடமும் , தெரிந்தவர்களிடமும் பகிருங்கள். இந்த முறை வழக்கம் போல் ஏளனமாக தேர்வு எழுத வரும் வட இந்தியர்களின் குரல் வளை தமிழர்களின் அறிவாற்றலால் நெரிக்கப்படட்டும்.
-Shankar.
thank you for your valuable advice...
ReplyDeleteRRB பற்றிய விழிபுணர்வுகள் மற்றும் தேர்வு எழுதும் வழிமுறைகள் மற்றும் பாடதிட்டம் update செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்
DeleteSir exam languages english/hindi/urdu only
ReplyDeletetamil language iruku nanbaa..
ReplyDeletesir rrb ntpc material tamil la download pananum but link ennanu therila sir please link iruntha anupunga sir
ReplyDelete