VAO study material free download - B பதிவேடு

TNPSC VAO Exam - Basics of Village Administration



‘ B’ பதிவேடு
 
இது இனாம்களின் நிலப்புல பதிவேடு ஆகும். பல்வேறு வகை இனாம்களின் கீழும், அதாவது சமய, அறக்கட்டளை, சொந்தப்பணி மற்றும் தசபந்தம் ஆகிய இனாம்களின் கீழ் உரிமைப் பட்டயம் முறைப்படுத்தப்பட்டு அவற்றுக்கு நேராக ஒவ்வொரு உரிமைப் பட்டயத்தின் கீழ் வரும் புலங்களும் இதன் கீழ் காட்ட வேண்டும்.

1963- ஆம் ஆண்டு தமிழ்நாடு இனாம் ஒழிப்புச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பிறகு பெரும்பாலான கிராமங்களில்  இனாம் நிலங்கள் ரயத்துவாரி நிலங்களாக மாற்றப்பட்டு அதற்குண்டான நடவடிக்கைகள் முடிவடைந்துவிட்டது. ஆனால் சில இனாம்களின் ஒழிப்பு தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. அந்த ஒரு சில இடங்களில் மட்டும் இப்பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்.

இப்பதிவேட்டினை ஜமாபந்தியின்போது வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேட்டுடன் சரிபார்க்க வேண்டும்.

நிலப்பதிவேடு  B1:

இது நில உரிமை பட்டயத்திற்கான நிலைப்பதிவேடு - ‘B’ பதிவேட்டிலிருந்து வேறுபட்ட தனிப்பதிவேடாகும்.

இப்பதிவேடு தமிழ்நாடு ஜமீன் ஒழிப்பு மற்றும் இரயத்துவாரி மாற்றம் சட்டம் 1948–ன் கீழ் முடிவு செய்யப்பட்ட கிராமங்களுக்கு உரியதாகும். இப்பதிவேடு இரண்டு பாகங்களாக பராமரிக்கப்பட வேண்டும்.

பாகம் 1
தமிழ்நாடு ஜமீன் ஒழிப்பு மற்றும் ரயத்துவாரியாக மாற்றம் சட்டம் – 1948 (1948–ம் வருட XXVI ஆவது சட்டம்)ன் கீழ் பிரிவு 17(1) (பி) மற்றும் (2) இன் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட இனங்களைக் கொண்டதாகும்.

பாகம் 1 கீழ்க்கண்டவாறு ஐந்து பிரிவுகளாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது:

1. சமயக் கொடைகள்
2. அறக் கொடைகள்
3. கிராம பணிக்கொடைகள்
4. தசபந்தம் கொடைகள்
5. பிரிவு 1 முதல் 4வரை அடங்காத ஏனைய கொடைகள்.

பாகம் 2
1951ம் வருடம் தமிழ்நாடு இந்து சமய அறக்கட்டளைச் சட்டம் (1951 ஆம் வருட XIX ஆவது சட்டம்)இன் பிரிவு 34(2)ன் கீழ் உரிமை அளிக்கப்பட்ட தேவதாசி இனாம்களைக் கொண்டதாகும்.

கிராமத்தில் பராமரிக்கப்பட்டு வரும் இப்பதிவேட்டை ஜமாபந்தியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேட்டுடன் சரிபார்க்க வேண்டும்.
 

 

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற