டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு தயாராவது எப்படி?

 
TNPSC தேர்வில்‬ வெற்றி பெற முதலில் பொதுத்தமிழை நன்றாகப் படித்துக்கொள்ளுங்கள் அதுவே வெற்றியைத் தீர்மானிக்கிறது .

General‬ Tamil -க்கு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள தமிழ் புத்தகங்களைப் படிப்பதே போதுமானது.

பலர்‬ கடைசி வாரத்தில் தான் படிக்கவே ஆரம்பிக்கிறார்கள். அது தவறு.

‪TNPSC‬ தேர்வில் வெற்றி பெற எண்ணுபவர்கள் தேர்வு அறிவிப்பு வெளிவந்த பின் படித்துக் கொள்ளலாம் என மெத்தனமாக இருப்பதே தவறு.
TNPSC தேர்வில் வெற்றி பெற எண்ணுபவர்கள் தினமும் ஒரு மணி நேரமாவது பள்ளிப் பாடப் புத்தகங்களைப் படிப்பதற்கு ஒதுக்க வேண்டும். பாடங்களை திரும்பத் திரும்ப படிக்க வேண்டும். புரிந்து படிக்க வேண்டும்.

‪முக்கியமானவை‬ எனத் தோன்றும் பகுதிகளை Notes எடுத்துக் கொள்ளலாம்.

‪தினசரி‬ செய்தி தாள் படிக்கலாம் அல்லது தொலைக்காட்சியில் News பார்க்கலாம்.
‪முக்கிய‬ செய்திகள் வெளிவந்தால் தேதி குறிப்பிட்டு ஒரு Note-ல் குறித்து வைத்துக் கொள்ளவும்.

இப்படிச் செய்தால் Year Books தேடி கடை கடையாக அலைவது கூட அவசியமில்லை.

‪கடைசி‬ வாரத்தில் புதிய பாடங்களை படிக்கவே கூடாது. படித்த பாடங்களை திரும்ப படிக்க வேண்டும். அதாவது Revise செய்ய வேண்டும்.
 

6 comments :

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற