ஓவியக்கலை |
7th Samacheer Kalvi Tamil Text book Notes for TNPSC, TET, PG TRB Exams
- தமிழர் வளர்த்த நுண்கலைகளின் வரிசையில் முன்னணியில் நிற்பது ஓவியக்கலை
- கி.மு. 2000 ஆண்டுகட்கு முற்பட்ட காலத்தில் மக்கள் தாம் தங்கிய மலைக்குகைகளிலும் பாறைகளிலும் கோட்டோவியங்கள் வரைந்தனர்.
- தமிழ்நாட்டில் சங்க காலத்திற்கு முன்னரே ஓவியங்கள் வரையப்பட்டன.
தாம் வரைந்த ஓவியங்களை முதலில் கண்ணெழுத்து என்றே வழங்கியுள்ளனர். - தமிழ் இலக்கியத்தில் எழுத்து என்பதற்கு ஓவியம் எனப் பொருள் என கூறும் நூல்கள் பரிபாடல், குறுந்தொகை.
- ஓவியம் வரைதற்கு நேர்கோடு, கோணக்கோடு, வளைகோடு முதலியன அடிப்படையாகும். இவ்வாறு வரையப்படுபவை கோட்டோவியங்கள் எனப்படும்.
- தொல்காப்பியம் நடுகல் வணக்கம் பற்றிக் கூறுகிறது. நடுகல்லில் போரில் வீரமரணம் எய்திய வீரனது உருவம், பெயர், பெருமைக்குரிய செயல் முதலியனவற்றைப் பொறிக்கும் பழக்கம் இருந்தது.
- சிற்பி, தான் செதுக்கவிருக்கும் உருவத்தை முதலில் வரைந்து பார்த்த பின்னரே, அவ்வோவியத்தைக்கொண்டு கல்லில் உருவம் அமைத்தல் மரபு.
- ஓவியக்கலை ஓவு, ஓவம், ஓவியம், சித்திரம், படம், படாம், வட்டிகைச் செய்தி எனப் பல பெயர்களால் வழங்கப்பெற்றது.
- ஓவியக் கலைஞர் ஓவியர், ஓவியப்புலவன், கண்ணுள் வினைஞன், சித்திரக்காரர், வித்தக வினைஞன், வித்தகர், கிளவி வல்லோன் என அழைக்கப்பட்டார்.
- ஓவியர் எண்ணங்களின் எழுச்சியைப் பல வண்ணங்களின் துணைகொண்டு எழுதுவோராதலின் கண்ணுள் வினைஞர் எனப் புகழப்பெற்றார்.
- நச்சினார்க்கினியர் தம் உரையில் ஓவியருக்கு, ‘நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவோர்’ என இலக்கணம் வகுத்திருக்கிறார்.
- ஓவிய நூலின் நுணுக்கத்தை நன்கு கற்றுப் புலமைபெற்ற ஆசிரியர் ஓவியப் புலவன் எனப் போற்றப்பட்டார்.
- ஓவியக் கலைஞர் குழுவை ஓவிய மாக்கள் என்றழைத்தனர்.
- ஆண் ஓவியர் சித்திராங்கதன் எனவும், பெண் ஓவியர் சித்திரசேனா எனவும் பெயர் பெற்றிருந்தனர்.
- ஆடல் மகள் மாதவி, ‘ஓவியச் செந்நூல் உரை நூற்கிடக்கையும் கற்றுத்துறை போகப் பொற்றொடி மடந்தையாக இருந்தனள்’ எனச் சிலம்பு பகர்கிறது. இதிலிருந்து ஓவியக் கலைக்கெனத் தனி இலக்கண நூல்கள் இருந்தன என்பதனைத் தெரிந்துகொள்ளலாம்.
- வண்ணந்தீட்டும் கோல் தூரிகை, துகிலிகை, வட்டிகை எனப்பட்டது.
No comments :
Post a Comment