எட்டுத் தொகை - நற்றிணை

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை.

  • அகநூல்
  • 400 பாடல்களைக் கொண்டது
  • பாடிய புலவர்களின் எண்ணிக்கை 175
  • சிற்றெல்லை 9 அடி, பேரெல்லை 12 அடி
  • நல் என்ற அடைமொழி பெற்றது.
  • நற்றிணை நானூறு என்றும் கூறுவர்.
  • எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்து எண்ணப்படும் நூல்
  • தொகுத்தவர் பெயர் தெரியவில்லை
  • தொகுப்பித்தவர் பன்னாட்டு தந்த பாண்டியன் மாறன் வழுதி
  • கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்
  • நற்றிணைக் கடவுள் வாழ்த்துத் திருமாலைப் பற்றியது
  • பிற்காலத்தில் சிறந்து விளங்கிய “தூது” என்ற சிற்றிலக்கியத்திற்கு வழிகாட்டியாகக் குருகு, கிளி, நாரை ஆகியவற்றைத் தூதுவிடும் பாங்கையும் நற்றிணையில் காணலாம். எனவே நற்றிணையை தூதின் வழிகாட்டி என்பர்.
  • அறிவுடைநம்பி, உக்கிரப் பெருவழுதி, பாலைபாடிய பெருங்கடுங்கோன் போன்ற அரசர்களும் நற்றிணைப் பாடல்களைப் பாடியுள்ளனர்.
  • முதன்முதலில் பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் தான் இயற்றிய புத்துரையுடன் 1914 இல், பதிப்பித்து வெளியிட்டார்.
  • ஒளவை சு.துரைசாமிபிள்ளையால் பின்னர் விளக்கவுரை எழுதப்பட்டது.
  • செய்திகள்
  • நற்றிணைப் பாடல்கள் மூலம் அக்கால மக்களிடம் பரவிக்கிடந்த பழக்க வழக்கங்களை அறியலாம்.
  • தலைவன் பிரிவால் வாடும் தலைவி அவன் வரவை சுவரில் கோடிட்டுக் காட்டும் வழக்கமும்,    காதலன் வரவைப் பல்லி கூறுவதாகக் கருதுவதும் அம்மக்களின் நம்பிக்கையைக் காட்டுகிறது.
  • அக்கால மகளிர் கால்பந்து விளையாடும் வழக்கம் இருந்ததை அறியமுடிகிறது.
  • விடிவெள்ளி, எரிநட்சத்திரம் பற்றிய செய்திகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.
  • மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, கொடைத்திறன், மன்னர்களைப் பின்பற்றி மக்கள் வாழ்ந்த அறவாழ்வு ஆகியவற்றை அறியவும் நற்றிணைப் பாடல்கள் துணை செய்கின்றன.
  • நற்றிணையின் இடம் பெற்றுள்ள சில முக்கிய பாடல்வரிகள் :
’’நீரின்று அமையா உலகம் போலத்
தம்மின்று அமையா நம்நயந்து அருளி’’ - கபிலர்

’’நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார்தம் ஒட்டினோர் திறத்தே’’ - கபிலர்

TNPSC & PG TRB Tamil ilakkiya varalaru online test
தமிழ் இலக்கிய வரலாறு-1
தமிழ் இலக்கிய வரலாறு-2
தமிழ் இலக்கிய வரலாறு-3
தமிழ் இலக்கிய வரலாறு-4
தமிழ் இலக்கிய வரலாறு-5
தமிழ் இலக்கிய வரலாறு-6
தமிழ் இலக்கிய வரலாறு-7
தமிழ் இலக்கிய வரலாறு-8
தமிழ் இலக்கிய வரலாறு-9
தமிழ் இலக்கிய வரலாறு-10
தமிழ் இலக்கிய வரலாறு-11
தமிழ் இலக்கிய வரலாறு-12
தமிழ் இலக்கிய வரலாறு-13
தமிழ் இலக்கிய வரலாறு-14
தமிழ் இலக்கிய வரலாறு-15
தமிழ் இலக்கிய வரலாறு-16
தமிழ் இலக்கிய வரலாறு-17
தமிழ் இலக்கிய வரலாறு-18
தமிழ் இலக்கிய வரலாறு-19
தமிழ் இலக்கிய வரலாறு-20
தமிழ் இலக்கிய வரலாறு-21
தமிழ் இலக்கிய வரலாறு-22
தமிழ் இலக்கிய வரலாறு-23
தமிழ் இலக்கிய வரலாறு-24
Tamil ilakkiya varalaru question and answer pdf
Tamil ilakkiya varalaru e-book 55 Pages
Tamil Grammar online test-1
Tamil Grammar online test-2
Tamil Grammar online test-3

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற