TNPSC குரூப் 1, குரூப் 2 மற்றும் VAO தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும்

திங்கள் , ஜூன் 06, 2016

TNPSC:குரூப் 1, குரூப் 2 மற்றும் வி.ஏ.ஓ தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும்.
குரூப் 1, குரூப் 2 மற்றும் விஏஓ தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.

வட்டார சுகாதார புள்ளியல் அலுவலர் பணிக்கான தேர்வு நேற்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. மொத்தம் 172 காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.

கோவை, ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள அம்மனியம்மாள் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் அருள்மொழி ஆய்வு செய்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது நடைபெறும் குரூப் தேர்வுகள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் நேரடிக் கண்காணிப்பில் நம்பகத்தன்மையுடன் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். 

எனவே தேர்வு எழுதுபவர்கள், தங்களது தகுதி, திறமை மேல் நம்பிக்கை வைத்து நன்றாக படித்து எழுத வேண்டும். நான் தலைவராக பொறுப்பேற்ற பிறகு கடந்த அக்டோபர் மாதம் முதல் தற்போது வரை 13 வகையான தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது. 
குரூப் 1, குரூப் 2 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அருள்மொழி கூறினார். ஜூன் மாதம் நடத்தப்பட்ட குரூப் 1 தேர்வு முடிவுகள் தாமதமாவதற்கு சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பே காரணம் என்றும் கூறினார்.

2016-17-ம் ஆண்டில் நடைபெற உள்ள அரசு பணியாளர் தேர்வுகள் குறித்த அட்டவணை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையக்குழுவின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதுபவர்கள் முன்கூட்டியே தயாராவதற்காக இந்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அருள்மொழி கூறினார்.

Group 4 Model Question Papers
 

No comments :

Post a Comment

Pages (150)12345 Next
Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற