# பணிபுரிந்து கொண்டே போட்டி தேர்விற்கு படிப்பது எப்படி?

How to prepare for competitive exams while doing a job

தனியார் துறையில் வேலை, ஓய்வில்லாத உழைப்பு, சனி- ஞாயிறு அன்று கூட விடுமுறை இல்லை, தினமும் கூடுதல் நேர வேலை, என்னதான் உழைத்தாலும் அதேற்கேற்ற அங்கீகாரம் இல்லை, ஐம்பதாயிரம் சம்பளம் வாங்கினால் கூட எப்போது வீட்டுக்கு அனுப்புவார்களோ என்ற கவலை, பணி நிரந்தரம் இன்மையால் மன அமைதியில் குழப்பம், அலுவலக அரசியல்.

இவற்றை எல்லாம் மனதில் வைத்து ஒரு அரசு வேலையை வாங்கிவிட வேண்டும் என்ற கனவுடனும், அதே நேரம் தற்போது பார்த்துக் கொண்டு இருக்கிற வேலையை விட முடியாமலும் பல்வேறு சகோதர/சகோதரிகள் தவித்து வருகின்றனர். அவர்களுக்கானது என்னுடைய இந்தப் பதிவு.

1. முதலில் வேலைபார்த்துக் கொன்டே போட்டி தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய சவால், படிப்பதற்கு போதுமான நேரம் இல்லாமை. வீட்டில் இருந்து முழு நேரம் இத் தேர்வுகளுக்கு படிப்பவர்களுடன் போட்டி போட வேண்டிய நிலைமை. அவர்கள் ஒரு நாளில் படிக்கும் பாடத்தை படிக்க நமக்கு 2 அல்லது 3 நாட்கள் ஆகலாம்.

எனவே, நீங்கள் எந்த எந்த வழிகளில் உங்கள் பொன்னான நேரம் செலவாகிறது என்பதனை கண்டறிந்து குறைக்க வேண்டும். டிவி பார்ப்பது, அடிக்கடி அவசியம் இன்றி வெளியே போவது, பொழுது போக்கில் அதிக நேரம் போன்ற அனாவசிய நேர செலவுகளை குறைத்துக் கொண்டு அந்த நேரங்களில் படிக்கலாம். குறைந்த பட்சம் உங்களால் நாள் ஒன்றிற்கு 4 மணி வரை படிக்க முடியும்.

தொடர்ந்து படிக்க >>>
 
TNPSC Exam Tips 

8 comments :

  1. அருமையான பதிவு தாேழரே, என்னைப் போன்று வேலைக்கு போய்க்கொண்டே படிப்பவா்களுக்கு கொஞ்சம் நம்பிக்கையை தரக்கூடியதாக இருக்கிறது உங்களின் வாா்த்தைகள். வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.

    ReplyDelete
  2. நல்ல பயனுள்ள தகவல்... தற்போது தான் அதற்கான பணியில் இறங்க போகிறேன்.....

    ReplyDelete

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற