மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குரூப்-4 தேர்வு நல்ல படியாக இனிதே நடந்து முடிந்து விட்டது, நாம் இதில் எத்தனை மதிப்பெண் எடுத்து இருக்கிறோம், வெற்றி பெறுவோமா என்பதையும் தாண்டி முதலில் நல்ல உடல் நலத்துடனும், மன நலத்துடனும் இத் தேர்வினை எதிர் கொள்ள உதவிய இறைவனுக்கு (அல்லது) இயற்கைக்கு நமது நன்றிகளை தெரிவித்துக் கொள்ள வேண்டும். "சுவர் இருந்தால் தான் சித்திரம்" என்பது போல என்னதான் படித்து இருந்தாலும் தேர்வு வேளையில் உடலும், மனமும் ஒத்துழைக்கும் நிலையில் இல்லை என்றால் வெற்றி சற்று கடினம் தான்.
இத் தேர்வில், மொழி பாடங்களில் 80 க்கு குறைவாக எடுத்தவர்கள், மீண்டும் மொழிப்படங்களில் ஒரு சுற்று வரலாம். விட்டு போன பகுதிகளை படிக்கலாம். சிலர் 6-10 வரை உள்ள மொழி பாடங்கள் மட்டுமே படித்து இருப்பார்கள், அவர்கள் +1 மற்றும் +2 பாடங்களை படிக்கலாம். அதையும் தாண்டி இலக்கணம், இலக்கியம் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தலாம். பயிற்சி வினாக்களை நன்கு பயிற்சி செய்து பழகலாம். ஏதாவது செய்து கொண்டே இருங்கள். நம் மூளைக்கு வேலை வைத்துக் கொன்டே இருக்க வேண்டும். மூளையை துருப் பிடிக்க வைத்து விட்டால், தேர்வு நேரத்தில் அதனை பட்டை தீட்டி தயார் செய்வது கடினம். எனவே உங்கள் படிப்பு வெற்றி வரை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
கடந்த குரூப் 2-A, VAO, மற்றும் இந்த குரூப்-4 தேர்வுகளின் மூலம் நீண்ட காலமாக நன்கு படித்து மிக கடினமான போட்டிகளைக் கொடுத்த பெரும்பாலான போட்டியாளர்கள், வெற்றியாளர்களாக மாறி வேலை வாங்கி விடுவார்கள். கிட்ட தட்ட 8,500 பேர் வேலைக்கு சென்று விடுவார்கள். இவர்கல் 2012 அல்லது 2013 முதல் படித்து வருபவர்கள். இதன் மூலம் அடுத்து வரும் VAO அல்லது குரூப் 2a தேர்வுகளில் இவர்கள் களம் இறங்குவது சற்று குறையும். கண்டிப்பாக அடுத்து வரும் குரூப்-4 தேர்வு முழுக்க முழுக்க இப்போது படிக்க ஆரம்பித்து இருப்பவர்களின் களமாகவே இருக்கும். இப்போது என்றால், கடந்த 6 மாதமாக, அல்லது ஒரு வருடமாக படித்துக் கொண்டு இருப்பவர்கள்தான். எனவே இப்பொழுது இருந்தே எதிர் வரும் தேர்வுகளை நோக்கி உங்களை தயார் செய்து கொள்ளுங்கள்.
இத் தேர்வில் 175+ எடுத்தவர்கள் தைரியமாக குரூப் 1 தேர்விற்கு படிக்கலாம், அல்லது அஞ்சல் அலுவலக பணி இடத்திற்கு தங்களை தயார் செய்யலாம்.
தட்டச்சு பணிக்கு விண்ணப்பித்து இருப்பவர்கள், உங்கள் மதிப்பெண் எதுவாக இருந்தாலும், Office Automation படிப்பில் சேர்ந்து படியுங்கள். எப்படியும் நீங்கள் பணிக்கு சென்றால், பணியில் சேர்ந்த ஒரு வருடத்திற்குள் இந்த கோர்சினை முடிக்க வேண்டும். அதனை இப்பொழுதே பொறுமையாக முடித்து வைக்கலாம்.
மிக கடினமாக உழைத்தும் சூழ்நிலையின் காரணமாக அதிக மதிப் பெண் எடுக்க முடியாதவர்கள் சோர்ந்து விடாமல் எதனால் இந்த நிலை என்பதை தெரிந்து சரி செய்து கொள்ள முன் வர வேண்டும். நன்றாகப் படித்த நமக்கே வெற்றி பெற தேவையான மதிப்பெண் வர வில்லை என்றால் கண்டிப்பாக நம்மை விட திறைமையான ஒருவருக்கு, நம்மை விட அதிகம் படித்த ஒருவருக்கு, நம்மை விட கடினமாக உழைத்த ஒருவருக்குத்தான் அது வந்து இருக்கிறது என்று சந்தோஷப் பட்டு கொள்ளுங்கள். வெற்றியின் முதல் படி அடுத்தவர் வெற்றியை அங்கீகரிப்பதுதானே. நமது உழைப்பிற்கு ஏற்ற முடிவு இல்லை என்று வருந்துவதை விட, வெற்றி பெறுவதற்கு தேவையான உழைப்பு என்ன என்பதனைக் கண்டறிய வேண்டும். இப்பொழுது இந்த தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் எல்லாம் அவர்களது கடந்த கால தேர்வுகளில் உங்களைப் போல் மயிரிழையில் வெற்றி வாய்ப்பினை தவற விட்டவர்கள் தான். சோர்வை விட்டுத் தள்ளுங்கள். அதே புத்துணர்ச்சியுடன் இருங்கள்.
இறுதியாக ஒரு கதை:
ஒரு ஊருக்கு ஒரு முனிவர் வந்தார்...
அவரிடம் மக்கள் எல்லாம் தங்களின் குறைகளைக் கூறி முறையிட்டனர்...
அந்த ஊரில் நீண்ட காலமாக மழை வரவில்லை என்றும் தங்களின் குடும்பங்கள் மிகுந்த வறுமையில் இருப்பதாகவும் நீங்கள் தான் ஏதேனும் ஒரு வழி கூற வேண்டும் என்று அந்த ஊரில் உள்ள அனைவரும் அவரிடம் கதறினர்...
சற்று நேரம் தியானத்தில் இருந்து விட்டு விழித்த முனிவர், "இன்றிலிருந்து ஒன்பதாம் நாள் உங்களின் தலைக்கு மேல் ஒரு சொர்க்கப் பறவை ஒன்று பறக்கும்.. அது விரைவாக பறக்கும் தன்மை உடையது.. அதை நீங்கள் பிடித்துவிட்டால்.. அது உங்களுக்கு தேவையான அனைத்தையும் கொடுக்கும்" என்று கூறிவிட்டு சென்று விட்டார்.
முனிவர் சென்றவுடன் சிலர் அவரை நம்பாமல்... தங்களுடைய பணிகளுக்கு சென்றுவிட்டனர்... சிலர் அந்த பறவையின் வரவிற்காக காத்துக் கொண்டு இருந்தனர்.
ஆனால்... ஒருவன் மட்டும் காற்றில் அந்தப் பறவை பறப்பதாக நினைத்துக் கொண்டு தவ்வி தவ்வி அதை பிடிப்பது போல் முயற்சி செய்து கெண்டே இருந்தான்.
ஊரில் உள்ள அனைவரும் அவனைப் பார்த்து சிரித்தனர். என்றோ வரப் போகும் பறவையை இன்றைக்கு பிடிப்பது போல் பாசாங்கு செய்ததை, அவனது முட்டாள்தனம் என நினைத்து அவனை கிண்டல் செய்தனர்.
ஆனால், அவற்றை எல்லாம் காதில் வாங்காமல் ஒரு பைத்தியக்காரனைப் போல் இல்லாத பறவையை விரட்டி விரட்டி பிடித்துக் கொண்டு இருந்தான். சாமியார் கூறிய அந்த பறவை வரும் நாள் வந்தது.
ஆனால்... ஊர் மக்கள் கிண்டல் செய்த அந்த ஒருவன் மட்டும் அதை பிடித்துவிட்டான். மக்களுக்கெல்லாம் சந்தோஷம் கலந்த ஆச்சரியம்.
"உன்னால் மட்டும் எப்படி பிடிக்க முடிந்தது?" என அவனிடம் கேட்டனர்.
அதற்கு அவன் சொன்னான் "நீங்கள் எல்லோரும் பறவை வந்த பிறகு தான் அதை பிடிக்க முயற்சி செய்தீர்கள். ஆனால்... நானோ, பறவை வருவதற்கு முன்பிருந்தே அதை பிடிக்க முயற்சி செய்தேன்.
எந்த விஷயத்திலும் வெற்றி பெற வேண்டுமானால்... அந்த சூழ்நிலை வந்த பிறகு அதை செய்ய தயாராவதை விட... அதற்கு முன்பே நாம் நம்மை தயாராக வைத்துக் கொண்டால்... வெற்றி நமக்கே உரியதாக இருக்கும்......"
நன்றி!
அன்புள்ள,
அஜி,
சென்னை.
really thank u.Sir
ReplyDeleteit is giving a inspiration.
true sir
ReplyDeleteHi aji nice post.thank u
ReplyDeleteI got 170 is there any possible to get a job.please tell me
Super sir.... Thank you very much sir.... Its a great motivation to me.... Nice story...
ReplyDeletethank you sir
ReplyDeleteThanks for your valuable post
ReplyDeletethank u for your advice .i wil keep it up.the all matter happened to me .now i got job
ReplyDeleteThanks for ur inspirational words sir.
ReplyDeleteThanks for your valuable advise
ReplyDeleteTNANKS SIR
ReplyDeletethanks for your golden story
ReplyDeleteFactu factu Thank u
ReplyDeleteVery useful story nice sir
ReplyDeletethank u
ReplyDeleteThank u sir
ReplyDeleteVALUABLE STORY THANK YOU SIR
ReplyDelete