TNPSC exams (Group 1, Group 2, VAO, Group 4) TET | PG TRB : General Knowledge Study materials books pdf Free download Tamil - English | Police (SI) | RRB | Postal | TNEB Exam
கிருமிகளினால் நோய் பரவும் கொள்கை:
கிருமிகளினால் நோய் பரவும் கொள்கை:
கிருமிகளினால் நோய் பரவும் கொள்கையை இராபர்ட் கோச் மற்றும் லூயிஸ் பாஸ்டர் வெளியிட்டனர்.
நோய்க் கிருமி மனித உடலுக்குள் நுழைந்து, வேகமாக வளர்ந்து தன் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொள்கிறது. இவைகள் டாக்ஸின்கள் எனும் நச்சுக்களை உற்பத்திச் செய்து விருந்தோம்பிக்கு நோயினை உண்டாக்குகிறது.
ஒட்டுண்ணி நுண்கிருமிகள் : நுண்கிருமிகள் மனிதர்களுக்கு நோய் உண்டாகிறது. இந்த கிருமிகள் வைரஸ், பாக்ட்டீரியா, பூஞ்சைகள் மற்றும் புரோட்டேசோவா என பல வகைகளில் காணப்படுகிறது.
வைரஸ்கள், விருந்தோம்பியின் உடலில் உயிருள்ளவையாகவும், உடலுக்கு வெளியில் உயிரற்றமுறையிலும் செயல்படும்.
வைரஸ்கள் புரதத்தால் சூழப்பட்ட உறையை உடைய னுசூஹ அல்லது சுசூஹவை மரபுப் பொருளாகக் கொண்டுள்ளது.
இதுவரை அறியப்பட்ட அனைத்து வைரஸ்களும், போலியோ, வெறி நாய்க்கடி, கல்லீரல் வீக்கம், மூளை உறை வீக்கம், மூளைக் காய்ச்சல் போன்ற கடுமையான நோய்களை உருவாக்கும் ஒட்டுண்ணிகளாக உள்ளன.
பாக்ட்டீரியாவும், பாக்ட்டீரிய நோய்களும்
பாக்ட்டீரியா என்பது நுண்ணோக்கியின் மூலம் மட்டுமே காணக்கூடிய ஒரு செல் புரோகேரியோட்டுகள் ஆகும்.
சிலவகை பாக்ட்டீரியாக்கள் தீங்கற்றவைகளாக இருப்பினும் சிலவகை ஒட்டுண்ணிகளாக, இருந்து நோய்க்குக் காரணியாகின்றன.
பொதுவாக பாக்ட்டீரியாக்கள் மனிதனின் வாய், மூக்கு, தோல்களில் காணப்படும் சிராய்ப்புகள் மற்றும் உடலில் காணப்படும் புண்களின் வழியாக உடலினுள் நுழைகின்றன. இவை உடலினுள் வேகமாகப் பெருகி அதிக வீரியமுள்ள நச்சுத்தன்மையை வெளியிடுவதன் மூலம் நோயை உற்பத்திச் செய்கின்றன.
காச நோய், தொழு நோய், காலரா, டைபாய்டு, கக்குவான், இருமல், டெட்டனஸ் (இரணஜன்னி), பிளேக், நிமோனியா, சிபிலிஸ், கோனோரியா போன்றவை மனிதருள் காணப்படும் சிலவகை பாக்டீரிய நோய்களாகும்.
பூஞ்சைகளும், பூஞ்சை நோய்களும்
பூஞ்சைகள், பச்சையம் அற்ற சாறுண்ணி அல்லது ஒட்டுண்ணி வகைகளாகும்.
இவை இறந்த, அழுகிப்போன கரிம உயிரிகள் அல்லது உயிருள்ள தாவரம் அல்லது விலங்குகளில் வாழும். சிலவகை பூஞ்சைகள் மனிதரில் தோலிலுள்ள காரோட்டீன்களைச் சிதைத்து, வட்ட வடிவமான படைநோயை உருவாக்கும். மேலும் பொடுகு, சேற்றுப்புண்களுக்குக் காரணியாகிறது.
read more & download pdf science study materials
TNPSC Group 2 & Group 2A Previous year question papers
TNPSC VAO Exam - Basics of Village Administration Study Materials
No comments :
Post a Comment