* அமெரிக்க நாட்டின் அரசியலமைப்பைப் முக வுரை எனும் கொள்கையை இந்திய அரசியல மைப்பு வல்லுநர்கள் எடுத்துக் கொண்டனர்.
* இந்திய அரசியலமைப்பிற்கு முகப்புரை வழங்கிய பெருமை ஜவஹர்லால் நேருவைச் சாரும்.
* இந்திய அரசியலமைப்பின் திறவுக்கோல், "இந்திய அரசியலமைப்பின் இதயம்' என்று போற்றப்படுவது முகவுரைதான்.
* இந்திய அரசியலமைப்பு முகவுரை இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே திருத்தப்பட்டுள்ளது.
* 1976-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட 42-வது சட்டத் திருத்தத்தின்படி முகவுரையில் சமதர்ம (Socialist), மதச்சார்பற்ற (Secular), ஒருமைப் பாடு (Integrity) எனும் மூன்று சொற்கள் சேர்க்கப்பட்டன.
இந்திய அரசும் அதன் எல்லைகளும்
* இந்திய அரசியலமைப்பில் பகுதி-1, இந்திய அர சும் அதன் எல்லைகளும் பற்றி விளக்குகிறது.
* இந்தியாவில் உள்ள மாநிலங்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆகும். மத்திய ஆட்சிப் பகுதி யான யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை மொத்தம் 6 ஆகும். ஒரு தேசிய தலைநகர் பகுதி (டெல்லி)யும் உள்ளன.
* புதிய மாநிலங்களை உருவாக்கும் பாராளுமன்ற உரிமைகளை விவரிப்பது சட்டப்பிரிவு- 2
* புதிய மாநிலத்தை உருவாக்குவது, பழைய மாநிலங்களைச் சுருக்குவது, எல்லைகளை மாற்று வது இவற்றை விவரிப்பது சட்டப்பிரிவு- 3
* புதிய மாநிலங்களை உருவாக்கத் தேவையான சட்ட வழிமுறைகளைப் பற்றிப் பேசுவது சட்டப்பிரிவு- 4
* இந்தியாவில் மொழிவாரி மாநிலமாக, முதன்முதலாக அமைக்கப்பட்ட மாநிலம் ஆந்திரப்பிரதேசமாகும். இது 1953-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
* இந்தியாவின் 28-வது மாநிலம் ஜார்கண்ட்.
அடிப்படை உரிமைகள்
* இந்திய அரசியலமைப்பு, தொடக்கத்தில் ஏழு அடிப்படை உரிமைகளைக் கொண்டிருந்தது.
* 1978-ல் 44-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி சொத்துரிமையானது அடிப் படை உரிமையிலிருந்து நீக்கம் செய்யப் பட்டதால், தற்போது ஆறு அடிப்படை உரிமைகள் உள்ளன.
* 1. சமத்துவ உரிமை (அரசியலமைப்பு பிரிவு 14-18):
* 2. சுதந்திரத்திற்கான உரிமை (அரசியலமைப்புப் பிரிவு 19-22)
* 3. சுரண்டலுக்கு எதிரான உரிமை (அரசிய லமைப்புப் பிரிவு 23-24):
* 4. சமயச் சுதந்திரத்திற்கான உரிமை (அரசிய லமைப்புப் பிரிவு 25-28):
* 5. பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள் (அரசிய லமைப்புப் பிரிவு 29-30):
* 6. அரசியலமைப்பு தீர்வு வழிகளுக்கான உரிமை (அரசியலமைப்புப் பிரிவு - 32):
முன்பக்கம் செல்ல அடுத்தப்பக்கம் செல்ல
Our indian consitution"s preample is greatest one in the world
ReplyDeleteit is the bulkiest written constitution in the world
ReplyDelete29th State of India is Telangana, Estd in June 02 2014.
ReplyDelete