இந்தியாவின் முதல் அரசியலமைப்பு சபைக் கூட்டம் டிசம்பர்- 9, 1946-ம் ஆண்டு நடை பெற்றது.
* தலைவராக சச்சிதானந்த சின்ஹா செயல் பட்டார். அவர் மறைவுக்குப் பின்னர் டாக்டர் இராஜேந்திர பிரசாத் தலைவராகச் செயல் பட்டார்.
* டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் வரைவுக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார்.
* இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் நவம்பர் 26, 1949.
* இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது ஜனவரி 26, 1950.
* இந்திய அரசியலமைப்பு மிக விரிவாக எழுதப்பட்ட ஆவணமாகும்.
* பிரிட்டன், அயர்லாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் அரசிய லமைப்புகளே இந்திய அரசியலமைப்புக்கு மூலாதாரமாக இருந்தன.
* இந்திய அரசியலமைப்பு வரையப்பட்டபோது இருந்த சரத்துகள் மற்றும் பட்டியல்களின் எண்ணிக்கை: 395 சரத்துகள், 8 பட்டியல்கள்.
* தற்போது இந்திய அரசியலமைப்பில் உள்ள சரத்துகள் மற்றும் பட்டியல்களின் எண்ணிக்கை 444 சரத்துகள், 12 பட்டியல்கள்.
* இந்திய அரசியலமைப்பு நெகிழும் இயல்பும், நெகிழா இயல்பும் கொண்டுள்ளது.
* இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சி முறையும் ஒற்றையாட்சி முறையும் ஒன்றாகக் கொண்டுள்ள ஓர் அரசியலமைப்பாக விளங்குகிறது.
* மத்திய அரசாங்கத்திற்கும் மாநில அர சாங்கத்திற்கும் அதிகாரங்கள் தனித்தனியே வரையறுக்கப்பட்டுள்ளன.
* அதிகாரங்கள் மத்திய பட்டியல், மாநில பட்டியல், பொதுப் பட்டியல் என்ற மூன்று பட்டியல்களில் வைக்கப்பட்டுள்ளன.
* நெருக்கடிகாலச் சமயங்களில் அதிகாரங்களை மத்திய அரசே, ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒற்றையாட்சிக் கூறுகள் உள்ளன.
* இந்திய அரசியலமைப்பின் மூன்றாம் பகுதியில் அடிப்படை உரிமைகள் இடம் பெற்றுள்ளன. (அங்கங்கள் 12 முதல் 35 வரை).
* அடிப்படை உரிமைகள் சட்டத்தின் முன் எல்லா குடிமக்களுக்கும் சமத்துவத்தை வழங்குகின்றன.
* அடிப்படை உரிமைகள் தனிமனித நலனுக்கும், பொது நலனுக்கும் இடையே சம நிலையை ஏற்படுத்துகின்றன.
* இந்திய அரசியலமைப்பின் நான்காம் பகுதியில் அரசுக் கொள்கையினை நெறிபடுத்தும் கோட் பாடுகள் இடம் பெற்றிருக்கின்றன (அங்கங்கள் 36 முதல் 51 வரை).
* நமது நாட்டில் பொது நல அரசு அமைப்பதற்கும் இவைகளே வழிகாட்டி வருகின்றன.
* நமது அரசியலமைப்பு, சுதந்திரமான நீதித்துறையை வழங்குகிறது. இந்திய உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் சட்டங்களை நீதிப் புனராய்வு செய்யும் அதிகாரம் பெற்றுள்ளன.
* ஒரு சட்டம் அரசியலமைப்புக்கு உட்பட்டது அல்லது புறம்பானது என்று தீர்ப்பு வழங்கத்தக்க அதிகாரத்திற்கே நீதிப் புனராய்வு என்று பெயர்.
* அரசியலமைப்பின் காவலனாக நீதித்துறை விளங்குகிறது. இந்திய குடிமக்களின் உரிமை களையும் சுதந்திரங்களையும் நீதித்துறை இதன் மூலம் பாதுகாக்கிறது.
* இந்திய அரசியலமைப்பு வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை வழங்க உறுதியளிக்கிறது.
* பதினெட்டு வயது நிரம்பிய ஒவ்வொரு குடிமகனும், சாதி, மதம், நிறம், பாலினப் பாகுபாடு இன்றி தேர்தலில் வாக்களிக்க உரிமை பெற்றுள்ளனர்.
No comments :
Post a Comment