டிசம்பர் 2011 முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு
* சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கும் மத்திய மந்திரிசபையின் முடிவை எதிர்த்து நாடு முழுவதும் கடையடைப்பு நடைபெற்றது. தமிழ்நாட்டிலும் கடைகளை அடைத்த வியாபாரிகள், உண்ணாவிரதம், உறுதிமொழி ஏற்பு போன்ற போராட்டங்களை நடத்தினர். (டிசம்பர் 1)
* முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதிய பிரதமர் மன்மோகன்சிங், இரு மாநில அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாகவும், அதற்கு ஒத்துழைப்புத் தருமாறும் வேண்டுகோள் விடுத்தார். (டிசம்பர் 1)
* முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதிய பிரதமர் மன்மோகன்சிங், இரு மாநில அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாகவும், அதற்கு ஒத்துழைப்புத் தருமாறும் வேண்டுகோள் விடுத்தார். (டிசம்பர் 1)
* முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு வீண் வதந்திகளைப் பரப்பி வருவதை நிறுத்த உத்தரவிடுமாறு சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய தீர்ப்பின்படி, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அனுமதிக்க வேண்டும் என்று கேரள முதல்-மந்திரி உம்மன் சாண்டிக்கு தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதமும் எழுதினார். (டிசம்பர் 1)
* ஒடிசா மாநிலம் பாலசோரில் `அக்னி-1' ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது. (டிசம்பர் 1)
* குஜராத்தில் 2004-ம் ஆண்டு இளம்பெண் இஷ்ரத் ஜகான் மற்றும் 3 பேர் கொல்லப்பட்ட போலி என்கவுண்டர் வழக்கை விசாரிக்க சி.பி.ஐ.க்கு குஜராத் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. (டிசம் பர் 1)
* முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் தமிழக அரசு பங்கேற்காது என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி அறிவித்தார். (டிசம்பர் 3)
* தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் 28 பேருடன் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தமிழக கவர்னர் ரோசய்யாவை சந்தித்தார். அப்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தக் கோரி மனு கொடுத்தார். (டிசம்பர் 3)
* மணிப்பூர் தலைநகர் இம்பாலில் புதிய சட்டசபைக் கட்டிடத்தை பிரதமர் மன்மோகன்சிங் திறந்து வைத்தார். (டிசம்பர் 3)
* சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை நிறுத்தி வைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜனார்த்தன் திவிவேதி தெரிவித்தார். (டிசம்பர் 3)
விளையாட்டுச் செய்திகள்
* டெல்லி மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் எத்தியோப்பிய வீரர் லெலிசா டெசிசா, கென்ய வீராங்கனை லூசி கபு ஆகியோர் முதலிடம் பிடித்தனர். (நவம்பர் 27)
* கட்டாக்கில் வெஸ்ட் இண்டீஸ் உடனான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் `த்ரில்' வெற்றி பெற்றது. (நவம்பர் 29)
* விசாகப்பட்டினத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியிலும் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. 10-வது பேட்ஸ்மேனாக இறங்கி 86 ரன்கள் குவித்ததன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரவி ராம்பால் புதிய உலக சாதனை படைத்தார். (டிசம்பர் 2)
கர்நாடகாவில் பெல்லாரி கிராமப்புறத் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட முன்னாள் மந்திரி ஸ்ரீராமுலு வெற்றி பெற்றார். ஆளுங்கட்சியான பாரதீய ஜனதா டெபாசிட்டை இழந்தது. (டிசம்பர் 4)
முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாக்க உடனடியாக மத்திய போலீஸ் படையை அனுப்பி வைக்கும்படி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. (டிசம்பர் 5)
முல்லைப் பெரியாறு அணையில் நேரில் ஆய்வு நடத்த, சுப்ரீம் கோர்ட்டு நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான குழு முடிவு செய்தது. (டிசம்பர் 5)
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவை நிறுத்தி வைப்பதாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு அறிவித்தது. (டிசம்பர் 7)
ஆந்திர மாநில அரசு சார்பில் வேலூர் மாவட்ட எல்லையில் பாலாற்றின் குறுக்கே ரூ. 65 கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணி தொடங்கியது. (டிசம்பர் 7)
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ப. சிதம்பரத்துக்கு எதிராக சாட்சியம் அளிக்க ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமிக்கு டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டு அனுமதி அளித்தது. இந்நிலையில், ப.சிதம்பரம் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. (டிசம்பர் 8)
தமிழகத்தில் மீன்பிடி தடை மண்டலத்தை ஏற்படுத்தும் முடிவை இந்தியக் கடலோரக் காவல் படை வாபஸ் பெற்றது. (டிசம்பர் 8)
கர்நாடகத்தில் சுரங்க முறைகேடு தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா, முன்னாள் முதல்-மந்திரிகள் தரம்சிங், எச்.டி. குமாரசாமி ஆகியோர் மீது லோக் அயுக்தா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். (டிசம்பர் 8) -->
கொல்கத்தாவில் `ஆம்ரி' தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகியும், மூச்சுத் திணறியும் 89 நோயாளிகள் இறந்தனர். இதுதொடர்பாக மருத்துவமனை நìர்வாகிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். (டிசம்பர் 9)
தமிழக அமைச்சரவையில் இருந்து அமைச்சர்கள் எம். பரஞ்சோதி, செல்வி ராமஜெயம் ஆகிய 2 பேர் நீக்கப்பட்டனர். பா. வளர்மதி, எம்.எஸ்.எம். ஆனந்தன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். (டிசம்பர் 9)
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கு கேரள சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும் என்றும் அத்தீர்மானத்தில் கூறப்பட்டது. (டிசம்பர் 9)
Chicago personal injury attorney Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia. hair removal washington dc
Tnpsc | Upsc | Group4 | Group2 | Vao | TRB | Sub-Inspector | police | Tnpsc Exam Syllabus | tamil questions answers | tamil general knowledge | model question paper :
ReplyDeleteEntrance Exam and Competitive Exam Tamil Gk books & Gk Mp3 - 100% FREE DOWNLOADS :-
http://www.tamilgk.com/
Tnpsc | Upsc | Group4 | Group2 | Vao | TRB | Sub-Inspector | police | Tnpsc Exam Syllabus | tamil questions answers | tamil general knowledge | model question paper :
ReplyDeleteEntrance Exam and Competitive Exam Tamil Gk books & Gk Mp3 - 100% FREE DOWNLOADS :-
http://www.tamilgk.com/
tan q frnd
ReplyDelete