நவம்பர் 2011 முக்கிய நிகழ்வுகள் பகுதி-2

பஞ்சாப்பில் நடந்த உலகக் கோப்பை கபடி போட்டியின் பெண்கள் இறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது. ஆண்கள் பிரிவிலும் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. (நவம்பர் 21)`டேம் 999' படத்தை தமிழகத்தில் திரையிட தமிழக அரசு தடை விதித்தது. (நவம்பர் 24)

சிங்கப்பூரில் பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், அந்நாட்டுப் பிரதமர் லீ செய்ன் லுங்கை சந்தித்தார். அப்போது, இந்தியாவில் முதலீடு செய்யுமாறு சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார். (நவம்பர் 20)

குஜராத்தில் கல்லூரி மாணவி இஷ்ரத் ஜகான் போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக சிறப்பு விசாரணைக் குழு கண்டுபிடித்தது. இதுதொடர்பாக மறுவிசாரணை நடத்துமாறு குஜராத் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. (நவம்பர் 21)

எதிர்க்கட்சிகளின் கடுமையான ரகளைக்கு இடையே உத்தரப்பிரதேசத்தை 4 மாநிலங்களாகப் பிரிக்கும் தீர்மானம் அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. (நவம்பர் 21)

மணிப்பூர், நாகலாந்து, அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. இதில் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. (நவம்பர் 21)

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து உத்தரகாண்ட் தலைநகர் டேராடூன் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 2 பெட்டிகளில் பயணம் செய்த 7 பேர் பலியானார்கள். (நவம்பர் 22)

தமிழ்நாட்டில் சொட்டுநீர்ப் பாசனத்துக்கு 100 சதவீத மானியம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். (நவம்பர் 22)

டெல்லி ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையை டெல்லி திகார் ஜெயிலுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்கு முன்னாள் மந்திரி ஆ. ராசா உள்பட குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல் செய்யவும் முடிவெடுத்தனர். (நவம்பர் 22)

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முதல் முறையாக சுரேந்திர பிபாரா, கவுதம் தோஷி, ஹரி நாயர், வினோத் கோயங்கா, சஞ்சய் சந்திரா ஆகிய 5 அதிகாரிகளை ஜாமீனில் விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. (நவம்பர் 23)
-->
முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக வேறு அணை கட்ட முயற்சிக்க வேண்டாம் என்று கேரள அரசுக்கு அறிவுரை வழங்குமாறு பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதிய கடிதத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார். (நவம்பர் 23)
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் கோர்ட்டில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் வாக்குமூலம் பெறும் பணி முடிவடைந்தது. (நவம்பர் 23)

 அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு மத்திய விவசாய மந்திரி சரத் பவார்தான் காரணம் என்று கூறி டெல்லியில் அவரைத் தாக்கிய ஹர்விந்தர்சிங் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே, ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற முன்னாள் மத்திய மந்திரி சுக்ராமை தாக்கியவர். (நவம்பர் 24)ட்டில் 53 பெருநகரங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் கால் பதிக்கும் வகையில் மல்டி பிராண்டு சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. (நவம்பர் 24)
அணை உடைவதாக உருவாக்கப்பட்ட `டேம் 999' படத்தை தமிழகத்தில் திரையிட தமிழக அரசு தடை விதித்தது. (நவம்பர் 24)

சென்னை ஐகோர்ட்டு 150-வது தொடக்க விழா நடைபெற்றது. இதில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பங்கேற்றனர். (நவம்பர் 26)

 பாகிஸ்தானுக்குள் அமெரிக்க கூட்டுப்படை ஹெலிகாப்டர்கள் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தான் ராணுவ தளபதிகள் உள்பட 28 வீரர்கள் பலியானார்கள். இதற்குப் பதிலடியாக, அமெரிக்கப் படைகளுக்கான முக்கியப் பொருட்கள் சப்ளையை பாகிஸ்தான் தடை செய்தது. (நவம்பர் 26)
முன் பக்கம் செல்ல  அடுத்த பக்கம் செல்ல

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற