December 2011 Current Events in Tamil - II டிசம்பர் 2011 முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு -II

 நார்வே நாட்டில் ஓஸ்லோ நகரில் நடைபெற்ற சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பரிசை கூட்டாக பெற்ற (இடமிருந்து வலமாக) ஏமன் நாட்டு மனித உரிமை ஆர்வலர் தவாகல் கர்மன், லைபீரிய நாட்டு சமாதான ஆர்வலர் லேமா போவீ, லைபீரியா நாட்டு அதிபர் எல்லன் ஜான்சன் சர்லீப் ஆகியோர். (டிசம்பர் 10)

ஊழலை ஒழிப்பதற்கான லோக்பால் மசோதாவை ஆய்வு செய்த நிலைக்குழுவின் அறிக்கை, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அக்குழு, லோக்பால் மசோதா வரம்புக்குள் பிரதமரைச் சேர்க்கும் விஷயத்தைப் பாராளுமன்றத்தின் முடிவுக்கே விட்டுவிட்டது. நீதிபதிகள், எம்.பி.க்களை சேர்க்கவும் மறுத்துவிட்டது. (டிசம்பர் 9)

சேவாக் உலக சாதனை
இந்தூரில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில், 40 ஆண்டு கால ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற புதிய உலக சாதனையை வீரேந்தர் சேவாக் படைத்தார்.

33 வயதான சேவாக், 7 சிக்சர், 25 பவுண்டரிகளுடன் 149 பந்துகளில் 219 ரன்கள் குவித்தார். இதன் மூலம், ஒருநாள் போட்டியில் 200 ரன்கள் குவித்த சச்சின் தெண்டுல்கரின் சாதனையை சேவாக் முறியடித்தார். (டிசம்பர் 8)

இந்தியக் குடும்பங்களிடம் தற்போது உள்ள தங்கத்தின் மொத்த மதிப்பு 95 ஆயிரம் கோடி டாலர் (ரூ. 49.40 லட்சம் கோடி) என சர்வதேச ஆய்வுச் சேவை நிறுவனமான மெக்கொயர் தெரிவித்துள்ளது. (டிசம்பர் 4)

நவம்பர் மாதத்தில் நாட்டில் கலால் வரி, சுங்க வரி மற்றும் சேவை வரி உள்ளிட்ட மறைமுக வரி வசூல் 6.36 சதவீதம் உயர்ந்து ரூ. 31,082 கோடியாக அதிகரித்தது. (டிசம்பர் 10)

சென்னை கவர்னர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், பா. வளர்மதி, எம்.எஸ்.எம். ஆனந்தன் ஆகியோர் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்றனர். முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அவர்களுக்கு கவர்னர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். (டிசம்பர் 12)

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. 3-வது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. அதில், எஸ்ஸார் குரூப் அதிபர்கள் உள்பட 5 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. (டிசம்பர் 12)

தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் நோக்கில் படம் எடுக்கவில்லை என்று சர்ச்சைக்குரிய `டேம் 999' படத்தின் இயக்குனர் சோஹன்ராய், தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ராவிடம் நேரில் விளக்கம் அளித்தார்.   (டிசம்பர் 12)
-->

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்கக் கோரும் கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு, கேரள அரசுக்குக் கண்டனம் தெரிவித்தது. (டிசம்பர் 13)

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர், உறுப்பினர்கள் வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, 800 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்று ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் பதில் மனு தாக்கல் செய்தனர். (டிசம்பர் 13)

தேர்வாணைய ஊழல் புகார் தொடர்பாக 3-வது கட்டமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 42 இடங்களில் சோதனை நடத்தினர். (டிசம்பர் 13)

நதிநீர் பங்கீடு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தேசிய மின் தொகுப்பு போல தேசிய நீர் தொகுப்பு (நேஷனல் வாட்டர் கிரிட்) என்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் யோசனை தெரிவித்தார். (டிசம்பர் 14)

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டும்வரை 120 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள முதல்-மந்திரி உம்மன்சாண்டி தலைமையிலான அரசியல் கட்சித் தலைவர்கள் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் வற்புறுத்தினர். (டிசம்பர் 14)

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை தொடர்பாக நடைபெற்ற தமிழக சட்டசபை சிறப்புக் கூட்டத்தில், `தமிழக உரிமையை விட்டுத் தர மாட்டோம்' என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் அனைத்துக் கட்சி ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது. (டிசம்பர் 15)
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் பிரதமர் தலையிட்டுத் தீர்வு காணுமாறு உத்தரவிட வேண்டும் என்று கேரள அரசு விடுத்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது. (டிசம்பர் 15)

புதிய அணை கட்டுவதில் உறுதியாக இருப்பதாக கேரள ஐகோர்ட்டில் அந்த மாநில அரசு மனு தாக்கல் செய்தது. (டிசம்பர் 15)

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் உலை ஒரு சில வாரங்களில் செயல்படத் தொடங்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் ரஷியாவில் அறிவித்தார். (டிசம்பர் 16) -->

ரஷியா சென்ற பிரதமர் மன்மோகன்சிங், அந்நாட்டு ஜனாதிபதி டிமித்ரி மெத்வதேவுடன் முக் கியப் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. (டிசம்பர் 16)

மேற்கு வங்காள மாநிலத்தில் கள்ளச்சாராயத்துக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 171 ஆக உயர்ந்தது. (டிசம்பர் 16)

ரூ. 14 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்ட கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயக்காமல் நிறுத்திவைக்க முடியாது என்று ரஷியாவில் இருந்து திரும்பும் வழியில் விமானத்தில் பேட்டியளித்த பிரதமர் மன் மோகன்சிங் கூறினார். (டிசம்பர் 17)

உலக அளவில் டிராக்டர்கள் தயாரிப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று மத்திய விவசாயத் துறை மந்திரி சரத்பவார் தெரிவித்தார். (டிசம்பர் 17)

டெல்லியில் நடைபெற்ற 9-வது தெற்காசிய கால்பந்து போட்டியின் இறுதி மோதலில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இந்தியா 6-வது முறையாக சாம்பியன் ஆனது. (டிசம்பர் 11) Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற