உத்தரப்பிரதேசத்தில் நான்காவது கட்டத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. லக்னோவில் ஓட்டு பதிவு செய்த முதல்-மந்திரி மாயாவதி, பகுஜன் சமாஜ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவித்தார். (பிப்ரவரி 19)
தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலி கப்பல் பாதுகாவலர்கள் 2 பேரை கேரள போலீசார் கைது செய்தனர். (பிப்ரவரி 19)
தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலி கப்பல் பாதுகாவலர்கள் 2 பேரை கேரள போலீசார் கைது செய்தனர். (பிப்ரவரி 19)
1,500 படங்களுக்கு மேல் நடித்த பழம்பெரும் நடிகை எஸ்.என். லட்சுமி மாரடைப்பால் மரணம் அடைந்தார். (பிப்ரவரி 20)
-->
தேசிய தீவிரவாதத் தடுப்பு மையம் அமைக்க எதிர்ப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஜெயலலிதா, மம்தா பானர்ஜி உள்பட 7 மாநில முதல்-மந்திரிகளுக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் எழுதினார். (பிப்ரவரி 21)
சென்னையில் 2 வங்கிகளில் கைவரிசை காட்டிய 5 கொள்ளையர்களை வேளச்சேரியில் போலீசார் சுட்டுக் கொன்றனர். (பிப்ரவரி 23)
விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில் மனித உரிமை மீறலில் ஈடுபட்ட இலங்கை ராணுவத் தளபதி ஷாவேந்திர சில்வா, ஐ.நா. அமைதிப்படை குழுவில் இருந்து நீக்கப்பட்டார். (பிப்ரவரி 23)
`இஸ்ரோ' முன்னாள் தலைவர் மாதவன் நாயர் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரபல விண்வெளி விஞ்ஞானி ரோத்தம் நரசிம்மா தனது விண்வெளி கமிஷன் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். (பிப்ரவரி 24)
நிïசிலாந்தின் ஹாமில்டனில் நிïசிலாந்து- தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெற்ற 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், தென்ஆப்பிரிக்க வீரர் ரிச்சர்ட் லெவி, அதிவேக சதம், அதிக சிக்சர்கள் என்று புதிய உலக சாதனைகள் படைத்தார். இப்போட்டியில் தென்ஆப்பிரிக்கா வென்றது. (பிப்ரவரி 19)
-->
டெல்லியில் ஒலிம்பிக் தகுதிச் சுற்று ஆக்கி போட்டியில் ஆண்கள் பிரிவில் பிரான்சை தோற்கடித்து இந்தியா `ஹாட்ரிக்' வெற்றியைப் பெற்றது. பெண்கள் பிரிவில் போலந்தை வென்றது. (பிப்ரவரி 21)
ஒலிம்பிக் தகுதிச் சுற்று ஆக்கி போட்டியில் ஆண்கள், பெண்கள் இரு பிரிவுகளிலும் இந்திய அணிகள் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன. (பிப்ரவரி 24)
ஒலிம்பிக் தகுதிச் சுற்று இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்காவிடம் தோற்ற இந்திய மகளிர் அணியின் ஒலிம்பிக் கனவு தகர்ந்தது. (பிப்ரவரி 25)
* திபெத்தின் தென்பகுதிதான் அருணாசல பிரதேசம் என்ற சீனாவின் கருத்தை மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.எம். கிருஷ்ணா நிராகரித்தார். (பிப்ரவரி 26)
* 84-வது ஆஸ்கார் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. `தி ஆர்ட்டிஸ்ட்' என்ற கருப்பு-வெள்ளை படத்துக்கு 5 ஆஸ்கார் விருதுகள் கிடைத்தன. (பிப்ரவரி 27)
* தற்கொலை தாக்குதல் மூலம் ரஷிய பிரதமர் புதினை கொலை செய்ய நடந்த சதி முறியடிக்கப்பட்டது. இதுதொடர்பாக செசன்ய தீவிரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். (பிப்ர வரி 27)
* தமிழ்நாடு மாநில உயர்கல்வி கவுன்சில் துணைத் தலைவராக சிந்தியா பாண்டியன் நியமிக்கப்பட்டார். (பிப்ரவரி 28)
* டெல்லி வந்த சீன வெளியுறவுத் துறை மந்திரி யங்-ஜெக்சி பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசினார். (மார்ச் 1)
-->
* ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணியின் அலுவலகம் ஒட்டுக் கேட்கப்பட்டது குறித்து மத்திய உளவுத்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. (மார்ச் 2)
* இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் விக்ரம் சிங் நியமிக்கப்பட்டார். (மார்ச் 3)
நம் நாட்டில் பொறியியல் பட்டதாரிகளில் 25 சதவீதம் பேருக்கு மட்டுமே உடனடியாகப் பணியில் அமர்வதற்கான தகுதி உள்ளது என தெரியவந்துள்ளது. (பிப்ரவரி 26)
trb new, govt job, tnpsc, result, model question paper, online test, insurance, car, baby, teacher post, Bank Jobs, test, Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal USA JOBS, singapore, work at home, Government Jobs, USA.gov, Singapore Jobs, govt job, hair remover
sir, u gave only 6th and 10 th science important notes.but i need all 6th to 10th imprtnt notes except english.y becaus the book collection is very tough.so this type of pdf format very useful to all tnpsc preparing students.
ReplyDelete