# இடைக்கால பக்தி இயக்கம் Part-II


மீராபாய்:
  • மீராபாய் ராஜபுத்திர இளவரசி ஆவார்.
  • இவர் தற்போதைய ராஜஸ்தானில் பிறந்தவர்.
  • கிருஷ்ணரிடம் மிகுந்த ஈடுபாடு குழந்தைப் பருவம் முதலே ஏற்பட்டது.
  • தம் கோட்பாடுகளை வட்டார மொழியான பிரிஜ் மொழியில் பரப்பினார்.
  • இவர் குரு ரவிதாசரின் சீடராவார்.
  • உயர்விற்கு காரணம் செயல் என்னும் கருத்தைப் பரப்பினார்.இவரது பக்திப் பாடல்கள் இனிமையானவை.

சைதன்யர்:
  • வங்காள மாநிலத்தில் பக்தி நெறியைப் பரப்பிய இவர் ஸ்ரீசைதன்ய மகாபிரஷ் என்று அழைக்கப்பட்டார்.
  • கிருஷ்ண அல்லது ஹரி என அழைக்கப்படும் புருஷோத்தமன் மேல் ஆழ்ந்த நம்பிக்கையும் அன்பும் கொள்ள வேண்டும் என்பது இவரது கருத்து.

துக்காராம்:
  • இவர் மஹாராஷ்டிர ஞானி.
  • இல்வாழ்வைத் துறந்து பக்தனாகவும், சீர்திருத்தவாதியாகவும் செயல்பட்டார்.
  • மாராட்டிய மக்களிடம் நாட்டிப்பற்றை வளர்க்க சிவாஜி காலத்தில் வாழ்ந்த இவரது போதனைகள் உதவின.
  • சிவாஜி இவரது சீடர்களில் ஒருவர். சைதன்யரைப் போன்று பக்திப் பாடல்களை இயற்றியுள்ளார்.

துளசிதாசர்:
  • தத்துவஞானி, பாடலாசிரியர், இசையமைப்பாளர்.
  • சிறந்த வைணவ பக்தராகவும் ஆசார்யராகவும் போற்றப்படுகிறார்.
  • பதினாறாம் நூற்றாண்டில் இந்தியில் இராமாயணத்தினை, 'இராமன் சரித மானஸ்' என்கிற  பெயரில் எழுதினார்.

பசவர்:

  • கன்னட மாநிலத்தில் தோன்றியவர்.
  • சாளுக்கிய மன்னரிடம் அமைச்சராகப் பணியாற்றியவர்.
  • இந்நெறி சிவனை மட்டுமே கடவுளெனக் கருதியது.
  • சாதிப்பாகுபாடு, சடங்கு, உருவ வழிபாடு இவற்றை களைவதில் பெரிதும் ஈடுபட்டார்.
  • தம்மைப் பின்பற்றுபவர்கள் புலால் உண்பதையும், கள் குடிப்பதையும் கைவிட வேண்டும்   என்ற கடுமையான நிபந்தனை விதித்தார்.
  • சமூக சீர்திருத்தவாதியாக விதவை மறுமணத்தை ஆதரித்தும், குழந்தை திருமணத்தை   எதிர்த்தும் செயல்பட்டார்.
  • இவரைப் பின்பற்றுவோர் லிங்காயத்துகள் என்றழைக்கப்பட்டனர்.

    சூர்தாசர்:
    • இவர் உயர்ந்த ஞானி, நல்ல சமயபரப்புநர், சிறந்த சீர்திருத்தவாதியாவார்.
    • இவர் மதுரா அருகில் 1478ல் பிறந்து 1581 வரை வாழ்ந்தார்.
    • இவர் எழுதிய சூர்சாகர் என்ற நூல் அன்பு, பக்தி இவற்றின் மேன்மையையும் கண்ணனைக்  குழந்தையாய் கருதி சித்தரிக்கும் அற்புத நிலையையும் விளக்குகிறது.
    • இவர் வாழ்வு ஒரு விளையாட்டு, வீர தீரச் செயல், ஆனால் போராட்டமன்று; ஏமாற்றம்  மிக்க கதையும் அன்று என்கிறார்.

1 comment :

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற