# திரைப்படக்கலை

திரைப்படத்தின் வரலாறு:

ஒளிப்படம் எடுக்கும் முறையை 1830ஆம் ஆண்டு கண்டுப்பிடித்த பின்னர், எட்வர்ட் மைபிரிட்சு என்ற ஆங்கிலேயர் முதலில் ஓடும் குதிரையை இயக்கப்படமாக எடுத்து வெற்றிபெற்றார்.
ஈஸ்ட்மன் என்பார் படச்சுருள் உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்தார்.
எடிசன், ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தார்.

பிரான்சிஸ் சென்கின்சு என்ற அமெரிக்கர் 1894இல் ரிச்மண்ட் என்னுமிடத்தில் இயக்கப்படத்தைப் பலரும் பார்க்கும் வகையில் வடிவமைத்தார். புதிய படவீழ்த்திகள் உருவாக, இவருடைய கருத்துகளே அடிப்படையாக அமைந்தன.

இவ்வியக்கப்படத்தில் நாட்டியம், கடல் அலைகள் கரையில் மோதல் முதலிய காட்சிகளைக் காண முடிந்தது.  இவை பேசும் படங்கள் அல்ல. ஊமைப் படங்களே.

திரைப்படம் எடுத்தல்:

நடிப்பாற்றலை எடுத்துக்கூறிச் சில நேரங்களில் தாமே நடித்தும், காட்சிகள் அமைத்தும் படம் முடியும்வரை உழைக்கும் நுண்மாண் நுழைபுலமுடையாரை இயக்குனர் என்பர்.

கதைப்படங்கள் மட்டுமின்றிக் கருத்துப்படங்கள், செய்திப்படங்கள், விளக்கப்படங்கள், கல்விப்படங்கள் எனப் பல வளர்ச்சி நிலைகளைத் திரைப்படத்துறை அடைந்துள்ளது. 

திரைப்படச்சுருள்:

திரைப்படம் எடுக்கப் பயன்படும் படச்சுருள் செல்லுலாய்டு என்னும் பொருளால் ஆனது. படம் எடுக்கப் பயன்படும் சுருள், எதிர்ச்சுருள் எனப்படும்.

படப்பிடிப்புக்கருவியில் ஓரடி நீளமுள்ள படச்சுருள் 16 படங்கள் வீதம் ஒன்றன்பின்ஒன்றாகத் தொடர்ச்சியாக எடுக்கப்படும்.

செய்திப்படம் :
உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளையே படமாக்கிக் காட்டுவது செய்திப்படமாகும்.  திரைப்படம் எடுப்பதைவிடச் செய்திப்படம் எடுப்பது கடினமான பணியாகும்

விளக்கப்படம்:

ஒரு நிகழ்வை மட்டும் எடுத்துக்கொண்டு அதைப்பற்றி விளக்கத்தையும் தருவது விளக்கப்படமாகும்.
விளக்கப்படங்களால் ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கைமுறைகளை உள்ளவாறு அறியலாம்.


கல்விப்படங்கள்:

கல்வி கற்பிப்பதற்கென உருவாக்கப்படும் படங்கள் கல்விப்படங்கள் ஆகும். பல்வகை விலங்குகளின் வாழ்க்கை, பன்னாட்டு மக்களின் வாழ்க்கை முதலியவற்றைப் படம் பிடித்துக் காட்டுவது. வாழ்கையில் நேரில் காணமுடியாக பல இடங்களையும் நேரில் பார்ப்பதைப் போலவே காட்டுவதற்குக் கல்விப்படங்கள் வழி செய்கின்றன.
கருத்துப்படம்:

    கருத்துப்படம் அமைக்கத் தொடங்கியவர் வால்ட் டிஸ்னி. இவர் ஓவியர் ஆவார்.

செய்திப்படம்:

உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளையே படமாக்கிக் காட்டுவது செய்திப்படமாகும்.  திரைப்படம் எடுப்பதைவிடச் செய்திப்படம் எடுப்பது கடினமான பணியாகும்

கலைச்சொற்களை அறிந்துகொள்வோம்
Persistence of vision - பார்வை நிலைப்பு
Dubbing - ஒலிச்சேர்க்கை
Director - இயக்குநர்
Shooting - படப்பிடிப்பு
cartoon - கருத்துப் படம்
Negative - எதிர்ச்சுருள்
Camera - படப்பிடிப்புக்கருவி
Trolly - நகர்த்தும் வண்டி
Microphone - நுண்ணொலிபெருக்கி
Projector - படவீழ்த்தி
Lense - உருப்பெருக்கி
Motion Pictures - இயங்குருப் படங்கள்
தமிழ் இலக்கிய வரலாறு-1
தமிழ் இலக்கிய வரலாறு-2
தமிழ் இலக்கிய வரலாறு-3
தமிழ் இலக்கிய வரலாறு-4
தமிழ் இலக்கிய வரலாறு-5
தமிழ் இலக்கிய வரலாறு-6
தமிழ் இலக்கிய வரலாறு-7
தமிழ் இலக்கிய வரலாறு-8
தமிழ் இலக்கிய வரலாறு-9
தமிழ் இலக்கிய வரலாறு-10
தமிழ் இலக்கிய வரலாறு-11
தமிழ் இலக்கிய வரலாறு-12
தமிழ் இலக்கிய வரலாறு-13
தமிழ் இலக்கிய வரலாறு-14
தமிழ் இலக்கிய வரலாறு-15
தமிழ் இலக்கிய வரலாறு-16
தமிழ் இலக்கிய வரலாறு-17
தமிழ் இலக்கிய வரலாறு-18
தமிழ் இலக்கிய வரலாறு-19
தமிழ் இலக்கிய வரலாறு-20
தமிழ் இலக்கிய வரலாறு-21
தமிழ் இலக்கிய வரலாறு-22
தமிழ் இலக்கிய வரலாறு-23
தமிழ் இலக்கிய வரலாறு-24
Tamil ilakkiya varalaru question and answer pdf
Tamil ilakkiya varalaru e-book 55 Pages

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற