பெயர்ச் சொல்லின் பொருளை வேறுபடுத்துவதற்கு அதன் ஈற்றில் (இறுதியில்) சேர்க்கும் சொற்கள் வேற்றுமை உருபுகள் எனப்படும். அவை, ஐ, ஆல், கு, இன், அது, கண் முதலியனவாம்.
உருபு - இது வேற்றுமையைக் காட்டும் உருவம் அல்லது அடையாளம் ஆகும். முதல் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை என்று வேற்றுமை எட்டு ஆகும். முதல் வேற்றுமை, எழுவாய் வேற்றுமை எனவும், எட்டாம் வேற்றுமை, விளிவேற்றுமை எனவும் பெயர் பெறும்.
எடுத்துக்காட்டு
உருபு - இது வேற்றுமையைக் காட்டும் உருவம் அல்லது அடையாளம் ஆகும். முதல் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை என்று வேற்றுமை எட்டு ஆகும். முதல் வேற்றுமை, எழுவாய் வேற்றுமை எனவும், எட்டாம் வேற்றுமை, விளிவேற்றுமை எனவும் பெயர் பெறும்.
எடுத்துக்காட்டு
1) முல்லை மலர்ந்தது
2) அவள் முல்லையைச் சூடினாள்
3) முல்லையால் மணம் பெற்றாள்
4) முல்லைக்கு நீர் ஊற்று
5) முல்லையின் எடுத்த இதழ்
6) முல்லையினது நறுமணம்
7) முல்லைக்கண் வண்டுகள் மொய்த்தன
8) முல்லையே! நீ மாலையில் மலர்கிறாய்!
மேலே காட்டிய எடுத்துக்காட்டுகளில் முல்லை என்னும் பெயர்ப்பொருள் எட்டுவகையாக வேற்றுமை அடைந்திருக்கிறது.
விளக்கம்
1. முல்லை மலர்ந்தது | முதல் வேற்றுமை; எழுவாய்ப் பொருள் |
2. முல்லையை | இரண்டாம் வேற்றுமை; ஐ என்பது இரண்டாம் வேற்றுமை உருபு, செயப்படுபொருள். |
3. முல்லையால் | மூன்றாம் வேற்றுமை; ஆல் : மூன்றாம் வேற்றுமை உருபு, கருவிப்பொருள். |
4. முல்லைக்கு | நான்காம் வேற்றுமை; கு : நான்காம் வேற்றுமை உருபு, கோடல்பொருள். (கொள்ளுதல்) |
5. முல்லையின் | ஐந்தாம் வேற்றுமை; இன் : ஐந்தாம் வேற்றுமை உருபு, நீங்கல் பொருள். |
6. முல்லையினது | ஆறாம்
வேற்றுமை; அது : ஆறாம் வேற்றுமை உருபு, கிழமைப்பொருள். (உடைமைப்பொருள்) |
7. முல்லைக்கண் | ஏழாம்
வேற்றுமை; கண் : ஏழாம் வேற்றுமை உருபு, இடப்பொருள். |
8. முல்லையே ! | எட்டாம் வேற்றுமை; விளிப்பொருள். (அழைப்பு) |
இந்த எடுத்துக்காட்டுகளில் முதல் வேற்றுமைக்கும், எட்டாம் வேற்றுமைக்கும் வேற்றுமை உருபுகள் இல்லை. மற்றவற்றில் அவ்வுருபுகள் பெயர்ச்சொல்லின் இறுதியில் வந்து பெயர்ப்பொருளை வேறுபடுத்தின.
இத்தொடர்களில் மூன்று உறுப்புகள் உள்ளன.
1) வேற்றுமையை ஏற்ற பெயர்
2) வேற்றுமை உருபு
3) பயனிலை
இம் மூன்றின் துணை கொண்டே வேற்றுமையை அறிதல் வேண்டும்.
முந்தைய பக்கம் செல்ல அடுத்த பக்கம் செல்ல
thank for update this ........... very helpful one
ReplyDelete