# உயிரினங்களின் அடிப்படை அலகு செல்

  • செல் என்பது உயிரினங்களின் அமைப்பு மற்றும் செயலின் அடிப்படை அலகாகும்.
  • 1665 ஆம் ஆண்டு இராபர்ட் ஹூக் ல்லைக் கண்டறிந்தார்.
  • 1838ஆம் ஆண்டு ஜேக்கப் ஸ்லீடன் மற்றும் தியோடர் ஷீவான் ஆகியோர்
    இணைந்து செல் கொள்கை ஒன்றை உருவாக்கினார்கள்.

    அக்கருத்துகள் பின்வருமாறு :

    1) அனைத்து உயிரினங்களும் செல்களால் ஆனவை.
    2) அனைத்துச் செல்களும் முந்தைய செல்களில் இருந்தே உருவாகின்றன.

    செல்கள் வடிவம்:
    பொதுவாகச் செல்கள் வட்டமாகவோ, கோள வடிவமாகவோ நீளமாகவோ காணப்படும்.

    செல் வடிவம்
    நரம்பு செல் நட்சத்திரம் வடிவம்
    சுடர் செல் குழல் வடிவம்
    சுரப்பி செல் கனசதுரம் வடிவம்
    தட்டு எபிதீலியம் பல்கோணம் வடிவம்
    தூண் எபிதீலியம் உருளை வடிவம்
    அண்டச் செல் முட்டை வடிவம்
    இரத்தச் செல்கள் வட்ட வடிவம்
    தசை, நார் செல் நீள்வடிவம்

செல்லின் சைட்டோபிளாசத்தில் பரவிக் காணப்படும் உயிருள்ள பொருள்களுக்குச் செல் நுண்ணுறுப்புகள் என்று பெயர்.

செல் நுண்ணுறுப்புகளும் அவற்றின் பணிகளும்:

1. எண்டோபிளாஸ்மிக் வலைப்பின்னல்
(அகப்பிளாச வலைப்பின்னல்)
2. ரைபோசோம்
3. கோல்கை உறுப்புகள்
4. லைசோசோம்
5. மைட்டோகாண்ட்ரியா
6. சென்டிரியோல்கள்

1945 இல் போர்ட்டர் தமது மின்னணு நுண்ணோக்கியினால் செல்லை ஆராயும்
போது எண்டோபிளாஸ்மிக் வலைப்பின்னலை கண்டறிந்தார். 

2009 ஆம் ஆண்டு மூன்று அறிவியல் அறிஞர்கள் ரைபோசோமின் வேதியியல் அமைப்பினை ஆராய்து 2009 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசினைப் பெற்றனர். இதில் குறிப்பாக வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் இந்தியாவில் பிறந்த, அமெரிக்கா வாழ் விஞ்ஞானி ஆவார். மற்றவர்கள், தாமஸ் ஸ்டெய்ஸ் (அமெரிக்கா)  அடாயத் (இஸ்ரேல்) ஆவர்.

லைசோசோம்கள், செல்லில் உள்ள கழிவுப் பொருள்களை வெளியேற்றும் ஒரு வகை அமைப்பாகும்.  இவை அடர்த்தியான பொருள்களைக் கொண்ட உருண்டை வடிவமானவை.
-->
லைசோசோம்களின் பணிகள்:

  1. செல்லில் உள்ளே வரும் அயல் பொருள்களையும் செல்லில் இறந்த பகுதிகளையும் சிதைத்து வெளியேற்ற உதவுகிறது.
  2. ஒரு செல் சிதைவடையும்போது லைசோசோம்கள் வெடித்து வெளிவரும். அவற்றின் நொதிகள், சிதைவடைந்த செல் பகுதிகளை ஜீரணிக்கின்றன. தாம் இருக்கும் செல்லைத் தானே ஜீரணிப்பதால் லைசோசோம்கள் தற்கொலைப் பைகள் எனப்படும்.

மைட்டோகாண்டிரியா:

பெரும்பாலான செல்லின் சைட்டோ பிளாசத்தில் இழை, வட்ட அல்லது குச்சி வடிவம் கொண்டு காணப்படும் உறுப்பு மைட்டோகாண்டிரியா ஆகும். இவை புரதத்தால் ஆன இரட்டைச் சவ்வால் சூழப்பட்டுள்ளன. வெளிச் சவ்வானது ஒரு பை போன்று காணப்படும். உட்சவ்வானது விரல் போன்ற நீட்சியை உட்புறமாக உருவாக்குகிறது. இதற்குக் கிரிஸ்டே என்று பெயர்.

பணி:

இது செல் சுவாசத்தில் பெரும்பங்கு வகித்துச் சக்தியை உருவாக்கும் ஆற்றல் மையமாக இருப்பதால், இது செல்லின் ஆற்றல் நிலையம் என அழைக்கப்படுகின்றது. செல் சுவாசத்தலின்போது ஆற்றலை ATP (அடினோசைன் ட்ரை பாஸ்பேட்) என்னும் கூட்டுப்பொருளாக இது உருவாக்கியும், சேமித்தும் வருகின்றன.

சென்ட்ரியோல்கள்:

சென்ட்ரியோல்களைப் பற்றி 1897ஆம் ஆண்டு ஹென்னிகை லுகஸ்செக் என்பவர்களால் விளக்கப்பட்டது. இவை விலங்குச் செல்களில் உட்கருவிற்கு அருகில் நுண்ணிய குழல் வடிவிலோ குச்சி வடிவிலோ காணப்படும். இவை செல்பிரிதலின்போது கதிர்இழை நார்களையும், ஆஸ்ட்ரல் உறுப்புகளையும் உருவாக்கிச் செல் பிரிதலைத் திட்டமிடுகின்றன.

இரத்தச் செல்கள்:

இரத்தச் செல்கள் மூன்று வகைப்படும்.

அவை
1 இரத்தச் சிவப்பு அணுக்கள் (எரித்ரோசைட்டுகள்)

2 இரத்த வெள்ளை அணுக்கள் (லீயூக்கோசைட்டுகள்)

3 இரத்தத் தட்டுகள் (த்ரோம்போசைட்டுகள்)

read more & download pdf

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற