லட்சியப் பணியினைப் பெறுவதற்கு
ஒவ்வொருவரும் பெற்றிருக்க வேண்டிய தகுதிகள் ஏராளம். அவற்றில் முக்கியமானது
உடல்மொழி.
நேர்முகத் தேர்வுகள், பெரும்பாலும் பெர்சனாலிட்டி எனும் ஆளுமைத்திறனை சோதிக்கும் விதமாகவே அமைகிறது. எனவே நமது அங்க அசைவுகள், ஆடைத் தேர்வு உள்ளிட்ட உடல்மொழி மிக அவசியமான கருதப்படுகிறது. நேர்முகத் தேர்வில் விண்ணப்பதாரரின் மதிப்பை உயர்த்தும் உடல்மொழி ரகசியங்களை இங்கே பார்ப்போம்.
* நல்ல உடற் தூய்மையுடன், நேர்த்தியான உடை அணிந்து நேர்காணலுக்குச் செல்ல வேண்டும்.
* இருக்கையில் அமரும்போது லேசாக சாய்ந்த நிலையில் நேராக நிமிர்ந்து அமர்வது அவசியம். அந்த தோரணையே நீங்கள் நேர்காணலுக்குத் தயாராகவும், உங்கள் திட்டத்தை விளக்கும் துடிப்புடன் இருப்பதையும் நேர்முக அதிகாரிக்கு உணர்த்தும் படியாக இருக்கும்.
* உற்சாகம் உங்கள் உணர்வுகளில் ஊற்றெடுக்க வேண்டும். துறுதுறுப்புடன் காணப்பட வேண்டும்.
* தலை அசைவு மற்றும் சைகைகள் அனைத்தும் நேர்மறை உணர்வுகளைவெளிப்படுத்துவதாக அமைய வேண்டும். தலையை குனிந்து கொள்வது,பக்கவாட்டில் பார்த்துக் கொண்டு பதில்சொல்வது போன்றவை வேண்டாம்.
* நேர்முக அதிகாரிக்கும் உங்களுக்கும் போதிய இடைவெளி விட்டு அமர்ந்து கொள்ள வேண்டும். இது உரையாடலில் கவனம் செலுத்த வசதியாக இருக்கும். நெருக்கமாக அமர்ந்தால் இடையூறாக தோன்றி கவனச்சிதறலை உருவாக்கும்.
* வாசனைத் திரவியங்களை அளவோடு பயன்படுத்த வேண்டும். உங்களுக்கு விருப்பமான வாசனை, நேர்காணல் அதிகாரிக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். மற்றவர்களை கவர்ந்திழுக்கும் என்ற எண்ணத்தில் அதிகப்படியான வாசனைத் திரவியத்தை தெளித்துச் செல்லாதீர்கள்.
* ஒன்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேர்முக பரிசோதனையில்ஈடுபட்டால், உங்கள் விளக்கங்கள் மிகச் சுருக்கமாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும். கேள்வி கேட்பவரை நோக்கி உங்கள்முகத்தை திருப்பிக் கொண்டு அவரது முகம் பார்த்து பதிலளிக்க வேண்டும்.
* நேர்காணலில் இடைமறித்து கேள்விகள் கேட்கப்படலாம்.அப்போது ஒரே விளக்கத்தை மீண்டும் முதலில் இருந்தோ அல்லது கேள்விக்கேற்ற பகுதியில் இருந்தோ திரும்ப ஆரம்பிக்க நேரிடும். இது உங்கள் எண்ண ஓட்டத்தையும், ஆளுமைத் தன்மையையும்சோதிக்கும் முறையாக அமைவதால் கவனமாக பதிலளிக்க வேண்டும்.
* போன் இன்டர்வியூவாக இருந்தால் நின்று கொண்டு பதிலளிப்பது நல்லது. இது உங்களை விழிப்புணர்வாக இருக்கச் செய்யும்.
* கேள்விகளுக்கு தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் நிதானமாக பதிலளிக்க வேண்டும். நேர்காணல் நிறைவடையும்போது நன்றி தெரிவித்து கைகுலுக்கி விடை பெறலாம். நேர்காணல் அரங்கத்தை காலி செய்யும் வரை உங்கள் நடை மற்றும் பாவனைகள் நேர்த்தியாக இருக்க வேண்டும்.
படிக்கட்டில் இறங்குவது, தலையில் குல்லா அணிவது, ஹெட்போன் மாட்டிக் கொள்வது, போன் அழைப்புக்கு பேசுவது என அனைத்து நடவடிக்கைகளையும் நேர்காணல் அதிகாரிகள் கவனிக்கக்கூடும். இவற்றில் வேடிக்கையான கண்ணியக் குறைவான நடவடிக்கைகள் தென்பட்டாலும், உங்கள் நேர்காணல் மதிப்பு குறையும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
தவிர்க்க வேண்டியவை:
* இருக்கையில் அமரும்போது கோணலாக அமர்வது கூடாது. கழுத்து, தலைப்பகுதியை சொரிந்து கொண்டிருப்பதும், சுளுக்கு பிடித்தாற் போல நெளித்துக் கொண்டிருப்பதும் கூடாது.
* மூக்கை நோண்டிக் கொண்டிருப்பதை தவிர்க்க வேண்டும்.
* கைகளை மார்பகத்தின் குறுக்காக கட்டிக் கொண்டிருக்க வேண்டாம்.
* கால்களை ஒன்றுக்கொன்று குறுக்காக வைத்திருப்பதையும், காலாட்டிக் கொண்டிருப்பதையும் தவிர்க்க வேண்டும்.
* இருக்கையின் விளிம்பில் அமர்வதோ, படுத்திருப்பதுபோல் சுகமாக சாய்ந்திருப்பதோ கூடாது. இது விருப்பமில்லாமலும், தேர்வுக்கு தயார் நிலையில் இல்லாததையும் வெளிக்காட்டும்.
* கண்களை அடிக்கடி சிமிட்டிக் கொண்டும், குறுகுறுவென பார்த்தபடியும் அமரக்கூடாது.
மேற்காணும் உடல்மொழிகள் நேர்முகத் தேர்வில் உங்கள் மதிப்பை உயர்த்தி, உங்கள் கனவுப் பணியை பெற்றுத் தர உதவியாக இருக்கும்!

Good Thanks
ReplyDelete