தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், 2011 நடுவணரசால் இந்தியாவில் வாழும் இந்திய குடிமக்களுக்கு தாங்கள் வாழ்வதற்கு தேவையான தரமான, போதுமான, பாதுகாப்பான உணவினை அவர்களுக்கு நியாயவிலைக்கடைகள் மூலமாகவோ அல்லது அவர்களுக்கு நேரடியாக பணமாக வழங்கியோ அவர்களின் பொருளாதாரம் மற்றும் சமூக நலனை காக்கும் வகையில் வரையப்பட்ட சட்டம் ஆகும்.
இச் சட்டம் 12 செப்டம்பர் 2013 அன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் முக்கிய நோக்கம் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 63.5% மக்களுக்கு (தோராயமாக 1.2 பில்லியன் மக்களுக்கு) கோதுமை அல்லது அரிசியை சலுகை விலையில் வழங்குவது ஆகும். இந்த சட்டத்தின் மூலம் பயனாளிகள் தனி நபர் ஒருவருக்கு 5 கிலோ தானியங்களை பின்வரும் விலையில் வாங்கிக்கொள்ள முடியும்.
1. அரிசி- 3 ரூ/ கிலோ
2. கோதுமை- 2 ரூ/ கிலோ
3. சிறு தானியங்கள்(தினை)- 1 ரூ/ கிலோ
மற்றும் இத்திட்டத்தின் மூலம் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள் மற்றும் சில குழந்தைகள் தினசரி இலவச உணவு பெறும் தகுதி பெறுகின்றனர்.
சில முக்கிய சிறப்பம்சங்கள்:
1. 75% கிராமப்புற மக்கள் மற்றும் 50% நகர்புற மக்கள் இத்திட்டத்தின் மூலம் மூன்று ஆண்டுகளுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் பெற உரிமை பெறுகின்றனர்.
2. பயனாளிகளின் தகுதிகளை தீர்மானிக்கும் பொறுப்பு மாநில அரசின் பொறுப்பு ஆகும்.
3. கர்ப்பிணி பெண்கள், தாய்மார்களுக்கு இத்திட்டத்தின் முலம் 600 கலோரி கொண்ட சத்தான உணவு 6 மாதங்களுக்கு கிடைக்க வழிவகை செய்கின்றது.
4. 6 மாத வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக சத்தான உணவு வழங்குவதை உறுதிசெய்கின்றது.
5. உணவு தானியங்கள் விநியோகம் குறையும் போது மத்திய அரசானது மாநில அரசுக்கு நிதி வழங்க வேண்டும்.
6. இத்திட்டத்தை செயல்படுத்த மற்றும் கண்காணிக்க மாநில உணவு பாதுகாப்பு ஆணைக்குழு ஒன்றை அமைக்க வேண்டும்.
உணவு பாதுகாப்பு மசோதாவில் உள்ள முக்கியச் சிக்கல்கள்:
1. பயனாளிகள் தேர்வு செய்வது பற்றி குறிப்பிடவில்லை
2. உணவுப் பொருட்களைச் சேமித்து வைப்பதற்கு போதிய அளவில் கட்டமைப்பு வசதி மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் இல்லாத நிலையில் , தானியங்களை வருடங்கள் முழுவதும் எப்படி பாதுகாத்து மக்களுக்கு வழங்குவது என்று குறிப்பிடவில்லை.
3. போர்க் காலம், வெள்ளப் பெருக்கு, வறட்சி, புயல் பாதிப்பு, நிலநடுக்கம் போன்ற சூழ்நிலைகளில் மக்களுக்கு உணவு அளிப்பதற்கு இந்தச் சட்டத்தில் இடமில்லை.
4. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் மக்களுக்கு தற்போது குறைந்த விலையில் உணவு தானியங்களை வழங்கி வருகிறது. இச்சட்டத்தின் மூலம் அது பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
5. திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான தோராய செலவு, ஜிடிபியில் இருந்து 1.1% வரை ஆகும். ஆனால் அரசால் இந்த அளவுக்கு நிதி ஒதுக்கமுடியுமா என்று தெரியவில்லை.
No comments :
Post a Comment