தொகைச்சொற்கள்
இருமை
இம்மை, மறுமை
இருவினை
நல்வினை, தீவினை
இருதிணை
உயர்திணை, அஃறிணை
இருசுடர்
ஞாயிறு, திங்கள்
ஈரெச்சம்
வினையெச்சம், பெயரெச்சம்
மூவிடம்
தன்மை, முன்னிலை, படர்க்கை
முந்நீர்
ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர்
முப்பால்
அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்
முத்தமிழ்
இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்
முக்காலம்
இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்
மூவேந்தர்
சேரன், சோழன், பாண்டியன்
முக்கனி
மா, பலா, வாழை
நான்மறை
ரிக், யசூர், சாம, அதர்வணம்
நாற்குணம்
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு
நாற்படை
தேர், யானை, குதிரை, காலாள்
நாற்றிசை
கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, நாற்பால்
நானிலம்
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்
நாற்பால்
அரசர், அந்தணர், வணிகர், வேளாளர்
நால்வகை பாக்கள்
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா
ஐம்பால்
ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
ஐம்பெரும் பொருள்கள்
நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம்
ஐந்தொகை
முதல், வரவு, செலவு, இருப்பு, ஆதாயம்
ஐந்திலக்கணம்
எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
ஐந்திணை
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
அன்பின் ஐந்திணை
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
ஐவகை பாக்கள்
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா
ஐம்பெருங்காப்பியங்கள்
சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி
ஐஞ்சிறு காப்பியங்கள்
நாககுமார காப்பியம், உதயணகுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி
ஐம்புலன்
ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை
ஐம்பொறிகள்
மெய், வாய், மூக்கு, கண், செவி
அறுசுவை
இனிப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு
எண்வகை மெய்ப்பாடுகள்
நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை
எழுவகை பெண்பால் பருவப்பெயர்கள்
பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்
கடையேழு வள்ளல்கள்
பேகன், பாரி, காரி, ஆய், அதிகன், நள்ளி, ஓரி
மலரின் பருவங்கள் 7
அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல்
அகத்திணை 7
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை
நவரத்தினங்கள்
கோமேதகம், நீலம், பவளம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைரம், வைடூரியம்
பன்னிரெண்டு இராசிகள்
1.மேஷம், 7.துலாம்
2.ரிஷபம் 8.விருச்சிகம்
3.மிதுனம் 9.தனுசு
4.கடகம் 10.மகரம்
5.சிம்மம் 11.கும்பம்
6.கன்னி 12.மீனம்
புறத்திணை-12
வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை
sir where can i get the VAO syllabus original material
ReplyDelete