முதலான, முதலிய, ஆகிய - இச்சொற்களின் பயன்பாடு

Samacheer Kalvi 9th tamil book Study material
ஒரு தொகுப்பில் உள்ளவற்றைச் சுட்டும்போது முதன்மையானதனை மட்டும் சுட்டி, அதனோடு தொடர்புடைய பிறவற்றைச் சுட்டாதபோது ‘முதலான’ (அது தொடங்கி) என்னும் சொல்லைப் பயன்படுத்துதல் வேண்டும்.
(எ.கா.)
நாம் ஒழுக்கத்தில் சிறந்து விளங்க திருக்குறள் முதலான அறநூல்களைக் கற்றல் வேண்டும்.

ஒரு தொகுப்பில் உள்ளவற்றில் அனைத்தையும் சுட்டாது, அதனோடு தொடர்புடைய சிலவற்றையோ பலவற்றையோ மட்டும் சுட்டும்போது ‘முதலிய’ என்னும் சொல்லைப் பயன்படுத்துதல் வேண்டும்.
(எ.கா.)
நாம் பண்பாட்டில் சிறந்து விளங்க நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு முதலிய எட்டுத்தொகை நூல்களைக் கற்றல் வேண்டும்.

ஒரு தொகுப்பில் உள்ளவற்றில் அதனோடு தொடர்புடைய அனைத்தையும் முழுமையாகச் சுட்டும்போது ‘ஆகிய’ என்னும் சொல்லைப் பயன்படுத்துதல் வேண்டும்.
(எ.கா.) 
இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழைப் போற்றி வளர்த்தல் வேண்டும்.

1 comment :

Pages (150)12345 Next
Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற