ஐந்தாண்டுத் திட்டங்கள்
ஐந்தாண்டு திட்டங்கள்
|
ஆண்டு
|
திட்டத்தின் நோக்கம்
|
1 | 1951 - 1956 |
உணவு உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது.
விவசாயம் மற்றும் சமுதாய மேம்பாடு, பாசனம் மற்றும் மின்னுற்பத்தி, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புத் துறை, சமூக சேவைகள் மற்றும் புனர்வாழ்வு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துதல்.
|
2 | 1956 - 1961 | |
3 | 1961 - 1966 |
முதல் மற்றும் இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டங்களின் நீட்சியாக இத்திட்டம் அமைந்தது. மேலும் நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தை நோக்கி இந்திய மக்களை இட்டுச்செல்லும் வழிகாட்டியாகவும் இது அமைந்தது.
|
4 | 1969 - 1974 | மக்களின் வாழ்க்கைத் தரத்தை குறிப்பாக பின்தங்கிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்.
உற்பத்தியைப் பெருக்குவது மட்டுமின்றி ஈட்டப்பட்ட செல்வத்தை மக்கள் அனைவருக்கும் சமமாகப் பிரித்து நாட்டின் செல்வமும் பொருளாதார சக்தியும் சில இடங்களில் மட்டுமே குவிந்திருக்காமல் அவற்றைப்
பரவலாக்குவது |
5 | 1974 - 1979 |
உலக அளவில், உணவுப் பொருட்கள், உரம் போன்ற விவசாய இடுபொருட்கள் மற்றும் எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் பெரிதும் உயர்ந்தன.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது அவசரத் தேவையாக இருந்தது.
1974-75 இன் மத்தியில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பிற நாடுகளின் கவனத்தை ஈர்த்தது
|
6 | 1980 - 1985 |
வறுமை, வேலை இல்லாத் திண்டாட்டம் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றைக் களைதல்.
|
7 | 1985 - 1989 |
உணவு தானிய உற்பத்தி, வேலை வாய்ப்பைப் பெருக்குதல் மற்றும் மக்களின் உற்பத்தித் திறனைப் பெருக்குதல்
|
8 | 1992 - 1997 |
அதிகமான அளவில் வேலைவாய்ப்பினை உருவாக்குவதன் மூலம் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் முழு அளவு வேலைவாய்ப்பினை எட்டுதல்
மக்களின் ஒத்துழைப்பின் மூலமும் ஊக்கத்திட்டங்கள் மற்றும் ஊக்கத்தொகைகளை விளக்கிக்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலமும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துதல்.
15 முதல் 35 வயது வரை உள்ள மக்களிடத்து காணப்படும்
எழுத்தறிவின்மையைப் போக்குதல்
அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடி நீர் வழங்குதல்,அடிப்படை மருத்துவ வசதிகளை அளித்தல், நோய் தடுப்பு முறைகளை அளித்தல் மற்றும் தோட்டிப் பணிகளை அற்வே ஒழித்தல்
விவசாய வளர்ச்சி, பல்வகைப் பயிர்களைப் பயிரிடல் மற்றும் ஏற்றுமதி செய்யக் கூடிய அளவுக்கு தானிய உற்பத்தியைப் பெருக்குதல் மின்னாற்றல், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் பாசனம் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கி வளர்ச்சிப் பணிகளைத் தடையின்றி நீடிக்கச் செய்தல்.
|
9 | 1997 - 2002 |
வேலை வாய்ப்பைப் பெருக்குதல் மற்றும் வறுமையை ஒழிப்பு ஆகியவற்றுக்காக விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளித்தல்
விலைவாசிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதே நேரத்தில் வளர்ச்சி வேகத்தை அதிகரித்தல்
அனைவருக்கும் - குறிப்பாக - பின்தங்கிய சமூகத்தினருக்கு - உணவு மற்றும் சத்துணவை உறுதி செய்தல்
அனைவர்க்கும் பாதுகாக்கப்பட்ட குடி நீர் , அடிப்படை சுகாதார வசதிகள், அடிப்படைக் கல்வி, தங்குமிடம் ஆகியவற்றை குறித்த கால வரையறைக்குள் உறுதி செய்தல்
மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துதல்
அனைத்து நிலைகளிலும் உள்ள மக்களின் ஒத்துழைப்பு மற்றும் பங்கேற்பின் மூலம் வளர்ச்சிப் பணிகளின் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப் படாமல் காத்தல்
பெண்கள் மற்றும் சமுதாயத்தில் பின் தங்கிய - அட்டவனை இன மக்கள், பிற பின் தங்கிய இனத்தவர்கள் மற்றும் சிறுபான்மை இனத்தவர் ஆகியோருக்கு அதிகாரம் வழங்குதல்
பஞ்சாயத்து ராஜ், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் ஆகியவற்றில் மக்களின் பங்களிப்பை அதிகரிக்க ஊக்கப்படுத்துதல்
சுய சார்பை உருவாக்குவதற்கான முயற்சிகளை வலுப்படுத்துதல்.
|
10 | 2002 - 2007 | வறுமையைக் குறைப்பது
வேலைவாய்ப்பைப் பெருக்குவது
2007 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் அடிப்படைக் கல்வியை எட்டச் செய்வது
மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை 16.2 விழுக்காடாகக் குறைப்பது
2007 ஆம் ஆண்டுக்குள் கல்வி ஏற்றோர் எண்ணிக்கையை எழுபத்தைந்து விழுக்காடாக உயர்த்துவது
குழந்தை இறப்பு விகிதத்தை குறைப்பது
பேறுகாலத்தில் பெண்கள் இறக்கும் விகிதத்தைக் குறைப்பது
2012 ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வழி செய்தல்
மாசு பட்ட அனைத்து ஆறுகளையும் 2007 ஆம் ஆண்டுக்குள் தூய்மைப் படுத்துவது.
|
11 | 2007 - 2012 | மொத்த உள்நாட்டு உற்பத்தியை பெருக்குதல், வேலை வாய்ப்புகளை பெருக்குதல், ஆரம்பபள்ளிகளில் வசதிகளை பெருக்குதல், குழந்தை இறப்பு விகிதத்தை குறைத்தல், அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பை வழங்குதல், வனப் பரப்பளவை பெருக்குதல். |
12
|
2012 - 2017
| பன்னிரண்டாம் ஐந்தாண்டு திட்டம் விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான கொள்கை வரைவினை இறுதி செய்யும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. |
Hi
ReplyDeleteWhat are the best study material for tnpsc group 4 exam books?
very useful material sir thanks sir
ReplyDeletevery thanks sir
ReplyDelete