மலேரியா, யானைக்கால் நோய்களில் இருந்து பாதுகாக்க புது மருந்துகள் கண்டுபிடித்ததற்காக, பெண் விஞ்ஞானி உட்பட 3 விஞ்ஞானிகள் மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
* யானைக்கால் மற்றும் பார்வை குறைபாட்டை தடுக்க கேம்பெல் மற்றும் ஓமுரா ஆகியோர் அவர்மெக்டின் என்ற புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் புதிதாக இந்நோய்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
* யூயூ டு என்ற பெண் விஞ்ஞானி அர்டமைசினின் என்ற புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளார். இந்த மருந்து மலேரியா காய்ச்சலால் இறப்பவர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்துள்ளது.
* சீனாவின் பாரம்பரிய மூலிகை மருத்துவத்தின் அடிப்படையில் மலேரியாவில் இருந்து பாதுகாக்கும் அர்டமைசினின் என்ற புதிய மருந்தை யூயூ கண்டுபிடித்துள்ளார்.
* இந்த 2 கண்டுபிடிப்புகளும் மனிதகுலத்தை பாதுகாக்கவும், சக்திமிகுந்ததாக இருக்கவும் பெரும்பங்காற்றி வருகின்றன. மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உயிரிழப்புகளை தடுக்கவும் இந்த மருந்துகள் உதவி வருகின்றன.
* டிசம்பர் மாதம் 10-ம் தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில், இம்மூவருக்கும் நோபல் பரிசுகள் வழங்கப்படும்.
* கேம்பெல் மற்றும் ஓமுரா ஆகியோர் பரிசு தொகையில் 50 சதவீதத்தை பகிர்ந்து கொள்வார்கள். மீதமுள்ள 50 சதவீத பரிசு தொகை யூயூ டுவுக்கு செல்லும் என்று சுவீடனில் உள்ள நோபல் பரிசு குழு தெரிவித்துள்ளது.
No comments :
Post a Comment