போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் நடப்புநிகழ்வுகள் பகுதிக்கு எப்படி தயார் ஆவது?

நடப்புநிகழ்வு தொடர்பான கேள்விகள் சமீபகாலமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் அதிக அளவு கேட்கப்படுகிறது. இந்த கேள்விகளுக்கு சரியான பதில் அளிப்பவர்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். எனவே நடப்பு (சமீபத்திய) நிகழ்வுகள் பகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டியுள்ளது. 
 
நடப்பு நிகழ்வுகள் பகுதிக்கு எந்த புத்தகம் அல்லது செய்தித்தாள் படிப்பது? எப்படி தயார் ஆவது என்று பலரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்தப் பதிவினை வழங்குகிறேன்.

இந்து தமிழ், தினமணி படித்தால் 20% வினாக்களுக்குத் தான் விடையளிக்க முடியும். அதுவும் உறுதி இல்லை. எனவே நாமே குறிப்பு எடுத்து படிப்பது தான் தீர்வு.

எவ்வாறு குறிப்பு எடுப்பது : -

பாடத்திட்டத்தில் இரண்டாவது அலகை எடுத்து கொள்ள வேணடும்.

கீழ்கண்ட தளங்களை தினம் 30 நிமிடங்கள் ஒதுக்கி பார்வை இட வேண்டும்.
Dinamani
India today
All India Radio
The Hindu
Zee News
Indian Express
Deccon Cronicle

மேற்குறிப்பிட்ட தளங்களில் நமது பாடத்திட்ட அடிப்படையிலான செய்திகளை ஆங்கிலத்திலோ தமிழாக மொழிமாற்றியோ குறிப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக அரசாங்கங்களின் முக்கிய திட்டங்கள், நியமனங்கள், செய்திகளில் இடம் பிடிக்கும் பிரபல நபர்கள். இதுபோன்று.

இதுபோக மேற்சொன்ன தளங்களின் முகநூல் பக்கங்கள், ISRO, DRDO, NASA போன்ற முக்கிய நிறுவனங்களின் முகநூல் பக்கங்களையும் பார்வையிட்டு குறிப்பு எடுக்க வேண்டும்.

இது போக
1. பொது அறிவு உலகம்
2. எக்ஸாம் மாஸ்டர் ஆகிய மாத இதழ்கள் படித்தால் உதவியாக இருக்கும்.

ஆகவே நண்பர்களே நீங்களே இனி முயற்சி செய்ய தொடங்குங்கள்.

- மிக்க நன்றி
பாரதி சங்கர்
 

3 comments :

Pages (150)12345 Next
Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற