மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2016

ஜப்பான் நாட்டைச் யோஷிநோரி ஓஹ்சுமி-க்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசைப் பெற்றுள்ளார்.

ஸ்வீடன் நாட்டில் உள்ள கரோலின்ஸ்கா ஆய்வு மையம், ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நிபுணர்களைத் தேர்ந்தெடுத்து நோபல் பரிசு வழங்குகிறது. அந்த நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் பெயரில் இந்தப் பரிசு வழங்கப்படுகிறது. இதில் 2016-ஆம் ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு திங்களன்று அறிவிக்கப்பட்டது.

ஜப்பானைச்சேர்ந்த யோஷிநாரி ஓஷூமிக்கு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. டோக்கியா பல்கலைக்கழகத்தில் செல்லியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் ஓஷ்மி, ஆட்டோபாஜி எனப்படும் செல்லியல் துறையில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார். உடல்களின் செல்கள் தம்மைத்தாமே அழித்துக்கொள்வது பற்றிய ஆய்வுக்காக யோஷிநாரி ஓஷ்மிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.


கடந்தாண்டு அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த டாக்டர் வில்லியம் காம்பெல், ஜப்பானைச் சேர்ந்த டாக்டர் சடோஷி ஒமுரா மற்றும் சீனாவைச் சேர்ந்த டாக்டர் யூயூ டு ஆகிய மூன்று பேருக்கும் நோபல் பரிசு கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. 1905-ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டுவருகிறது. மருத்துவத்துறைக்கு நோபல்பரிசு வழங்கப்படுவது இது 107-வது முறையாகும்.

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற