உவமை அணியில் ஒரு பொருேளாடு ஒரு பொருளை ஒப்பிட்டுக் கூறும் போது அவை ஒப்புமை உள்ள வேறுவேறு பொருள்கள் எனவே காட்டப்படும். ஆனால் சிலபோது உவமைக்கும் அது கொண்டு விளக்கப்படும் பொருளுக்கும் இடையிலான ஒப்புமை மிக அதிகமாக உள்ளது எனக் காட்ட விரும்புகிறார். கவிஞர்.
முகம் ஆகிய தாமரை
என்று கூறிவிடுகிறார். இங்கு முகமே தாமரை எனப்பொருள் வருகிறது. இவ்வாறு வரும்போது உவமையணியிலிருந்து உருவக அணி தோன்றுவதை உணரலாம்.
உருவக அணி மொத்தம் பதினைந்து வகைப்படும் என்றுதண்டியலங்காரம் காட்டுகிறது. (தண்டி. 37) அவை வருமாறு:
'தாமரை போன்ற முகம்' எனக் கூறிவந்த கவிஞருக்கு, இரண்டினுக்கும் உள்ள ஒற்றுமை மிகுந்து, வேற்றுமை குறைவுஎனத் தோன்றுகிறது. காலப்போக்கில் அவை இரண்டினுக்கும் வேற்றுமை இல்லை; அவை இரண்டும் ஒன்றே என்றமனவுணர்வு தோன்றுகிறது,
முகம் ஆகிய தாமரை
என்று கூறிவிடுகிறார். இங்கு முகமே தாமரை எனப்பொருள் வருகிறது. இவ்வாறு வரும்போது உவமையணியிலிருந்து உருவக அணி தோன்றுவதை உணரலாம்.
உருவக அணியின் இலக்கணம்
உவமையாகின்ற பொருளுக்கும் (உவமானம்) உவமிக்கப்படும் (உவமேயம்) பொருளுக்கும் இடையிலான வேறுபாட்டை நீக்கி, அவை இரண்டும் ஒன்றே என்னும் உள்ளுணர்வு தோன்றுமாறு ஒற்றுமைப் படுத்திக் கூறுவது உருவகம் என்னும் அணியாகும். அதாவது உவமேயத்தில் உவமானத்தை ஏற்றிக் கூறுதல். இதனை,
உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்று என
மாட்டின் அஃது உருவகம் ஆகும் (தண்டி. 35) என்ற நூற்பாவால் அறியலாம்.
உருவக அணி விளக்கம்
உவமையணியில் உவமானம் முன்னும் உவமேயம்பின்னும் இருக்கும். இரண்டினுக்கும் ஒப்புமை காட்ட இடையில்போல, புரைய, அன்ன முதலான உவமை உருபுகளுள் ஒன்றுவரும். உருவக அணியில் உவமேயம் முன்னும் உவமானம்பின்னும் வரும். இவற்றை ஒற்றுமைப் படுத்துவதற்காக 'ஆகிய'என்ற உருபு இடையில் வரும். 'ஆக' என்ற உருபும்வருவதுண்டு. இவை 'உருவக உருபுகள்' என்று கூறப்படும்.இவை மறைந்து வருதலும் உண்டு.
மலர்போன்ற கண், மலர்க்கண் - உவமை
கண் ஆகிய மலர், கண்மலர் - உருவகம்
மலர் போன்ற கண் என்ற உவமையில் மலரும் கண்ணும்வேறு வேறு எனும் உணர்வு தோன்றுவதையும், கண் ஆகியமலர் என்ற உருவகத்தில் கண்ணே மலர், கண்ணும் மலரும்வேறுவேறல்ல என்னும் உணர்வு தோன்றுவதையும் நீங்கள்காணலாம்.
உருவக அணியின் வகைகள்
1) தொகை உருவகம்
2) விரி உருவகம்
3) தொகைவிரி உருவகம்
4) இயைபு உருவகம்
5) இயைபு இல் உருவகம்
6) வியனிலை உருவகம்
7) சிறப்பு உருவகம்
8) விரூபக உருவகம்
9) சமாதான உருவகம்
10) உருவக உருவகம்
11) ஏகாங்க உருவகம்
12) அநேகாங்க உருவகம்
13) முற்று உருவகம்
14) அவயவ உருவகம்
15) அவயவி உருவகம்
இவற்றுள் குறிப்பிடத்தக்க சில வகைகளை மட்டும் விளக்கமாகக்காண்போம். மேலும் தண்டியாசிரியர் குறிப்பிடாததும் திருக்குறள்முதலான பழம்பெரும் இலக்கியங்களில் பயின்று வருவதுமாகிய'ஏகதேச உருவகம்' என்பது குறித்தும் விளக்கமாகக் காண்போம்.
ஏக தேச உருவகம்
இது உருவக அணி வகைகளில் ஒன்று. ஆனால் இது பற்றித். உருவகம் செய்யும் இரு பொருள்களுள் ஒரு பொருளை உருவகம் செய்து விட்டு அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளை உருவகம் செய்யாது விட்டுவிடுவது ஏக தேச உருவகம் ஆகும்.
எடுத்துக்காட்டு:
பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
(குறள். 10)
இப்பாடலின் பொருள் :
இறைவன் அடியாகிய புணையைப் (தெப்பம்) பற்றிக்கொண்டோர், பிறவியாகிய பெருங்கடலை நீந்துவர்; அப்புணையைப் பற்றிக் கொள்ளாதோர் பிறவிப் பெருங்கடலை நீந்தமாட்டார்கள்.
அணிப் பொருத்தம் :
இக்குறளில், பிறவியைக் கடலாக உருவகம் செய்துவிட்டு, அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளாகிய இறைவன் திருவடியைத் தெப்பமாக உருவகம் செய்யாதுவிட்டமையால் இது ஏக தேச உருவகம் ஆயிற்று.
- TNPSC General Tamil Study Materials free download
- Samacheer Kalvi 10th to 12th Tamil Study Materials & Model Question Paper
- +2, +1, 10th Tamil Questions - Test Paper for TNPSC Exam
- +2 Tamil Text Book Question Answer - Model Test Paper for TNPSC & TET Exams
- Tamil ilakkiya Varalaru-e-book pdf free download
- Tamil ilakkiya Varalaaru Model Test Paper
- TNPSC General tamil Part B & C Tamil ilakkiya varalaru modelquestion paper with answer key
- TNPSC New Syllabus Tamil Model Question Papers
- TNPSC General Tamil - Tamil ilakkanam Study Materials (44 Pages Pdf)
- Arivu TNPSC Model Question Paper with Answerkey
- அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்கள்
- Group 4 Model Question Paper
- Tamil ilakkiya varalaru online Test
No comments :
Post a Comment