முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 2012)

* சுயநிதி மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை முறைப்படுத்துவதற்கும், கண்காணிப்பதற்குமான குழுவை தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டது. (பிப்ரவரி 6)
-->

* `இஸ்ரோ' முன்னாள் தலைவர் மாதவன் நாயர் உள்ளிட்ட 4 பேர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு அவர்கள் விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது என்று இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறினார். (பிப்ரவரி 6)

* பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்தது. (பிப்ரவரி 6)

* புரட்சி வெடித்ததைத் தொடர்ந்து மாலத்தீவு ஜனாதிபதி முகமது நஷீத் பதவி விலகினார். துணை ஜனாதிபதி முகமது வாஹீத் ஹசன் புதிய ஜனாதிபதியாக பொறுப்பு ஏற்றார். (பிப்ரவரி 7)

* இஸ்ரோவில் நடந்துள்ள ஊழல் குறித்து சுதந்திரமான குழு விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என்று அதன் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் வலியுறுத்தினார். (பிப்ரவரி 7)

* சிறப்பாகச் செயல்படாத ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிப்பதற்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்தது. (பிப்ரவரி 7)

* குஜராத் கலவரத்தைத் தடுக்கத் தவறியதாக நரேந்திர மோடி அரசுக்குக் கண்டனம் தெரிவித்த ஐகோர்ட்டு, சேதம் அடைந்த 500-க்கும் மேற்பட்ட மத வழிபாட்டுத் தலங்களுக்கு நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிட்டது. (பிப்ரவரி 8)

* தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக பேராசிரியர் எம். திருமலையை நியமிப்பதற்கான உத்தரவை பல்கலைக்கழக வேந்தரும், தமிழக கவர்னருமான கே. ரோசய்யா பிறப்பித்தார். (பிப்ர வரி 8)

* வன்முறையைக் கைவிட்டு, சட்டத்துக்கு மதிப்பு அளியுங்கள் என்று மாலத்தீவு மக்களுக்கு ஐ.நா. சபை செயலாளர் பான்-கி-மூன் வேண்டுகோள் விடுத்தார். (பிப்ரவரி 8)

* சென்னை பள்ளிக்கூட வகுப்பறையில் ஆசிரியை உமா மகேஸ்வரியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த 9-ம் வகுப்பு மாணவன் முகமது இஸ்மாயில் கைது செய்யப்பட்டான். (பிப்ர வரி 9)

* பிறந்த ஆண்டு தொடர்பாக ராணுவத் தளபதி வி.கே. சிங்கின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துவிட்டது. இதையடுத்து அவரது பிறந்த ஆண்டு எது என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. வி.கே. சிங் மே 31-ம் தேதி ஓய்வு பெறுவதையொட்டி, புதிய ராணுவ தலைமைத் தளபதியாக பிக்ராம் சிங் பொறுப்பு ஏற்பார். (பிப்ரவரி 10)
-->
* மும்பையில் 2003-ம் ஆண்டு நடந்த இரட்டைக் குண்டுவெடிப்பில் 52 பேர் பலியான வழக்கில் கணவன்- மனைவி உள்பட 3 பேருக்கு பொடா கோர்ட்டில் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை மும்பை ஐகோர்ட்டு உறுதி செய்தது. (பிப்ரவரி 10)

* தேர்தல் நடத்தை விதிகளுக்குப் பணிய மறுப்பதாக மத்திய சட்ட மந்திரி சல்மான் குர்ஷித் மீது ஜனாதிபதி பிரதீபா பட்டீலிடம் தலைமை தேர்தல் கமிஷன் புகார் செய்தது. (பிப்ர வரி 11)

* புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், சிகிச்சைக்காக அமெரிக்க ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். (பிப்ரவரி 5)

* ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை `நம்பர் 1' டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சுக்கு லாரெஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி அமைப்பு வழங்கியது. சிறந்த வீராங்கனைக்கான விருதை கென்ய தடகள வீராங்கனை விவியன் செரியோத் பெற்றார். (பிப்ரவரி 7)

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற