January 2012 current events in tamil

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குயிக்கிற்கு தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்பில் ரூ. 1 கோடி செலவில் உருவச்சிலையுடன் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். (ஜனவரி 8)

பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் பொருளாளரான சுகுமாறன் நம்பியார் சென்னையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். (ஜனவரி

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும் என்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற வெளிநாடுவாழ் இந்தியர்கள் மாநாட்டில் மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி வேண்டுகோள் விடுத்தார். மாநாட்டை பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கிவைத்தார். (ஜனவரி 8)

தமிழக தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்புத் தலைவர் பசுபதி பாண்டியன் திண்டுக்கல் அருகே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் சில இடங்களில் பதற்றம் ஏற்பட்டது. பஸ்கள் கல் வீசித் தாக்கப்பட்டன. (ஜனவரி 10)

ஒரு கோடியே 34 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். (ஜனவரி 11)

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா டெல்லி வந்தார். அவரை விமான நிலையத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரி கபில் சிபல் வரவேற்றார். (ஜனவரி 11)

லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை எதிரொலியாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் ஆர். செல்லமுத்து ராஜினாமா செய்தார். (ஜனவரி 13)

தமிழக அரசின் சிறப்பு விருதுகள் :

திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கார், அண்ணா, காமராஜர் பெயரில் தமிழக அரசின் சிறப்பு விருதுகளைப் பெறுவோர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதன் விவரம்:

திருவள்ளுவர் விருது- புலவர் செ. வரதராசன்

தந்தை பெரியார் விருது- விசாலாட்சி நெடுஞ்செழியன்

அண்ணல் அமëபேத்கார் விருது - பேராசிரியர் சு.காளியப்பன்

பேரறிஞர் அண்ணா விருது- இரா.செழியன்

பெருந்தலைவர் காமராஜர் விருது - திண்டிவனம் கே.ராமமூர்த்தி

மகாகவி பாரதியார் விருது- முனைவர் இரா. பிரேமா

பாவேந்தர் பாரதிதாசன் விருது - கவிஞர் ஏர்வாடி சு. ராதாகிருஷ்ணன்

தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது- நா. ஜெயப்பிரகாஷ்

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது - பேராசிரியர் இரா. மோகன்
-->

சென்னை ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் கனடா வீரர் மிலோஸ் ரோனிக், டிப்சரேவிச்சை வீழ்த்தி சாம்பியன் ஆனார். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்- செர்பியாவின் டிப்சரேவிச் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது. (ஜனவரி 8)

கவுரவமிக்க, `ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர்' விருதை அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்சி மூன்றாவது முறையாகப் பெற்றார். (ஜனவரி 10)

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பெய்சூங் பூட்டியா சர்வதேச போட்டியில் இருந்து கடந்த ஆண்டே ஓய்வு பெற்று விட்டார். அவருக்கு விடைகொடுக்கும் விதமாக கண்காட்சி போட்டி டெல்லி நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. அதில் இந்தியாவும், ஜெர்மனியைச் சேர்ந்த பெய்ர்ன் மூனிச் அணியும் மோதின. பெய்ர்ன் மூனிச் அணி வெற்றி பெற்றது. (ஜனவரி 10)

உலக ஜுனியர் ஸ்குவாஷ் தரவரிசைப் பட்டியலில் சென்னை வீராங்கனை அனகா அலங்காமணி 2-வது இடம் பெற்றார். (ஜனவரி 12)

இதன் தொடர்ச்சியை காண


2012 ஜனவரி 1-7 முக்கிய நிகழ்வுகள்
-->


Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற