Operations & Projects | இராணுவ நடவடிக்கைகள்

Operation Shiva
அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு ராணுவ நடவடிக்கை

Operation Smile
காணாமல் போன குழந்தைகள் மீட்பு நடவடிக்கை - ஜனவரி 2015

Operation Muskaan
காணாமல் போன குழந்தைகள் மீட்பு நடவடிக்கை, ஜூலை 2015 இவையிரண்டும் மத்திய உள்துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்டதாகும்.
தற்போது ஜனவரி 2016ல் Operation Muskaan - 2 திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
 
Operation Valsalya
கேரளா மாநில அரசால் துவங்கப்பட்ட காணாமல் போன குழந்தைகள் மீட்பு நடவடிக்கை - அக்டோபர் 2015

Operation Talaash
காணாமல் போன டோர்னியர் விமான மீட்பு நடவடிக்கை
(Dornier CAG 791 காணமல் போன நாள் - ஜூன் 08 / 2015. பைலட் - வித்யாசாகர், துணை பைலட் – சோனி, கண்காணிப்பாளர் - சுபாஷ் சுரேஷ்.)

Operation X 
அஜ்மல் கசாப் தூக்கிலிடும் நடவடிக்கை
Operation Rahat
2013ம் ஆண்டு உத்தரகாண்ட் வெள்ள மீட்பு நடவடிக்கை மற்றும் 2015ம் ஆண்டு ஏமனில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கை (இரண்டும் இந்திய விமானப்படையால் மேற்கொள்ளப்பட்டவை)

Operation Ganga Prahar & Operation Surya Hope 
இந்திய ராணுவத்தின் 2013ம் ஆண்டு உத்தரகாண்ட் வெள்ள மீட்பு நடவடிக்கை
Operation Maitri 
2015 நேபாள நிலடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களை இந்திய ராணுவத்தால் மீட்கும் நடவடிக்கை

Operation Megh Rahat
2014ல் காஸ்மீரில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய ராணுவ மீட்பு நடவடிக்கை

Mission Sahayata
2014ல் ஜம்முவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய ராணுவ மீட்பு நடவடிக்கை

Operation Sadbhavana
2014 ஜம்மு & காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்ட பின்பு,ராணுவம் அவர்களுக்கு வழங்கிய மருத்துவ உதவி

Operation Lehar
2014 அக்டோபரில் ஹுட்ஹுட் (Hudhud cyclone) புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திரா மற்றும் ஒடிஷா கடலோர மாவட்டங்களில் இந்திய கடற்படை உதவிய நடவடிக்கை

Operation Mare Nostrum
லிபியாவிலிருந்து வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடையும் அகதிகளை இத்தாலி கடற்பரப்பில் இடைமறித்து அவர்களை காப்பாற்றும் நடவடிக்கை (இத்தாலி விமானப்படை மற்றும் கடற்படை இணைந்த நடவடிக்கை 2013டிசம்பர் முதல் 2015மார்ச் வரை)

Operation Triton
லிபியாவிலிருந்து வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடையும் அகதிகளை இடைமறித்து அவர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கை (ஐரோப்பிய யூனியனின் நாடுகளின் கூட்டு நடவடிக்கை ஏப்ரல் 2015 )

EUNAVFOR MED - Operation Sophia
ஐரோப்பிய யூனியனின் ஆறு போர்கப்பல்களின் மூலம் மத்திய தரைக்கடலின் சர்வதேச கடற்பரப்பில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் அகதிகளை தடுப்பது மற்றும் அவர்களை அழைத்துவரும் கடத்தல்காரர்களின் படகுகளை பறிமுதல் செய்வது. இதன் முதல் பகுதி ஜூன் 2015ல் செயல்படுத்தப்பட்டது. இரண்டாம் கட்டம் அக்டோபர் 2015ல் துவங்கியுள்ளது.
EUNAVFOR MED – Europen Union Naval Force Mediterranean Sea
Operation Neer
திடீர் குடிநீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மாலத்தீவுகளுக்கு இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படைகள் விரைந்து சென்று குடிநீர் வழங்கிய நடவடிக்கை டிசம்பர் 2014

Operation Hifazat (Counter - Insurgency Raid )
எதிர் கிளர்ச்சி தாக்குதல்- மணிப்பூர் மாநிலத்தில் இந்திய ராணுவவீரர்களை தாக்கிய நாகலாந்து தீவிரவாதிகள் மீது மியான்மர் நாட்டுக்குள் புகுந்து இந்திய ராணுவம் நடத்திய எதிர் தாக்குதல் (ஜூன் 2015)
(இதே போன்று 1995ல் Operation Golden Bird என்னும் நடவடிக்கை மியான்மர் எல்லைக்குள் மியான்மர் ராணுவத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2003ம் ஆண்டில் Operation All Clear என்ற பெயரில் பூட்டான் நாட்டு எல்லைக்குள் சென்று தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டிலும் மியான்மரில் எதிர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது)

Operation All Out 
 
அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள போடோ தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை டிசம்பர் 2014

Operation Karo 1 & 2 
நக்சலைட்டுகளுக்கு எதிராக ஜார்கண்ட் மாநில காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் ஜூலை 2014 & ஜனவரி 2015

Operation Uncle Obmo
2015ம் ஆண்டு குடியரசுதின விழா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் பிரதமர் மோடிக்கு ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை (OBMO – OBAMA & MODI )

Operation Lal Quila
2015ம் ஆண்டு சுதந்திரதின கொண்டாட்டங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை

HADR Excercise (Humanitarian Assistance and Disaster Relief Exercise) 
லட்சத்தீவு, கவரெட்டி, அகட்டி மற்றும் சில தீவுகளில் இந்திய விமானப்படை செயல்படுத்திய சுனாமி மற்றும் பேரிடர் மீட்பு ஒத்திகை - பிப்ரவரி 2015
Operation Hamla
2008 மும்பை தீவிரவாத தாக்குதலுக்குபின் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை 36மணிநேரம், இந்தியா முழுவதும் உள்ள கடற்கரைப்பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையிலான ஒத்திகை

Operation Barricade
தமிழக காவல்துறையின் Q பிரிவு, வனத்துறை, மீன்வளத்துறை, சுங்கத்துறை (Customs), கடலோரகாவல்படை, போதைப்பொருள் தடுப்பு புலனாய்வு அமைப்பு (Narcotics Intelligence Bureau), போதைப்பொருள் கட்டுப்பாடு அமைப்பு (Narcotics Control Bureau ) ஆகியவை இணைந்து ஜூலை 25 / 2015ல் ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொண்ட கடத்தலுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை

Operation DOGA
ஜூன் 21 / 2015ல் டெல்லி ராஜபாதையில் பிரதமர் மோடி கலந்துகொண்ட உலக யோகா தின விழாவிற்கு ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்

Operation Ruchi
உணவுப்பொருட்களில் உள்ள கலப்படங்களை கண்டுபிடிக்க கேரள மாநில உணவுத்துறை மேற்கொண்ட நடவடிக்கை ஜூன் 2015

Operation Shistachar
டெல்லி மாநகர காவல்துறையின் சார்பாக டெல்லியின் பஸ் நிலையம், மார்கெட், வணிக வளாகங்களில் பெண்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவோரை பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று, அவர்களின் குடும்பத்தினர் முன்னிலையில் அறிவுரைகள் கூறி அனுப்புவது - ஆகஸ்ட் 2015

OPERATION MADAD
சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற இந்திய கடற்படை மேற்கொண்ட மீட்பு பணி நவம்பர் 2015

Project Seabird - 2 
கர்நாடகாவில், கார்வாரில் அமைந்துள்ள INS KADAMBA கடற்படை தளத்தினை விரிவாக்கும் திட்டம் (Project Seabird – 1 INS KADAMBA கடற்படை தளத்தினை உருவாக்கிய திட்டம்)

Project Varsha
விசாகப்பட்டினத்தில் அணுசக்தி திறன் பெற்ற போர்க்கப்பல்கள் நிறுத்த உருவாக்கப்படும் கடற்படை தளத்தின் திட்டம்

Project Subodham
கேரள அரசின் மது அடிமைகள் மீட்பு திட்டம்

Project Mausem
சீனாவின் பட்டு சாலை திட்டத்திற்கு எதிராக இந்தியாவின் பண்டையகால கலாச்சார மற்றும் வாணிப தொடர்பு உள்ள நாடுகளை (குறிப்பாக இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகள்) ஒருங்கிணைப்பது. இந்த திட்டத்தை Indira Gandhi National Centre for the Arts (IGNCA) மற்றும் Archeological Survey of India and National Museum இணைந்து செயல்படுத்தவுள்ளன.

Operation Black Tornad
2008 மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக தேசிய பாதுகாப்பு படையினர் (National Security Guards) மேற்கொண்ட நடவடிக்கை
Click and download Pdf File

6 comments :

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற