சிறந்த கல்வியை நாம் குழந்தைகளுக்குக் கொடுக்கவேண்டும் என்றால் கண்டிப்பாக பின்லாந்து நாட்டில் என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. மிகச்சிறிய நாடான பின்லாந்து பல வருடங்களாக அந்நியர்களின் ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்டு வந்தது. வறுமையிலும், பஞ்சத்திலும் அந்நாட்டு மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வந்தார்கள். பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களும் பின்லாந்து நாட்டைப் பிடித்து அதன் வளங்களைச் சுரண்டிச் கொள்ளையடித்ததுடன் அந்நாட்டு மக்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர்.
இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு 1963ல் பின்லாந்து நாட்டில் உள்ள நல்லவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து பின்லாந்து நாட்டை முன்னேற்றமடைய செய்ய வேண்டும் என்றால் அதற்குக் கல்வியை ஒழுங்குப்படுத்தினால் தான் முடியும் என்ற முடிவுக்கு வந்தனர். அன்றைய காலகட்டத்தில் அரசு பள்ளிக் கூடங்களிலும், கல்லூரிகளிலும் கற்பிக்கப்பட்ட பாடங்கள் சிறப்பானதாக இல்லை. எனவே பல்வேறு வெளிநாட்டு கல்வி நிறுவனங்களும், தனியார் சுயநிதிக் கல்லூரிகளும், தனியார் பள்ளிகளும் ஆரம்பிக்கப் பட்டன. ஆனால் அவையயல்லாம் மிகவும் வசதியான நிலையில் இருந்தவர்கள் மட்டுமே பயன்படுத்திக் கூடிய நிலையில் இருந்தது. ஏனென்றால் அங்கெல்லாம் அவர்கள் கேட்கும் கல்விக்கட்டணம் மிகவும் அதிகமாக இருந்தது. எனவே பல்வேறு நல்ல உள்ளங்கள் ஒன்று சேர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களையும், புத்திசாலிகளையும் பயன்படுத்தி ஐந்துவருட கடினமான உழைப்புக்குப் பின்னர் 1968ஆம் ஆண்டு ஒரு சிறந்த கல்வி முறையை உருவாக்கினார்கள். அந்தக் கல்வி முறையில் படிக்கும் எந்த ஒரு குழந்தையும் ஆரோக்கியமாக, அமைதியாக, நிம்மதியாக, சந்தோசமாக வளத்துடன் குடும்ப நிம்மதியுடன் ஒரு தலைசிறந்த மனிதனாக வாழ்வதற்கு உரிய அனைத்து பாடத்திட்டங்களையும் உள்ளடக்கிய மிகச் சிறந்த வழி முறையாக அது அமைக்கப் பட்டிருந்தது.
1973ஆம்ஆண்டு ஆசிரியர்களுக்கு என சில திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அதாவது கல்வியின் பாடத்திட்டங்களை சரிசெய்வதை விட நல்ல ஆசிரியர்கள் மூலமாகத்தான் நல்ல குழந்தைகளை உருவாக்க முடியும் என்று அவர்கள் நம்பினார்கள். எனவே ஏற்கனவே 1968ஆம் ஆண்டு பாடத் திட்டங்களை உருவாக்கியிருந்தாலும் ஆசிரியர்கள் சரியான முறையில் பாடம் நடத்தத் தெரியாததால் குழந்தைகளுக்கு அது சரியாகச் சென்று சேரவில்லை என்பதைக் கண்டறிந்தனர். எனவே 1973ஆம் ஆண்டு ஒரு ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும் என்ற வரையறையை நிர்ணயம் செய்தனர். அவ்வாறு பின்லாந்தில் உள்ள அனைத்து ஆசிரியர் களும் அனைத்து விசயங்களையும் சிறப்பாகத் தெரிந்தவர்களாக மட்டுமே இருக்குமாறு ஆசிரியர்கள் உருவாக்கப் பட்டார்கள்.
பல நாடுகளில் மருத்துவர்கள், இன்ஜினியர்கள் மட்டுமே அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நிலையில் பின்லாந்தில் மட்டும் தான் முதன் முதலில் ஆசிரியர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டது. இப்பொழுதும் கொடுத்துக் கொண்டு வருகிறார்கள்.
1990ஆம் ஆண்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட சமயத்தில் பின்லாந்து நாட்டில் ஆயிரம் பேரில் ஐந்து பேருக்கு மட்டுமே வேலை கொடுக்க முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது. அப்பொழுது கூட ஆசிரியர்களின் சம்பளத்தை குறைக்கவில்லை. ஆசிரியர்களின் எண்ணிக்கையையும் குறைக்கவில்லை என்பது மிகவும் பாராட்டத்தக்க ஒரு நிகழ்வு.
பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்னர் உலகில் கல்வித்தரத்தில் பதினைந்தாம் இடத்தில் இருந்த பின்லாந்து அதன் பின்னர் நேரடியாக முதலிடத்திற்கு வந்துவிட்டது.
பின்லாந்தில் தினசரி எழுபத்தைந்து நிமிடங்களுக்கு படிப்பு எதையும் கற்றுக் கொடுக்காமல் குழந்தைகளை சும்மா இருக்கச் சொல்கிறார்கள். ஒரு குழந்தை சும்மா இருக்கும் பொழுது மட்டும் தான் நான் யார் அது என்ன? இது என்ன? என்று யோசித்து சுய அறிவை வளர்த்துக் கொள்ளும் என்று அவர்கள் நம்புகிறார்கள். மேலும் பதினைந்து வயது வரை எந்த ஒரு குழந்தைக்கும் எந்த ஒரு பட்டமும் அவர்கள் சூட்டுவதில்லை அதாவது இந்தக் குழந்தை கோபக்காரக்குழந்தை.
இந்தக் குழந்தை "மக்கு', இந்த குழந்தை புத்திச்சாலி என்று குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு எந்தப் பட்டத்தையும் ஆசிரியர்கள் அவர்களுக்கு சூட்டுவதில்லை. ஏனென்றால் அந்தப் பட்டம் தற்காலிகமானது என்று அவர்கள் நம்புகிறார்கள்.
இந்த திட்டத்திற்குப் பெயர் PISA (Programme Internaional School Assessment) புரோகிராம்ஃபார் இன்டர்நேனல் ஸ்கூல் அசஸ்மென்ட் என்பது இதன் விரிவாக்கம்.
இந்தியா உலகநாடுகளில் கல்வியின் தரத்தில் 72ம் இடத்தில் இருக்கிறது. 74 நாடுகளில் நாம் 72ம் இடத்தில் இருக்கிறோம் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
பின்லாந்து கல்வி முறையில் போட்டியும், பொறாமையும் கிடையாது. ஏனென்றால் குழந்தைகளுக்குப் பரிட்சையுமில்லை. மதிப்பெண்களும் இல்லை. குழந்தைகளுக்குள் முதலாவது இரண்டாவது என்ற பேதமும் இல்லை. எனவே சிறுவயது முதலே போட்டி பொறாமையில்லாமல் குழந்தைகள் வளர்கின்றன.
இந்தப் பள்ளிகளில் ரேங்க்கிங் எனப்படும் முதலாவது இரண்டாவது என்பதையே தேவையில்லாதது என அனைவரும் நம்புகிறார்கள்.
பின்லாந்தில் கல்வியை நான்கு விதமாகப் பிரித்திருக்கிறார்கள்.
1. பிரைமரி (ஏழு வயது முதல் பதினாறு வயது வரை) குழந்தைகளுக்கு பயிற்சி வகுப்பு உண்டு. ஆனால் எந்த ஒரு தேர்வும் கிடையாது. கல்வி கட்டணமும் கிடையாது.
2. ஹைஸ்கூல் (பதினாறு வயது முதல் பத்தொன்பது வயது வரை) பரீட்சை இருக்கிறது. பள்ளிக்கட்டணம் இருக்கிறது. ஆனால் கல்விக்கட்டணம் மிகவும் குறைவாக இருக்கும். பரீட்சை என்பது மதிப்பெண்கள் போட்டு முதலாவது, இரண்டாவது என்று பிரிப்பதற்காக அல்ல. குழந்தைகள் எந்த அளவிற்குப் புரிந்து கொண்டிருக் கிறார்கள் என்பதை ஆசிரியர்கள் அறிந்து கொள்வதற்காக என்பது மட்டுமே தானே தவிர அதில் மார்க்குகள் போட்டு குழந்தைகளுக்கு காண்பிப்பதற்காக அல்ல என்பதே மிக முக்கியமான விசயம் 16வயது முதல் 19வயது வரையான கல்வியை வீட்டிலிருந்தும் படிக்கலாம் அல்லது பள்ளிக்குச் சென்றும் படிக்கலாம்.
3. காலேஜ் (College) இதனை இரண்டாகப் பிரித்து யுனிவர்சிட்டி என்றும் பாலிடெக்னிக் என்றும் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
4. டாக்டரேட் டிகிரி (Doctrate Degree) இதை நமது பாஷையில் கூறுவது என்றால் பி.எச்.டி எனலாம்
எனவே பின்லாந்து கல்வி முறையை உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் பயன்படுத்தும் பொழுது கண்டிப்பாக தரம் வாய்ந்த குழந்தைகளாக, அறிவாளியாக, புத்திசாலியாக, இந்தச் சமுதாயத்திற்கு நல்ல காரியம் செய்யக்கூடிய குழந்தைகளாக உருவாவார்கள் என்று நாம் நம்புகிறோம், எனவே உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் நாம் இனிமேல் இந்தத் திட்டத்தினை செயல் படுத்துவதற்கு ஒவ்வொருவரும் அதற்கான முயற்சியை எடுப்போமாக!
எனவே நாம் விரைவில் அங்கு சென்று பின்லாந்து கல்விமுறையை கற்றுக் கொள்ள இருக்கிறோம். முடிந்தால் நீங்களும் நேரடியாக பின்லாந்து சென்று கற்று வாருங்கள். இது சம்பந்தப்பட்ட பயிற்சிகள் அந்த நாட்டில் நடந்து வருகிறது.
மலேசியா நாட்டில் செரம்பான் என்ற ஊரில் சகோதரி பானு என்பவரை சில வருடங்களுக்கு முன்பு நான் சந்தித்தேன். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் அவர்களுக்கு வீட்டிலேயே எப்படிக் கல்வி கற்றுக் கொடுப்பது என்பதற்கு இவர் ஒரு வாழும் உதாரணமாக இருந்து வருகிறார். இவர் பல வருடங்களாக டியூசன் சென்டர்களை நடத்திவருகிறார். அதன் மூலமாக நல்ல வருமானம் கிடைத்துக் கொண்டிருந்தது. இவர் தனது குழந்தையை ஒரு பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்துக்கொண்டு இருந்தார். ஆனால் கல்வி என்பது இன்றைக்குத் தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதனால் பள்ளிக்கு அனுப்புவதாலோ, டியூசனுக்கு அனுப்புவதாலோ ஒரு குழந்தையின் வாழ்க்கைக்கு தேவையான எந்த ஒரு விசயத்தையும் சரியாகக் கிடைக்கச் செய்துவிட முடியாது என்பதனை உணர்ந்த இவர் வீட்டிலேயே குழந்தைகளுக்குக் கல்வி கற்றுக்கொடுக்க முடியும் என்பதைப் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து கண்டறிந்து இப்பொழுது அதைப் பயன்படுத்தி வாழ்ந்து வருகிறார்.

பல்வேறு கிளைகளுடன் இயங்கிக் கொண்டிருந்த அவரது டியூசன் சென்டர்களைக் சுருக்கி இப்பொழுது சில கிளைகளை மட்டுமே நடத்திக் கொண்டு வருகிறார். ஏனென்றால் டியூசன் என்ற பெயரில் குழந்தைகளுக்குத் தேவையில்லாத விசயத்தைக் கற்றுக்கொடுப்பது தனக்குப் பிடிக்கவில்லையயன்று கூறுகிறார். மேலும் ஆன்மீகப் பாதையில் பயணம் செய்து கொண்டிருக்கும் இவர் தனது சொந்த மகனை பள்ளிக்குச் சென்று வருவதை நிறுத்திவிட்டு அவருக்கு வீட்டிலேயே சில வருடங்களாக பாடங்களைக் கற்றுக்கொடுத்து வளர்த்து வருகிறார்.
நான் அவரது வீட்டிற்குச் சென்றிருந்த சமயத்தில் அந்தக் குழந்தை என்னிடம் பேசிய முறையும், பழகிய முறையும், கேட்கும் கேள்கவிகளுக்கும், அந்தக் குழந்தை நடந்து கொள்ளும் முறைகளையும் வைத்துப் பார்க்கும் பொழுது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. சிறுகுழந்தையாக இருந்தாலும் மிகவும் புத்திசாலித்தனமாகவும், அதே சமயத்தில் அன்புடனும், தெளிவுடனும் பேசுவதை அன்று தான் நான் முதன் முதலில் பார்த்தேன்.
அந்தக் குழந்தை கேட்கும் பல கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அந்த மாதிரி கேள்வி கேட்பதற்கே ஒரு அறிவு வேண்டும் என்பது அப்போதுதான் புரிந்தது.
சகோதரி செரம்பான் பானு அவர்கள் சில விசயங்களை என்னிடம் கூறினார். அவற்றைத் தொகுத்து நான் இப்பொழுது உங்களுக்கு கூறிகிறேன்.
1. ரமணர், ஆதிசங்கரர், தாமஸ் ஆல்வா எடிசன் இவர்களில் யாருமே பள்ளிக்குச் செல்லவில்லை.
2. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் வகுப்பில் பாடம் நடத்தும் ஆசிரியர்களிடம் புத்திசாலித்தனமாகப் பல கேள்விகளை கேட்கும் பொழுது அந்தக் குழந்தைகளை நோயாளிகள் என்று பெயர் சுமத்துகிறீர்கள் இது நியாயமா? உதாரணமாக குழந்தைகள் கேள்வி கேட்கும் பொழுது அந்தக் குழந்தைக்கு ஏடி, எச்.டி., அதிகப்பிரசங்கி ஹைப்பர் ஆக்டிவிட்டி என்றெல்லாம் பட்டம் கட்டி அவர்களுக்கு மருந்து மாத்திரைகள் கொடுத்து அவர்களை மனரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறுகிறீர்களே இது நியாயமா?
3. ஒவ்வொரு குழந்தையும், ஒவ்வொரு விசயத்தில் தனித்துவமான ஆற்றல் பெற்றிருக்கும். அதைத் கண்டுபிடித்து அதற்கு ஏற்றாற்போல் பாடம் நடத்தாமல் தேவையில்லாத விசயங்களைக் கற்றுக்கொடுத்து அதை அந்தக் குழந்தை கவனிக்காமல் இருக்கும் பொழுது அதை முட்டாள் என்று கூறுகிறீர்களே இது நியாயமா?
4. சமுதாயமும், ஆசிரியர்களும், கல்வித்துறையும் ஒன்று சேர்ந்து ஒரு குழந்தை எப்படிப்பட்ட குழந்தை என்று முத்திரை குத்துகிறீர்களே முதலில் நீங்கள் எப்படிப்பட்ட ஆள் என்று உங்களுக்குத் தெரியுமா? உதாரணமாக வகுப்பில் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் சண்டைக்காரன் ஒரு குழந்தை கோபப்பட்டால் கோபக்காரன் என்று முத்திரை குத்தி மாணவர்களின் உணர்ச்சிகளைப் பொறுத்து பழக்க வழக்கங்களை பொறுத்து அவர் இப்படிப்பட்டவர்கள் என்று முத்திரை குத்திவிடுகிறீர்களே இது நியாயமா?
5. மக்கள் இப்பொழுது படித்துப் பட்டம் வாங்குவது என்பது உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும், ஒரு அங்கீகாரத்திற்காகவும், ஒரு பந்தாவிற்காகவும், கல்யாணப் பத்திரிக்கையில் பெயருக்குப் பின்னால் போட்டுப் கொள்வதற்காகவும் தான் இருக்கிறது. இது நமக்குத் தேவையா?
6. ஒரு குழந்தையின் தற்காலிகமான குணங்களை வைத்து அந்தக் குழந்தைகளுக்குப் பட்டங்களைக் கொடுப்பதை ஆசிரியர்கள் தயவு செய்து உடனே நிறுத்தவேண்டும்.
7. ஒரு சில நாடுகளில் உள்ள சில பள்ளிகளில் ஒரு குழந்தையின் நடவடிக்கையை வைத்து சிடுமூஞ்சி கோபக்காரன், முட்டாள் என்று அவர்களின் அடையாள அட்டையில் (ஐடி கார்டு) கம்ப்யூட்டரின் உதவியுடன் பதிவு செய்கிறார்கள். அவரின் குணங்களை வைத்து சில பட்டங்களை அதில் பதிவு எண்ணுடன் பதிவு செய்யப்பட்டிருப்பதால் கம்ப்யூட்டரில் அடித்தவுடன் அக்குழந்தை ஹைப்பர் ஆக்டிவிட்டி என்று முதலிலேயே தெரிந்துவிடுகிறது. எனவே பல கல்லூரிகளில், பல பள்ளிகளில் அவர்களை சேர்த்துக் கொள்ள அச்சப்படுகிறார்கள். எனவே தயவு செய்து தற்காலிமான குணநலன்களை வைத்து ஒரு குழந்தையின் எதிர்காலத்தைப் பாழாக்காதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்
8. ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு நேரத்திலும் பல்வேறு விதமான உணர்ச்சிகளில் பாதிக்கப்படுகிறான்.
உதாரணத்திற்கு நீங்களாகட்டும், நானாகட்டும் சில நேரங்களில் கோபமாக இருப்போம். சில விசயங்களில் நாம் முட்டாளாக இருப்போம். சில விசயங்களில் "மக்காக' இருப்போம். சில விசயங்களில் நாம் புத்திசாலியாக இருப்போம். உங்களை யாராவது இப்படிப்பட்ட முத்திரைகளை குத்தி அதைக் கம்ப்யூட்டரில் நமது புகைப்படத்துடன் பதிவு செய்துவிட்டு முதன் முதலில் பார்த்தவுடன் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்ட ஆதாரத்துடன் நம்மைப் பற்றிய ஜாதகத்தை கூறினால் உங்களுக்கு மனநிலை எப்படி இருக்கும் என்று சற்று யோசியுங்கள்.
9. குழந்தைகளைக் கட்டுப்படுத்தாதீர்கள். அவர்களுக்கு தேவையான சுதந்திரத்தைக் கொடுங்கள். ஆனால் எல்லைக் கோட்டை நிர்ணயுங்கள். கட்டுப்பாட்டை விதிக்கும் பொழுது குழந்தைக் கட்டுப்பாட்டை மீற நினைக்கத் துடிக்கிறது. ஆனால் சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டு ஒரு கோடுபோட்டு வைத்துவிட்டால் இந்தக் கோட்டை மீறிச் செல்லும் பொழுது வரும் விபரீதத்திற்கு நீங்கள் தான் பொறுப்பு எனறு அந்தக் குழந்தைகளுக்கும் புரிய வைத்தால் அதாவது எல்லைக் கோட்டை தாண்டும் பொழுது ஏற்படும் விபரீதத்தினைப் புரியவைப்பதன் மூலமாக ஒரு குழந்தையாக கட்டுப்படுத்தாமல் சுதந்திரமாக ஒழுங்காக வாழவைக்க முடியும்.
10. "நான் பட்ட கஷ்டம் என் குழந்தைகள் படக் கூடாது' என்று எல்லாப் பெற்றோர்களும் நினைக்கிறார்கள். தயவுசெய்து அந்த எண்ணத்தை மாற்றிவிடுங்கள். நீங்கள் கஷ்டப்பட்ட காரணத்தினால் தான் அது உங்களுக்கு அனுபவமாக மாறி இருக்கிறது. உங்கள் குழந்தைகளும் கஷ்டப்பட்டால் மட்டுமே அவர்கள் நன்றாக இருப்பார்கள். இவ்வாறு சிறுவயது முதலே கஷ்டம் என்றால் என்ன? பசி என்றால் என்ன? வறுமை என்றால் என்ன? என்பதெல்லாம் தெரியாமலேயே குழந்தைகளை வளர்த்து வருவதால் திடீரென இந்தப் பாதிப்புகள் அந்தக் குழந்தைக்கு வரும் பொழுது அதனால் தாங்க முடிவதில்லை. அது இந்த உலகில் வாழ்வதற்கான தகுதியை இழந்து விடுகிறது. எனவே குழந்தைகள் கஷ்டப்படும் பொழுது அதற்கு அனுபவம் ஏற்படுகிறது என்று நம்பிக்கையுடன் காத்திருங்கள் வருத்தப்படாதீர்கள்.
11. குழந்தைகளை இயந்திர மனிதர்களாகப் பார்க்காதீர்கள். இரத்தமும், சதையுமாக, உணர்ச்சியுள்ள ஒரு மனிதனாகப் பாருங்கள். பல பெற்றோர்களும், பல ஆசிரியர்களும் அவர்களைத் தங்கள் சொல் பேச்சுக் கேட்கும் இயந்திர மனிதர்களாக அதாவது ரோபோட்களாக இருந்தால் மட்டும் தான் அவர்களை நல்ல குழந்தைகள் என்று கூறுகிறார்கள். தயவு செய்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளாதீர்கள். கடைக்குச் சென்று ஒரு ரோபோட்டை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
12. உங்களது அனுபவத்தைக் குழந்தைகளுக்குக் கொடுக்காதீர்கள். ஏனென்றால் அனுபவித்தால் மட்டுமே அனுபவங்கள் கிடைக்கும். ஒருவருக்கு உங்கள் அனுபவத்தைச் சொல்வதால் அறிவுரை மட்டுமே கிடைக்கும். அனுபவங்கள் கிடைக்காது என்பதைப் புரிந்துகொண்டு உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தினை குழந்தைகளிடம் திணித்து உங்களைப்போன்ற ஒரு மனிதனாக வாழ வழி செய்து விடாதீர்கள். அந்தக் குழந்தைக்கு ஏற்படும் அனுபவத்தினை வைத்து அது ஒரு புதிய பரிமாணத்தில் புதிய வாழ்க்கை வாழ்வதற்கு அதற்கு உதவி செய்யுங்கள்.
13. தினமும் இரவு தூங்கச் செல்லும் முன் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் (டெய்லி சர்க்கிள் டைம்) உருவாக்கி குழந்தையிடம் அமர்ந்து அமைதியாக, பொறுமையாக பின்வருமாறு யோசிக்கச் சொல்லுங்கள். இன்றைய தினத்தில் காலையிலிருந்து இரவு வரை நீ செய்த விசயங்களைப் பற்றி நீயே யோசித்து இன்று முதல் எது நல்லது? எது கெட்டது? என்று ஒரு முடிவினைச் செய் என்று கூறுங்கள். இதற்கென குழந்தைகளுக்கு அரைமணிநேரம் அல்லது ஒருமணிநேரம் அவகாசம் கொடுங்கள். அந்த நேரத்தில் நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் அமர்ந்து உங்கள் அனுபவத்தினைப் பேசிக் குழந்தைகளைக் குழப்பாதீர்கள். ஒரு குழந்தை சொந்தமாக யோசிக்கும் பொழுது நிச்சயமாக நல்ல விசயங்களை மட்டும் தான் யோசிக்கும் என்று நம்புங்கள்.
14. எது சரி? எது தவறு? என்பதைத் திரும்பத் திரும்ப கூறிக்கொண்டே இருக்காதீர்கள். எது சரி எது தவறு என்பதைக் குழந்தைகளே சொந்தமாக யோசிக்கும் பொழுது மட்டும் தான் அவர்களுக்குச் சிறப்பாக புரியுமே தவிர நீங்கள் சொல்வதால் அவர்களுக்குப் புரியபோவதில்லை.
உதாரணமாக விளக்கில் கை வைத்தால் சுடும் என்பது நமக்குத் தெரியும். ஆனால் குழந்தைகளுக்குத் தெரியாது. ஒரு குழந்தை எப்பொழுது விளக்கில் கை வைத்து சூடுபட்டு கையை வெடுக்கென்று எடுக்கிறதோ அதன்பிறகு தான் அது விளக்கில் கை வைப்பதை நிறுத்துமே தவிர நாம் சொல்லும் பொழுது கண்டிப்பாக அதற்குப் புரியாது என்பதனை நாம் புரிந்து கொள்ளவேண்டும். சரி, தவறு என்பதை மீண்டும் மீண்டும் கூறி குழந்தைகளைக் குழப்பாமல் எப்பொழுதாவது ஒருமுறை தேவை கருதிக் கூறலாம். நிச்சயமாக அந்தக் குழந்தை தனக்கு ஒரு அனுபவம் ஏற்படும் பொழுது தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் என்று நம்புங்கள்.
15. ஒரு குழந்தை தவறே செய்யாமல் வளர முடியாது என்பதை புரிந்துகொள்ளுங்கள். விழுந்து விழுந்து எழுந்தால் தான் நடக்க முடியும் என்பதைப்போல எந்த ஒரு விசயத்திலும் குழந்தைகள் தோற்றுபோகும் பொழுது அல்லது தவறாக செய்யும் பொழுது அக்குழந்தைக்கு புரியவைப்பதற்கு மட்டுமே நீங்கள் முயற்சி செய்யுங்கள். தவறே செய்யாத ஒரு குழந்தையை நீங்கள் பார்க்க முடியாது என்பதைத் தயவு செய்து நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். எனவே தவறு செய்யலாம், தப்பு செய்யலாம். ஆனால் அதை மீண்டும் மீண்டும் செய்வதுதான் பெரிய தவறு என்பதைப் புரிந்துகொண்டு முதல் முறை இரண்டாம் முறை தவறு செய்யும் பொழுது குழந்தைகளுக்குப் புரிய வைக்க முயற்சி செய்யுங்கள். ஆனால் குழந்தையை அவமானப்படுத்தி அசிங்கப்படுத்தி குழந்தைகளைக் கஷ்டப்படுத்த வேண்டாம்.
16. பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைத்து அவர் வேலைக்குச் சென்று சம்பாதித்து பிற்காலத்தில் தங்களுக்கு சோறு போடுவான் என்ற நம்பிக்கையில் வளர்க்கிறார்கள். ஆனால் குழந்தைகள் என்பவர்கள் ஒன்றும் ஏ.டி.எம் மெ´ன் கிடையாது. குழந்தைகள் நன்றாக நிம்மதியாக வாழவேண்டும் என்று மட்டுமே விரும்புங்கள். நீங்கள் இவ்வாறு நினைக்கும் பொழுது பெற்றோர்களைக் கவனித்துக் கொள்வதை அந்தக் குழந்தைகள் கட்டாயம் செய்வார்கள்.
17. குழந்தைகளை வீட்டிலேயே படிக்க வையுங்கள். பத்து வயது அல்லது பதினைந்து வயது வரை நீங்கள் வீட்டிலேயே கற்றுக் கொடுத்து வாருங்கள். பின்னர் என்டரி எக்ஸாம் அல்லது என்ட்ரன்ஷ் எக்ஸாம் என்று அழைக்கப்படும். பரீட்சைக்கு அனுப்பி வைத்து டிகிரி அல்லது டிப்ளமோ பட்டத்தினைப் பெறச் செய்யலாம். சமுதாயத்திற்காகவும் அரசாங்கத்திற்காகவும் ஒரு சான்றிதழை வாங்கிக் கையில் கொடுத்து விடுங்கள். நிச்சயமாக அந்தப் பிள்ளை நல்லபடியாக வாழும் என்று நம்புங்கள்.
18. பரஞ்சோதி மகான் என்ன கூறுகிறார் என்றால் பனிரெண்டு வயது வரை ஒரு குழந்தைக்கு எந்த மொழியையும் சொல்லிக் கொடுக்காமல் நாட்டு நடப்புகளைக் கூறாமல் இருந்தால் அந்தக் குழந்தை இந்த உலகில் அறிவாளியாக, புத்திசாலியாக உலகை ஆளுகிற, நல்ல எண்ணம் படைத்த ஒரு குழந்தையாக மட்டுமே வளரும், வாழும் என்று கூறியிருக்கிறார்.
19. பரஞ்சோதி மகான் எழுதிய நான் கடவுள் என்ற புத்தகத்தினை படியுங்கள். அதில் 170ம் பக்கத்தில் குழந்தைகளுக்கு எப்படி சிறப்பான கல்வியைத் தர முடியும் என்று அதில் விளக்கமாக அவர் கூறியிருக்கிறார்.
நண்பர்களே செரம்பான் பானு என்னும் மலேசியாவைச் சேர்ந்த இந்த சகோதரி ஒரு வாழும் உதாரணமாக இருந்து தன் குழந்தைக்கு வீட்டிலிருந்தே கல்வியைக் கற்றுக் கொடுத்துக் கொண்டு வருகிறார். இவர் கலந்துரையாடும் பொழுது நிறைய விசயங்களை என்னிடம் பகிர்ந்துகொண்டார். பல்வேறு விசயங்களை அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன். நான் அவரிடமிருந்து கேட்ட விசயங்களைத் தொகுத்து இங்கு 19 பத்திகளாக உங்களுக்குக் தொகுத்து கொடுத்துள்ளேன்
அவரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு நீங்கள் இதுபற்றி பேசும்பொழுது பல்வேறு விசயங்களை நீங்கள் கற்றுக்கொள்ள முடியும்.
தொடர்புக்கு : தொலைபேசி எண் மலேசியா +60123619294.
Email : banusuppiah@gmail.com
நான் இதுவரை பலரிடமும் வீட்டுக்கல்வி முறையைப் பற்றி பேசியிருக்கிறேன். ஆனால் யாரும் இதுவரை சரியான தீர்வு கொடுக்கவில்லை. ஒருவேளை நான் அப்படிப்பட்ட நபர்களை சந்திக்கவில்லையோ என்னவோ ? சகோதரி செரம்பான் பானு அவர்கள் மட்டும் தான் இதைப் பற்றி தெளிவாக அறிந்து கொண்டு வீட்டுக்கல்வி முறையை நன்றாக செயல்படுத்தி வருகிறார். எனவே நமது கல்வித்திட்டத்திற்கு பானு வீட்டுக்கல்வி முறை என்று பெயர் வைத்திருக்கிறோம்.

படிக்காத மேதைகள்:
1. தமிழக முதல்வராக பல வருடங்கள் ஆட்சி புரிந்த கர்ம வீரர் காமராஜர் ஐயா அவர்கள்.
2. விஞ்ஞானத்திலும் மோட்டார் துறையிலும் பல அரிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்த ஜி.டி.நாயுடு ஐயா அவர்கள்.
3. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற தமிழ்சினிமாவின் மூலமாக இசைத்துறையில் அறிமுகமாகி பல்வேறு சாதனைகள் புரிந்த இசைஞானி இளையராஜா.
4. பல்வேறு சாதி, மதங்களை ஒன்று சேர்க்கப் பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்கள்.
5. உலகிற்கு பூஜ்ஜியத்தை அறிமுகம் செய்த கணிதமேதை இராமனுஜம்.
6. கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் என்னும் உலகமே வியக்கும் வண்ணம் கோவிலைக் கட்டிய இரண்டாவது சூரியவர்மன்.
7. எட்டு வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கிய இரவீந்திரநாத் தாகூர்.
No comments :
Post a Comment