முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு :
(டிசம்பர் 18-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை)
ஹாங்காங்கில் நடந்த சேலஞ்ச் கோப்பை ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா பல்லிக்கல், சாம்பியன் பட்டம் வென்றார். (டிசம்பர் 19)
ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய, ஆசிய விளையாட்டில் இரட்டைத் தங்கம் வென்ற அஸ்வினி உள்பட இந்திய தடகள வீரர்- வீராங்கனைகள் 7 பேருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. (டிசம்பர் 23)
சென்னை, திருச்சி ஆகிய நகரங்களில் ரூ. 100 கோடியில் சுற்றுலா பூங்காக்கள் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். (டிசம்பர் 18)
உணவுப் பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. (டிசம்பர் 18)
ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய, ஆசிய விளையாட்டில் இரட்டைத் தங்கம் வென்ற அஸ்வினி உள்பட இந்திய தடகள வீரர்- வீராங்கனைகள் 7 பேருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. (டிசம்பர் 23)
சென்னை, திருச்சி ஆகிய நகரங்களில் ரூ. 100 கோடியில் சுற்றுலா பூங்காக்கள் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். (டிசம்பர் 18)
உணவுப் பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. (டிசம்பர் 18)
அ.தி.மு.க.வில் இருந்து தனது நெருங்கிய தோழி சசிகலா நீக்கப்படுவதாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். சசிகலாவின் கணவர் நடராஜன் உள்பட அவரது உறவினர்கள் 13 பேரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். (டிசம்பர் 19)
ரஷியாவில் பகவத் கீதைக்குத் தடை விதிக்க நடக்கும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பாராளுமன்றத்தில் பெரும்பாலான கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் சபை ஒத்திவைக்கப்பட்டது. (டிசம்பர் 19)
வடகொரியா நாட்டின் தலைவர் கிம் ஜாங்-2 திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். (டிசம்பர் 19)
ஊழலுக்கு எதிரான புதிய லோக்பால் மசோதாவுக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. (டிசம்பர் 20)
மதுரையின் 600 ஆண்டு கால வரலாற்றுப் பின்னணியைக் கொண்டு எழுத்தாளர் சு. வெங்கடேசன் எழுதிய `காவல் கோட்டம்' என்ற நாவலுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. (டிசம்பர் 21)
ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை மந்திரி சுக்ராமுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையை டெல்லி ஐகோர்ட்டு உறுதி செய்தது. (டிசம்பர் 21)
ஊழலுக்கு எதிராக, பாராளுமன்றத்தில் தாக்கல் ஆன லோக்பால் சட்ட மசோதாவுக்கு அறிமுக நிலையிலேயே எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். (டிசம்பர் 22)
உணவுப் பாதுகாப்பு மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. (டிசம்பர் 22) -->
மும்பை குண்டுவெடிப்பு உள்ளிட்ட தீவிரவாதச் சம்பவங்கள் தொடர்பாக லஸ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த டேவிட் ஹெட்லி, ஹபீஸ் சயீது, லக்வி உள்ளிட்ட 9 பேர் மீது டெல்லி கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. (டிசம்பர் 24)
5 மாநில தேர்தல்
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய். குரேஷி டெல்லியில் அறிவித்தார்.
உத்தரப்பிரதேசத்துக்கு பிப்ரவரி 4-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை 7 கட்டங்களாகவும், பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலங்களுக்கு ஜனவரி 30-ம் தேதி ஒரே கட்டமாகவும், மணிப்பூர் மாநிலத்தில் ஜனவரி 28-ம் தேதியும், கோவா மாநிலத்தில் மார்ச் 3-ம் தேதியும் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களிலும் பதிவாகும் வாக்குகள் மார்ச் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். (டிசம்பர் 24)
வருகிற 12-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் (2012- 2017) மின்சாரத் துறையைச் சார்ந்த நிறுவனங்களில் 4 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என மத்திய மின்துறை அமைச்சகம் தெரிவித்தது. (டிசம்பர் 18)
நவம்பர் 2011 மாத முக்கிய நிகழ்வுகள்
Chicago personal injury attorney Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia. hair removal washington dc
மிகவும் பயனுள்ள தகவல்கள் குரூப்2 தேர்வு எழுதுவோருக்கு வாழ்த்துக்கள்
ReplyDelete