[IST]
தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 70 இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் இன்று அதிகாலை முதல் அதிரடி ரெய்டை மேற்கொண்டனர். 500க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக இந்த ரெய்டு நடந்து வருகிறது. அதாவது உதவி பல் மருத்துவர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு நடந்த தேர்வுகள் தொடர்பாக இந்த ரெய்டு நடந்து வருகிறது.
தேர்வு எழுதியவர்கள் மற்றும் ஏற்கனவே சோதனைக்குள்ளான டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோரின் உறவினர்கள் வீடுகளைக் குறி வைத்து இந்த ரெய்டு நடந்து வருகிறது.
சென்னையில் 10 இடங்கள், மதுரையில் 13, தஞ்சாவூர் 7, புதுக்கோட்டையில் 5, சேலம், வேலூர், சிவகங்கை தலா 4 இடங்களிலும் ரெய்டு நடந்து வருகிறது. காஞ்சிபுரம், விழுப்புரம், தேனி, சிவகங்கை, விழுப்புரம் உள்பட கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலுமே ரெய்டு நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலையிலேயே தொடங்கி விட்ட இந்த ரெய்டின்போது தேர்வு எழுதியவர்களிடம் பல்வேறு கேள்விளைக் கேட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களின் ஹால் டிக்கெட்கள் உள்ளிட்டவையும் பரிசோதிக்கப்படுகிறது.
சங்கரன்கோவிலில் தேர்வு எழுதிய ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சண்முகவேல் வீட்டில் இன்று காலை டிஎஸ்பி தங்கச்சாமி தலைமையில் 10 பேர் கொண்ட குழு சோதனை நடத்தியது. Chicago personal injury attorney Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments hair removal washington dc.
பிடிங்க சார்.. காசு கொடுத்து வேலைக்கு சேர்ந்த எல்லோரையும் பிடிச்சு உள்ள போடுங்க சார்....
ReplyDelete