16. நிலைமொழியின் இறுதியில் ய், ர், ழ் என்னும் எழுத்துகள் இருக்க, வருமொழி பெயர்ச்சொல்லாயின் இடையில் வல்லினம் மிகும். (உதாரணம்: நீர்க் கோலம், தாய்ப் பாசம், தமிழ்க் கட்டுரை)
17. பண்புத் தொகையில் வல்லினம் மிகும் (உதாரணம்: பெருமைக் குணம், அருமைத் தம்பி, நகைச்சுவை, வெள்ளைக்குதிரை)
18. இருபெயரொட்டு பண்புத் தொகையில் வல்லினம் மிகும். (உதாரணம்: மழைக்காலம், செவ்வாய்க் கிழமை, சாரைப் பாம்பு)
19. உவமைத் தொகையில் வல்லினம் மிகும். (உதாரணம்: மலர்க்கண் - மலர் போன்ற கண், சர்க்கரைத் தமிழ்)
20. போல என்னும் உவம உருபின் பின் வல்லினம் மிகும். (உதாரணம்: பாம்பு போலச் சீறினான்)
21. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் வல்லினம் மிகும்.
22. இகர ஈற்று வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும். (உதாரணம்: தேடிச் சென்றான், நாடிப் போனான்)
23. அகர ஈற்று வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும். (உதாரணம்: காணக் கூடாது, படிக்கப் பயப்படாதே.)
24. ஆய், போய் என்னும் வினையெச்சங்களின் பின் வல்லினம் மிகும். (உதாரணம்: நன்றாய்க் கூறினான், போய்ப் பார்)
25. ஆக, போக என்னும் வினையெச்சங்களின் பின் வல்லினம் மிகும். (உதாரணம்: நன்றாகக் கேள், போகக் கூடாது.)
26. செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும். (உதாரணம்: கேளாக் கொடு, காணாச் சிரித்தான்.)
27. முன்னர், பின்னர் என்னும் இடைச்சொற்களுக்குப் பின் வல்லினம் மிகும்.
28. சித்திரை முதலான மாதங்களுக்குப் பின் வல்லினம் மிகும்.
29. நிலைமொழி ஈற்றில் உயிர் எழுத்து வரின் வல்லினம் மிகும். ஓரெழுத்து ஒரு மொழிக்கும் இது பொருந்தும். (உதாரணம்: கல்விக் கடல், அறிவுச் சுடர், தீப் பற்றியது, கைப்பிடி)
30. இனி, என என்னும் சொற்களுக்குப் பின் வல்லினம் மிகும்.
31. எழுவாய்த் தொடரானாலும் நிலைமொழி ஓரெழுத்து ஒரு மொழியாயின் வருமொழி முன் வல்லினம் பெரும்பாலும் மிகும். (உதாரணம்: தீச்சிறியது, நாக்குழறியது)
32. எழுவாய்த் தொடரில் குறில் நெடிலுக்குப் பின் வல்லினம் மிகும். (உதாரணம்: இராப் பகல்)
33. எழுவாய்த் தொடரில் இரு நெடில்களில் பின் வல்லினம் மிகும். (தாராப் பறந்தது, ஆமாத் துரத்தினான்)
34. கடு, விள என்னும் சொற்களுக்குப் பின் வல்லினம் மிகும். (கடுச் சிறிது, விளத் தீது)
வணக்கம் ,
ReplyDeleteஉங்கள் பதிவுகள் மிகச்சிறப்பாக இருக்கின்றன.
நான் மயன்மார் நாட்டிலிருந்து எழுதுகிறேன்.
எங்கள் தமிழ்க்கல்வி வளர்ச்சி மையம் நடத்தி வருகின்ற இலக்கண வகுப்புகளுக்கு பயனுள்ளதாக இருக்கின்றது .
மிக்க நன்றி .
தொடர்ந்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன் .
வளர்க நம் அன்பும் நட்பும் .
வணக்கம் .
அன்புடன்,
சோலை.தியாகராஜன்
Yangon,Myanmar.
0095 943042105
Useful in formations
ReplyDeleteThanking you
very very useful study material for preparation for TNPSC examinations.
ReplyDeleteE. Nagenthiran
chennai