2012 ஜனவரி 1 முதல் 7 ஆம் தேதி வரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு :
* முல்லைப் பெரியாறு அணைக்கு நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்படாது என்று சுப்ரீம் கோர்ட்டு நியமித்த, முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான குழு அறிக்கை அளித்தது. (ஜனவரி 2)
* `தானே' புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் நிலநடுக்க பீதி ஏற்பட்டதால் பொதுமக்கள் விடிய விடிய வீதியில் கழித்தனர். இதற்கிடையில், குடிநீர் வசதி கேட்டு இம்மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. (ஜனவரி 2)
* சீனாவில் இந்தியத் தூதரக அதிகாரி எஸ். பாலச்சந்திரன் தாக்கப்பட்டது தொடர்பாக டெல்லியில் உள்ள சீனத் தூதரக அதிகாரியை நேரில் அழைத்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. (ஜனவரி 2)
* முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு ஐவர் குழு தெரிவித்தது. (ஜனவரி 3)
* கடலூர் மாவட்டத்தில் `தானே' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். நிவாரண உதவிகளையும் வழங்கினார். (ஜனவரி 4)
* தூத்துக்குடியில் அரசு பெண் டாக்டர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டனர். (ஜனவரி 4)

* முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்டி, அதன் பராமரிப்பைத் தமிழ்நாடு, கேரளா இணைந்து மேற்கொள்ளலாம் என்று கேரள மந்திரிசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (ஜனவரி 4)
* தூத்துக்குடியில் பெண் டாக்டர் கொலையைக் கண்டித்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். 2 ஆயிரம் தனியார் ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டன. (ஜனவரி 5)
* தொலைத் தொடர்புத் துறை ஊழலில் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி சுக்ராம் ஆம்புலன்சில் வந்து கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவர் உடனடியாகச் சிறையில் அடைக்கப்பட்டார். (ஜனவரி 7)
* சென்னையில் அகில இந்திய பெண் வக்கீல்கள் கூட்டமைப்பின் 2 நாள் தேசிய மாநாட்டை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பி. சதாசிவம் தொடங்கிவைத்தார். (ஜனவரி 7)
* 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ப. சிதம்பரத்துக்கு எதிரான ஆவணங்களை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்தார். (ஜனவரி 7)
* முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று கேரள முதல்-மந்திரி உம்மன்சாண்டி அறிவித்தார். (ஜனவரி 7)
* அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார வலிமையில் உலகில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என மத்திய திட்டக்குழுத் துணைத் தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா தெரிவித்தார். (ஜனவரி 7)
* மலேசியாவில் நடந்த சிலம்பப் போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர் மதன்ராஜை முதல்-அமைச்சர் ஜெயலலிதா பாராட்டினார். (ஜனவரி 3)
அடுத்த பக்கம் செல்ல -->
very useful to me thank u.
ReplyDeletevery useful to us...
ReplyDelete