உலக தமிழ் மாநாடுகள் நடைபெற்ற இடங்கள்


முதல் உலக தமிழ் மாநாடு - கோலாலம்பூர் (1966)

இரண்டாவது உலக தமிழ் மாநாடு சென்னை (1968) முதலமைச்சர் அண்ணாதுரை நடத்தினார்.

மூன்றாவது உலக தமிழ் மாநாடு - பாரிஸ் (1970) பேராசிரியர் ஜூன் பிலியோசா நடத்தினார்

நான்காவது உலக தமிழ் மாநாடு  - யாழ்ப்பாணம் (1974) பேராசிரியர் சு.வித்தியானந்தன் நடத்தினார்

ஐந்தாவது உலக தமிழ் மாநாடு- மதுரை (1981) முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நடத்தினார்

ஆறாவது உலக தமிழ் மாநாடு - கோலாலம்பூர் (1987)

ஏழாவது உலக தமிழ் மாநாடு - மொரிசியஸ் (1989)

எட்டாவது மாநாட்டுடன் தஞ்சாவூர் (1995) முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா நடத்தினார்

எட்டாவது மாநாடு இடம்பெற்று 14 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில் ஒன்பதாவது மாநாடு பெப்ரவரி 2010 இல் கோவையில் நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி சென்னை தலைமைச் செயலகத்தில் 2009 செப்டம்பர் 17 ஆம் நாள் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் அறிவித்தார். பின்னர் உலகத் தமிழராய்ச்சி மாநாட்டை நடத்தப் போதிய கால அவகாசம் இல்லை என்று கூறி உலகத் தமிழாராய்ச்சி மன்றம் ஒப்புதல் தர மறுத்து விட்டது. இதனால் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்று பெயர் மாற்றப்பட்ட ஒரு மாநாடு 2010 சூலையில் கோவையில் நடைபெற்றது.

அதிகாரபூர்வமான 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு  2015 சனவரி 29 முதல் பிப்ரவரி 1 வரை மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் நடைபெற்றது. கோலாலம்பூரில் உள்ள மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை ஆகியவை கூட்டாக ஒழுங்கு செய்திருந்தன. இம்மாநாட்டுக்கான கருப்பொருள் "உலகமயக் காலக்கட்டத்தில் தமிழாய்வுக்கு வளம் சேர்த்தல்" என்பதாகும்.


உலகத்தமிழ் மாநாடுகள் நடைபெற்ற நாடுகளின் பெயர்களை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள
Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma  Chicago personal injury attorney Chicago personal injury attorney

3 comments :

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற