# இந்திய அரசியலமைப்பு பகுதி-11 | மாநில அரசாங்கம்

மாநில ஆளுநர்

பெயரளவிலான நிர்வாகத்துறைத் தலைவராகத் திகழ்பவர் மாநில ஆளுநர் (Governor).
--> குடியரசுத்தலைவரால் ஆளுநர் நியமிக்கப்படுகிறார். குடியரசுத் தலைவர் ஆளுநரை நியமிக்கும் போது அந்த மாநிலத்தின் முதலமைச்சரைக் கலந்தாலோசிக்கலாம்.

பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். ஆனால் குடியரசுத்தலைவர் அவரை எப்போது வேண்டுமானாலும் பதவி நீக்கம் செய்யலாம்.

1956-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 7-வது அரசமைப்பு சட்ட திருத்தத்தின்படி குடியரசுத்தலைவர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஒரே ஆளுநரை நியமிக்கலாம்.


ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு இந்தியக்குடிமகனாகவும் 35 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். அரசாங்கப் பணியில் இருப்பவராகவோ, பாராளுமன்றம் அல்லது சட்டமன்றம் ஆகியவற்றின் உறுப்பினராகவோ, இருக்கக்கூடாது.

முதலமைச்சரை ஆளுநர் நியமிக்கிறார். முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் பிற அமைச்சர்களையும்  நியமிக்கிறார். மாநிலத் தலைமை அரசு வழக்கறிஞரும் மற்றும் பல முக்கிய அதிகாரிகளும் ஆளுநரால் நியமிக்கப்படுகின்றார்கள். மாநில அரசாங்கத்தின் எல்லா நிர்வாகச் செயல்களும் ஆளுநரின் பெயரில் செய்யப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலும் அவர் சட்டமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் துவக்கவுரை நிகழ்த்துகிறார். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் எல்லா மசோதாக்களும் அவரது ஒப்புதல் பெற்ற பின்னரே சட்டமாக்க முடியும்.

மாநிலச்சட்டமன்றத்தைக் கூட்டவும், கூட்டத்தொடரை ஒத்திவைக்கவும் ஆளுநர் அதிகாரம் பெற்றுள்ளார்.
குற்றமன்னிப்பு, தண்டனையைக் குறைத்தல் போன்ற அதிகாரங்கள் ஆளுநருக்கு உண்டு.

மாநில முதலமைச்சர்

மாநில அரசாங்கத்தின் உண்மையான நிர்வாகத்துறைத் தலைவராகவும், மாநில அமைச்சரவையின் தலைவராகவும்  திகழ்பவர் மாநில முதலமைச்சர் (Chief Minister).

முதலமைச்சரை ஆளுநர் நியமனம் செய்கிறார். முதலமைச்சரின் ஆலோசனைப்படி பிற அமைச்சர்களை ஆளுநர் நியமிக்கிறார்.
முதலமைச்சராக நியமிக்கப்படுபவர், மாநிலச்சட்டமன்றத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். நியமிக்கப்படும்போது சட்டமன்ற உறுப்பினராக இல்லையெனில், நியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும்.
அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் அவர்களுக்கான துறைகளையும் முதலமைச்சரே முடிவு செய்கிறார்.
--> மாநில சட்டமன்றம்

மாநில சட்டமன்றம் ஈரவை அல்லது ஓரவைக் கொண்டது. ஈரவை சட்டமன்றத்தில் சட்ட மன்றமும் (கீழவை), சட்ட மேலவையும் இருக்கும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை சட்டமன்ற கீழவையும், மறைமுக தேர்ந்தெடுப்பு மற்றும் நியமன உறுப்பினர்களை மேலவையும் கொண்டிருக்கும்.

மாநில சட்டமன்றத்தின் பெரும்பான்மை பெற்றிருப்பவரே முதலமைச்சராக நியமிக்கப்படுகிறார்.

இந்தியாவில் 6 மாநிலங்களில் சட்டமேலவை உள்ளன. பீகார், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மஹாராஷ்டிரா.
Part | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
Indian Political Science Question Answer pdf for tnpsc exam

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற