அ.க.செட்டியார் (நவம்பர் 3, 1911 - செப்டம்பர் 10, 1983) தமிழில் பயண இலக்கியம் என்னும் புதிய இலக்கிய வகைக்கு முன்னோடியாக அமைந்தவர். இதழாசிரியர், எழுத்தாளர். முதன் முதலில் மகாத்மா காந்தி பற்றி வரலாற்று ஆவணப் படத்தை 1940 இல் தமிழில் எடுத்தவர்.
திருவண்ணாமலை அருகிலுள்ள கோட்டையூரில் பிறந்த இவரின் இயற்பெயர் கருப்பன். தனது இளமைக்கல்வியைத் திருவண்ணாமலையில் உள்ள நடுநிலைப் பள்ளியில் பயின்றவர், மேற்படிப்பு எதையும் படிக்கவில்லை. பின்னர் 1935 இல் ஜப்பானில் இம்பீரியல் ஆர்ட்ஸ் கலைக்கழகத்தில் புகைப்படத்துறையைப் பயின்றார். சிறப்புப் பயிற்சிக்காக 1937இல் நியூயோர்க் சென்று அங்கு Photographical Institute இல் ஓராண்டு பயின்று டிப்ளோமா பட்டம் பெற்றார்.
பயண இலக்கியத்தின் முன்னோடி என மதிக்கப்படும் செட்டியார் பல பயண நூல்களைப் படைத்ததுடன் மற்றவர்களது நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டும் உள்ளார். 1850 - 1925 காலப்பகுதியில் எழுதப்பட்ட பலரின் 140 கட்டுரைகளைத் தொகுத்து, பயணக் கட்டுரைகள் என்ற பெயரில் ஆறு நூல்களாக வெளியிட்டார். தாம் வெளிநாட்டுப்பயணம் மேற்கொண்டிருந்த போது பல இதழ்களுக்கு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பை உலகம் சுற்றும் தமிழன் என்ற பயண நூலாகத் தமிழில் எழுதி 1940 இல் வெளியிட்டார். இவர் எழுதிய பின்வரும் பயண நூல்கள் மிகச் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.
No comments :
Post a Comment