VAO Exam Study Materials & Model Question Papers Pdf Free download
இப்பதிவேடு நில உட்பிரிவையும், அவற்றில் ஏற்படும் மாறுதல்களையும் காண்பிக்கும் நிலையான பதிவேடு ஆகும்.

நிலவரி திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு, பின்னர் பராமரிப்புக்காக ஒவ்வொரு வருவாய்க் கிராமத்திற்கும் தனித்தனியாக ‘அ’ பதிவேடு முதலில் கையால் எழுதப்பட்ட பிரதி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது.பின்னர் அந்தப் பிரதி ஒன்று அச்சிடப்பட்டு அனைத்து கிராமங்களுக்கும் கெட்டி அட்டை போட்ட பதிவேடுகளாக வழங்கப்பட்டுள்ளது.
இப்பதிவேட்டில் முதல் பகுதியாக வருவாய்க் கிராமத்தின் வரலாற்றுக் குறிப்பு (Descriptive Memoir) வழங்கப்பட்டுள்ளது.
இந்த வரலாற்றுக் குறிப்பில் முதல்பகுதியில் வருவாய்க் கிராமத்தின் வருவாய்க்குண்டான அனைத்து விவரங்களும் அடங்கும்.
நிலையான ‘அ’ பதிவேட்டில் இடம்பெற்றிருக்கும் விவரங்கள்
- கிராமத்தின் பெயரும், உரிமை முறையும்.
- அமைவிடம்
- பரப்பும் எல்லையும்
- வெவ்வேறு வகைப்பாட்டின் பரப்பு
- எல்லை வரையறுத்தல்
- மக்கள்தொகை
- நில உடைமைகள்
- புன்செய் தொகுதிகள்
- பாசன விவரங்கள்.
- குடி மரமாத்து
- கிணறுகள்
- வகைப்பாடும், வரிவிதிப்பும்
- மீன்வளம்
- பொதுக்குறிப்பு
‘அ’ பதிவேடு நடைமுறையில் கீழ்க்கண்ட 11 கலங்களில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இப்பதிவேட்டில் நிலையாக மாற்றம் செய்யும் புல உட்பிரிவு மாறுதல்கள், நில எடுப்பு, நில ஒப்படைப்பு, நில மாற்றம் சம்பந்தப்பட்ட மாறுதல்கள் ஏற்படும் போது வட்டாட்சியர் கிராம நிர்வாக அலுவலரிடம் உள்ள பிரதியிலும் பதிய வேண்டும்.
மேற்கண்ட மாறுதல்களை ‘அ’ பதிவேட்டில் பதியும் போது அம்மாறுதலுக்கு உண்டான ஆணை எண் மற்றும் யாரால் வழங்கப்பட்டது அல்லது கீழ்நிலையில் உள்ள வருவாய் ஆய்வாளர் நிலைக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இதற்கு சாட்சியாய் ‘அ’ பதிவேட்டில் – சுருக்கொப்பம் செய்ய வேண்டும்.
எக்காரணத்தை கொண்டும் கிராம நிர்வாக அலுவலர் இப்பதிவேட்டில் மாற்றம் செய்யக்கூடாது.
தற்போது விவசாய நிலங்களுக்கு ஒரு பதிவேடும், கிராம நத்தத்திற்கு ஒரு பதிவேடும் என ஒரு கிராமத்திற்கு இரண்டு ‘அ’ பதிவேடுகள் பராமரிக்கப்படுகிறது.
நகர நிலை அளவைக் கணக்கெடுக்கப்பட்ட நகராட்சியில் முழுவதும் சேர்த்துக் கொள்ளப்பட்ட கிராமங்களின் பகுதி வார்டு வாரியாகவும், நில அளவை வாரியாகவும் நிலை பதிவேடு ‘அ’- வில் எழுதப்பட வேண்டும்.
‘அ’ பதிவேட்டில் ஒவ்வொரு நகர நில அளவை எண், அதனுடைய உரிமை முறை, பரப்பளவு ஆகிய விவரங்கள் எழுதப்பட வேண்டும்.
‘அ’ பதிவேட்டில் நகர்ப் பகுதியாக இருந்தால் நகர்ப் பகுதி என்றும், கிராமப் பகுதியாக இருந்தால் கிராமப் பகுதி என்று குறிப்பிட வேண்டும்.
தமிழ்நாடு அரசினால் இராணுவப் பகுதிக்கு ஒதுக்கப்பட்ட இடமாக இருந்தால் அத்தகைய நிலஅளவை எண் எதிரே குறிப்பு கலத்தில் “இராணுவ நிலம்” என்று குறிப்பிட வேண்டும் இதே போன்று இரயில்வேக்கு சொந்தமான நிலங்கள், ஊராட்சிக்கு ஒப்படைக்கப்பட்ட நிலங்கள் குறிப்புரைக் கலத்தில் எழுத வேண்டும்.
ஜமாபந்தியின் போது வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் ‘அ’ பதிவேட்டுடன் கிராமத்தில் பராமரிக்கப்படும் பதிவேட்டினை ஒப்பிட்டுப் பார்த்து அதற்குண்டான சான்று வட்டாட்சியரால் வழங்கப்பட வேண்டும். இதனை ஜமாபந்தி அலுவலர் தணிக்கை மேற்கொள்ள வேண்டும்.
’A’ பதிவேட்டின் உள்ளடக்கம்
இது ஒவ்வொரு வகையின் கீழ் உள்ள நிலத்திப் பரப்பையும், தீர்வை வீதத்தையும் காட்டுகிற ‘A’ பதிவேட்டின் தொகுப்பாகும்.
அரசு நிலம், கைப்பற்றில் உள்ளவை, கைப்பற்றில் இல்லாதவை என்பனவற்றின்கீழ் தனித்தனியே காட்டப்பட வேண்டும். நிலவரித் திட்டத்திற்குப் பின்னர் ஒவ்வொரு பசலியிலும் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இதில் ஆண்டுதோறும் குறிப்பிட வேண்டும். இப்பதிவேட்டினை ஜமாபந்தியின் போது சரிபார்க்க வேண்டும். இந்தப் பதிவேட்டில் உள்ள மொத்த விஸ்தீரணம், தீர்வை ஆகியவை கிராமக் கணக்கு 2-க்கு ஒப்பிட்டிருக்க வேண்டும்.
- புல எண், உட்பிரிவு எண்.
- பழைய புல எண், உட்பிரிவு எண்
- ரயத்துவாரி (ர) அல்லது (இ) இனாம்
- வகைப்பாடு (நன்செய்/புன்செய்)
- இருபோக நன்செய் எனில் மொத்தத் தீர்வை வீதம்.
- மண் வளமும், ரகமும்
- தரம்
- ஹெக்டேர் ஒன்றுக்கு தீர்வை வீதம்
- பரப்பளவு
- பட்டா எண் மற்றும் பதிவுபெற்ற நில உடைமையாளரின் பெயர்.
- குறிப்பு
'அ’ பதிவேடு இரட்டைப்பிரதிகளாக வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒன்றும், கிராம நிர்வாக அலுவலரிடம் ஒன்றும் பராமரிக்கப்படும்.
இப்பதிவேட்டில் நிலையாக மாற்றம் செய்யும் புல உட்பிரிவு மாறுதல்கள், நில எடுப்பு, நில ஒப்படைப்பு, நில மாற்றம் சம்பந்தப்பட்ட மாறுதல்கள் ஏற்படும் போது வட்டாட்சியர் கிராம நிர்வாக அலுவலரிடம் உள்ள பிரதியிலும் பதிய வேண்டும்.
மேற்கண்ட மாறுதல்களை ‘அ’ பதிவேட்டில் பதியும் போது அம்மாறுதலுக்கு உண்டான ஆணை எண் மற்றும் யாரால் வழங்கப்பட்டது அல்லது கீழ்நிலையில் உள்ள வருவாய் ஆய்வாளர் நிலைக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இதற்கு சாட்சியாய் ‘அ’ பதிவேட்டில் – சுருக்கொப்பம் செய்ய வேண்டும்.
எக்காரணத்தை கொண்டும் கிராம நிர்வாக அலுவலர் இப்பதிவேட்டில் மாற்றம் செய்யக்கூடாது.
தற்போது விவசாய நிலங்களுக்கு ஒரு பதிவேடும், கிராம நத்தத்திற்கு ஒரு பதிவேடும் என ஒரு கிராமத்திற்கு இரண்டு ‘அ’ பதிவேடுகள் பராமரிக்கப்படுகிறது.
நகர நிலை அளவைக் கணக்கெடுக்கப்பட்ட நகராட்சியில் முழுவதும் சேர்த்துக் கொள்ளப்பட்ட கிராமங்களின் பகுதி வார்டு வாரியாகவும், நில அளவை வாரியாகவும் நிலை பதிவேடு ‘அ’- வில் எழுதப்பட வேண்டும்.
‘அ’ பதிவேட்டில் ஒவ்வொரு நகர நில அளவை எண், அதனுடைய உரிமை முறை, பரப்பளவு ஆகிய விவரங்கள் எழுதப்பட வேண்டும்.
‘அ’ பதிவேட்டில் நகர்ப் பகுதியாக இருந்தால் நகர்ப் பகுதி என்றும், கிராமப் பகுதியாக இருந்தால் கிராமப் பகுதி என்று குறிப்பிட வேண்டும்.
தமிழ்நாடு அரசினால் இராணுவப் பகுதிக்கு ஒதுக்கப்பட்ட இடமாக இருந்தால் அத்தகைய நிலஅளவை எண் எதிரே குறிப்பு கலத்தில் “இராணுவ நிலம்” என்று குறிப்பிட வேண்டும் இதே போன்று இரயில்வேக்கு சொந்தமான நிலங்கள், ஊராட்சிக்கு ஒப்படைக்கப்பட்ட நிலங்கள் குறிப்புரைக் கலத்தில் எழுத வேண்டும்.
ஜமாபந்தியின் போது வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் ‘அ’ பதிவேட்டுடன் கிராமத்தில் பராமரிக்கப்படும் பதிவேட்டினை ஒப்பிட்டுப் பார்த்து அதற்குண்டான சான்று வட்டாட்சியரால் வழங்கப்பட வேண்டும். இதனை ஜமாபந்தி அலுவலர் தணிக்கை மேற்கொள்ள வேண்டும்.
’A’ பதிவேட்டின் உள்ளடக்கம்
இது ஒவ்வொரு வகையின் கீழ் உள்ள நிலத்திப் பரப்பையும், தீர்வை வீதத்தையும் காட்டுகிற ‘A’ பதிவேட்டின் தொகுப்பாகும்.
அரசு நிலம், கைப்பற்றில் உள்ளவை, கைப்பற்றில் இல்லாதவை என்பனவற்றின்கீழ் தனித்தனியே காட்டப்பட வேண்டும். நிலவரித் திட்டத்திற்குப் பின்னர் ஒவ்வொரு பசலியிலும் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இதில் ஆண்டுதோறும் குறிப்பிட வேண்டும். இப்பதிவேட்டினை ஜமாபந்தியின் போது சரிபார்க்க வேண்டும். இந்தப் பதிவேட்டில் உள்ள மொத்த விஸ்தீரணம், தீர்வை ஆகியவை கிராமக் கணக்கு 2-க்கு ஒப்பிட்டிருக்க வேண்டும்.
- VAO Exam 2017 New syllabus in Tamil
- VAO Exam 2014, 2016 Original Question Papers (GK-GT-GE)
- Basics of Village Administration Study Materials in Tamil
- கிராம நிர்வாக நடைமுறைகள் மாதிரி வினாத்தாள்கள்
- TNPSC VAO Exam - Basics of village administration ayakudi Coaching Centre Model Question Paper
- VAO Exam - Basics of Village Administration Question Answers
- VAO Exam Study Material (18 Pages pdf) Prepared by Mr. T.Ramakrishnan
- கிராம நிர்வாக அலுவலர் பணி விதிமுறைகள்
- கிராம நிர்வாக நடைமுறைகள் - வரி விலக்கும் வரிச்சலுகைகயும்
- VAO Exam 2015 - VAO Exam 2014 Basics of village administration 25 Question with Answer key
- நிலையான ‘அ’ பதிவேடு
No comments :
Post a Comment