# தமிழ் இலக்கிய வரலாற்று வினாவிடைகள்

1.    குட்டிக் கந்தபுராணம் எனப்படுவது?
கந்தர் கலிவெண்பா

2.    குட்டித் தொல்காப்பியம் எனப்படுவது?
இலக்கண விளக்கம்

3.    குட்டித் திருவாசகம் எனப்படுவது?
திருக்கருவைப் பதிற்றுப் பத்தாந்தாதி

3.    சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை எவ்வளவு? 96


4.    ஓரடியில் நீதியை உரைக்கும் நூல்கள் எவை?
ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வெற்றிவேற்கை, முதுமொழிக்காஞ்சி

5.    நறுந்தொகை என அழைக்கப்படும் நூல் எது?
வெற்றிவேற்கை

6.    எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் - இவ்வரி இடம் பெறும் நூல் எது?
வெற்றிவேற்கை

7.    வெற்றிவேற்கையின் ஆசிரியர் யார்? வெற்றிவேற்கையை எவ்வாறு அவர் குறிப்பிடுகிறார்?
ஆதிவீரராம பாண்டியர்-நறுந்தொகை என குறிப்பிடுகிறார்

8.    வெற்றிவேற்கையில் இடம் பெறும் சிறப்பான வரிகள்கள் சில:
    “கல்விக்கு அழகு கசடற மொழிதல்”
    “செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்”
    “அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்”
    “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே”
    “நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை”
    “கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டில் கடும்புலி வாழும் காடு நன்றே”
    “வழியே ஏகுக வழியே மீளுக”

9.    உலகநீதியின் ஆசிரியர் யார்?
உலகநாதர்

10.    உலகநீதியில் இடம் பெறும் சிறப்பான வரிகள்கள் சில:
    ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
    மனம் போன போக்கெல்லாம் போக வேண்டாம்
    மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
    கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்
    மூத்தோர் சொல் வார்த்தைதனை மறக்க வேண்டாம்

11.    நீதிநெறி விளக்கத்தின் ஆசிரியர் யார்?
    குமரகுருபரர்

12.    சிறுவயதிலேயே இறையருள் பெற்ற அருட்கவி யார்?
    குமரகுருபரர்

13.    காந்தியடிகளுக்கு மிகவும் பிடித்தமான தமிழ்ப்பாட்டு எது?
    நீதி நெறிவிளக்கத்தில் இடம் பெறும் “நீரில் குமிழி இளமை நிறைசெல்வம்.....” எனத்தொடங்கும்  பாடல். தமிழகம் வந்த போது காந்தியடிகள் இப்பாடலில் இடம் பெறும்

    “நீரில் எழுத்தாகும் யாக்கை” வரியை தன் கைப்பட எழுதி மோ.க.காந்தி என தமிழில் தன் கையொப்பம் இட்டு கொடுத்துள்ளார்.

14.    கற்பனைக் களஞ்சியம் எனப் போற்றப்படுபவர் யார்?
    சிவப்பிரகாசர்

15.    நன்னெறியின் ஆசிரியர் யார்?
    கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாசர்

16.    அறநெறிச்சாரத்தின் ஆசிரியர் யார்?
    முனைப்பாடியார் (சமணர்)

17.    அருட்கலச்செப்பு எனும் நூலைப் பின்பற்றி எழுதப்பட்ட நூல் எது?
    அறநெறிச்சாரம்

18.    “ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்” எனக்கூறியவர் யார்?
    நல்வழிப்பாடலில் ஒளவையார் கூறுகிறார்

19.    நட்டான் என்பதன் பொருள் என்ன?
    நண்பன்

20.    ஒளவையார் எழுதிய நூல்களில் குறிப்பிடத்தக்க நூல்கள் எவை?
    நீதிநூல்கள்: ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை (வாக்குண்டாம்) நல்வழி, கல்வியொழுக்கம்
    பக்தி  நூல் : விநாயகர் அகவல் 
    தத்துவ நூல் : ஒளவைக்குறள்

read more question answers

8 பக்கங்கள் கொண்ட தமிழ் இலக்கிய வரலாற்று வினாவிடை தொகுப்பினை இலவசமாக மின்னஞ்சலில் பெற இங்கு உங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும். பதிவு செய்த பின்னர் உங்கள்  மின்னஞ்சலுக்கு  சென்று Activation Link-ஐ கிளிக் செய்து உறுதிபடுத்திக்கொள்ளவும்.   
(இது மிக அவசியம்)
TET, TNPSC, Govt. Job in tamilnadu, jab in usa, Job for UAE, udomains yahoo domain name yahoo dc hair laser removal washington law lemon wisconsin  hair removal washington dc domain registration yahoo benchmark lending domain yahoo yahoo web hosting hair laser removal virginia peritoneal mesothelioma ca lemon law best buy gift card adverse credit remortgage mesothelioma information,

3 comments :

  1. மிக்க நன்றி... நண்பர்களிடம் பகிர்கிறேன்...

    ReplyDelete
  2. YOUR SERVICE IS VERY VERY WONDERFUL.JAISANKAR.I IKE YOUR WEBSITE.THANKYOU.

    ReplyDelete

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற