அடுக்குத்தொடர்
:
பிரித்தாலும் பொருள்தரும் இரட்டைச் சொற்களை அடுக்குத்
தொடர் என்பர்.
செய்யுளிலும் வழக்கிலும்
அசைநிலைக்கும், விரைவு வெகுளி (ஆத்திரம்) உவகை அச்சம் அவலம் ஆகிய பொருள் நிலைகளை உணர்த்தும்
வண்ணமும், யாப்பிலக்கணத்தின்படி அல்லது பொதுவாக இசையை நிறைவு செய்யும் பொருட்டும்
ஒரு சொல் இரண்டு, மூன்று, அல்லது நான்கு முறை அடுக்கி வருவது அடுக்குத்தொடர் எனப்படும்.
“அசைநிலை பொருள்நிலை இசைநிறைக் கொருசொல்
இரண்டு
மூன்று நான் கெல்லை முறை அடுக்கும்”
கரணியம்
|
எடுத்துக்காட்டுகள்
|
அசைநிலை
|
அன்றே
அன்றே
|
விரைவுப்பொருள்
|
போ
போ போ
|
வெகுளி
|
விடு
விடு விடு
|
உவகை
|
வாருங்கள்
வாருங்கள்
|
அச்சம்
|
தீ
தீ தீ
|
அவலம்
|
வீழ்ந்தேன்
வீழ்ந்தேன் வீழ்ந்தேன்
|
இசைநிறை
|
வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!
|
இரட்டைக்கிளவி
இரட்டைக்கிளவி என்பது இரட்டைச் சொற்களாய்ச் சேர்ந்து ஒரு தன்மைப் பட்டு
நின்று வினைக்கு அடைமொழியாய்க் குறிப்புப் பொருள் உணர்த்தி வருவதாகும். இது
இரட்டைச் சொல்லாகவே வரும். பிரித்தால் பொருள் தராது.
எ.கா:
1. நீர் சலசல என ஓடிற்று.
- மரம் மடமட என முறிந்தது.
இரட்டைக்கிளவி
|
அடுக்குத்தொடர்
|
சொற்கள் ஒன்றுபட்டு
நிற்கும்
|
சொற்கள் தனித்தனியே
நிற்கும்.
|
இரண்டுமுறை மட்டுமே
அடுக்கி வரும்
|
இரண்டு, மூன்று,
நான்கு முறை அடுக்கி வரும்.
|
பிரித்தால் பொருள்
தராது.
|
பிரித்தால் தளித்தனியே
நின்று பொருள் தரும்
|
ஒலிக்குறிப்பு, நிறம்
முதலான காரணங்களில் இரண்டு இரண்டாக வரும்.
|
அச்சம், விரைவு, அவலம, உவகை,வெகுளி
|
சான்று:
வ.எண்
|
இரட்டைக்கிளவி
|
அடுக்குத்தொடர்
|
1
|
சலசல எனத் தண்ணீர்
ஓடிற்று
|
நன்று நன்று
|
2
|
படபட எனப்பொரிந்தாள்
|
வந்தேன் வந்தேன்
|
3
|
கலகல எனச் சிரித்தாள்
|
ஓடு ஓடு ஓடு
(விரைவு)
|
4
|
மடமட என மரம்
சாய்ந்தது
|
உதை உதை (வெகுளி)
|
5
|
குறுகுறு என
நடந்தாள்
|
பிடி பிடி பிடி
(வெகுளி)
|
6
|
வளவள எனப் பேசினான்
|
வருக வருக (உவகை)
|
7
|
தகதக என நெருப்பு
|
வாழ்க வாழ்க
வாழ்க (உவகை)
|
8
|
வழவழ
|
பாம்பு பாம்பு
(அச்சம்)
|
9
|
சுறுசுறு
|
வண்டி வண்டி
வண்டி (அச்சம்)
|
10
|
கிடுகிடு
|
அந்தோ அந்தோ
(அவலம்)
|
11
|
துருதுரு
|
குத்து குத்து
(வெகுளி)
போ போ போ (விரைவு) |
அட்டவணைகள் பக்கத்தில் உள்ள Widget-ஆல் மறைக்கப்படுகிறது... சரி செய்தால் நன்று...
ReplyDeleteநன்றி...
உங்களுடைய tnpsc தகவழுக்கு மிக்க நன்றி
ReplyDelete