சமீப கால நிகழ்வுகள் (2012)

* சென்னை சேப்பாக்கத்தில் அரசு அலுவலகங்கள் உள்ள எழிலகம் கட்டிடத்தில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. இதில், மேற்கூரை இடிந்து விழுந்ததில் தீயணைப்பு வீரர் கே. அன்பழகன் உடல் நசுங்கி இறந்தார்.

* திருவள்ளுவர் திருநாளையொட்டி தமிழ் அறிஞர்கள் 9 பேருக்குத் தமிழக அரசின் சிறப்பு விருதுகளை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வழங்கினார். (ஜனவரி 16)


* பிறந்த தேதி பிரச்சினையில், ராணுவ தலைமைத் தளபதி வி.கே. சிங், மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். (ஜனவரி 16)

* இத்தாலி அருகே கடலில் மூழ்கிய சொகுசுக் கப்பலில் இருந்து 202 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். (ஜனவரி 16)
-->

* வயது பிரச்சினையில் ராணுவத் தளபதி வழக்குத் தொடர்ந்தது குறித்து பிரதமர் மன்மோகன்சிங்கும், ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணியும் ஆலோசனை நடத்தினார்கள். சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சார்பில் `கேவியட்' மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. (ஜனவரி 17)

* தமிழகத்தின் முதல் பெண் நாதசுவரக் கலைஞர் எம்.எஸ். பொன்னுத்தாய் (85) மரணம் அடைந்தார். (ஜனவரி 17)

* குளத்தில் மூழ்கித் தத்தளித்த 3 சிறுமிகளை உயிருடன் மீட்ட தர்ம புரி மாவட்ட மாணவர் பரமேஸ்வரன் தேசிய வீரதீரச் செயல் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டார். (ஜனவரி 19)

* ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கியத் திருவிழாவுக்கு வருவதாக இருந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, மும்பை தாதாக்களின் கொலை சதித் திட்டத்தின் எதிரொலியாகத் தனது வருகையை ரத்து செய்தார். (ஜனவரி 20) -->

* தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவராக, ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. ஆர். நட்ராஜ் நியமிக்கப்பட்டார். (ஜனவரி 20)

No comments :

Post a Comment

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற