இந்த அவையின் அதிக பட்ச உறுப்பினர்கள் எண்ணிக்கை 250 ஆகும். 238 பேர் மாநிலங்கள் மற்றும் மாநிலப் பிரதேசங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இலக்கியம், விஞ்ஞானம், கலை மற்றும் சமூக அறிவியல் போன்றவற்றில் சிறந்த 12 பேர் ஜனாதிபதியால் நியாமனம் செய்யப்படுகின்றனர். ராஜ்யசபா உறுப்பினர்கள் மாநில சட்ட மன்ற உறுப்பினர்களால் மக்கள் தொகை அடிப்படையில் விகிதாச்சார முறைப்படி ஒற்றை மாற்று வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.
ராஜ்ய சபா ஒரு நிரந்தர அமைப்பு. மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவி விலகுகின்றனர். முப்பது வயதுக்கு குறையாத இந்திய பிரஜைகள் எவரும் ராஜ்ய சபா உறுப்பினராகலாம். தற்போதைய ராஜ்ய சபாவின் எண்ணிக்கை 244 இதில் 232 உறுப்பினர்கள் மாநில சட்ட சபைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்.
No comments :
Post a Comment